இந்தியாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் அணு சக்தி..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசு நாடுகளுடன் போட்டி போட்டும் இந்தியாவிற்கு அணு சக்தி ஒரு புதிய நம்பிக்கையாக உருவெடுத்துள்ளது.

 

சீனா தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியை இந்திய அரசு லாபகமாகப் பயன்படுத்தி மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உலக நாடுகளில் உள்ள நிறுவனங்களை இந்தியாவிற்கு ஈர்க்கும் வேலையைச் செய்து வருகிறது.

மத்திய அரசின் இந்த மாஸ்டர் பிளானுக்குத் தேவையான அன்னிய முதலீட்டில் தளர்வுகள், தொழிற்சாலையை அமைக்க இடம், சாலை வசதி, மேம்படுத்தப்பட உள்கட்டமைப்பு போன்ற சகல வசதிகளும் செய்து வருகிறது.

இவை அனைத்திற்கும் முக்கியத் தேவையாக இருக்கும் எரிபொருள் மற்றும் மின்சாரத் தேவையைப் பூர்த்திச் செய்ய இந்தியா அணு சக்தியை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் அணு சக்தியை கையாலும் முக்கிய நாடுகளில் இந்தியா இடம்பெற உள்ளது.

எரிபொருள்

எரிபொருள்

எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் தங்களின் உற்பத்தி அளவுகளைக் குறைக்க முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறியது இந்தியாவிற்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

உற்பத்தி அளவுகள் குறையாத பட்சத்தில் அடுத்த ஒரு வருடத்திற்குக் கச்சா எண்ணெய் மேலும் 50 சதவீதம் குறையும் எனச் சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனால் எரிபொருள் இறக்குமதி செய்வதில் நிதி சார்ந்த பிரச்சனைகள் எதுவும் இருக்காது. இதுவே இந்தியாவின் வளர்ச்சிக்கு முதல் படி..

சரி மின்சாரத் தேவையை எப்படிப் பூர்த்திச் செய்வது..??

மின்சாரம்

மின்சாரம்

இந்தியாவில் அணு சக்தி மூலம் தற்போது 5,700 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் 2024ஆம் ஆண்டில் இதன் அளவு 3 மடங்கு உயர்ந்து 14.500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2032ஆம் ஆண்டுக்குள் அணு சக்தி மூலம் சுமார் 63,000 மெகாவாட் மின்சாரத்தைத் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இலக்கிற்கும் நடைமுறைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ள நிலையில் இதனை எப்படிச் சாத்தியப்படுத்தப்போகிறது மத்திய அரசு..?

பிரதமர்களின் தொடர் போராட்டம்..
 

பிரதமர்களின் தொடர் போராட்டம்..

மன்மோகன் சிங், நரேந்திர மோடி போல நாட்டின் பல பிரதமர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு அணு சக்தியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கடந்த 15 வருடமாகப் போராடி அணு சக்தி பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளிடம் இருந்து யூரேனியம் போன்ற முக்கியமான அணு சக்தி பொருட்களைப் பெற ஒப்புதல் பெற்றது.

இந்த அனுமதி 2008ஆம் ஆண்டு அன்றே பெற்ற நிலையில் இன்று வரை இதில்எவ்விதமான முன்னேற்றமும் இல்லை என்பதே இதன் உண்மையான நிலை.

உலக நாடுகள் ஒத்துழைப்பு..

உலக நாடுகள் ஒத்துழைப்பு..

உலகில் அணு சக்தியில் ஆதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இந்தியாவின் பல கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின் உதவிக்கரம் நீட்டுவதாக அறிவித்துள்ளது.

இத்தகைய அனுமதிக்குச் சீனா மறுப்பு தெரிவித்தும் இந்தியாவில் அணு ஆயுதங்கள் பரவல் தடை (NPT)ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் அணு சக்தி உற்பத்தி தேவையான பொருட்கள் மற்றும் உலோகங்களை அளிக்க ஒப்புக்கொண்டது.

இந்தியா தாறுமாறு..

இந்தியா தாறுமாறு..

உலக நாடுகளில் அணு சக்தியை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா மட்டும் தான் NPT ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் பயன்படுத்தி வருகிறது. இதுவே இந்தியாவிற்கு வெற்றி தான்.

7 நாடுகள்

7 நாடுகள்

இந்தியா அணு சக்தியை பாதுகாப்பான முறையிலும், அமைதியான முறையிலும் பயன்படுத்த அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் மட்டும் அல்லாமல் தென் கொரியா, நமீபியா, கனடா, ஆஸ்திரேலியா, கஜகஸ்தான் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் மிகப்பெரிய அளவில் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஜப்பான்

ஜப்பான்

அணு சக்தியை மிகப்பெரிய அளவில் பயன்படுத்தி வருகிறது ஜப்பான். இந்நிலையில் கடந்த வாரம் இந்தியா வந்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்தியாவுடன் அணு சக்தி ஆராய்ச்சி மற்றும் சோதனையில் பங்குகொள்ள விருப்பம் தெரிவித்து இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

2008ஆம் ஆண்டு முதல் இவை பேச்சுவழக்கில் மட்டுமே இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானுக்கு லாபம் தான்..

ஜப்பானுக்கு லாபம் தான்..

சில வருடங்களுக்கு முன் நிலநடுக்கத்தால் ஜப்பானில் உள்ள ஒரு முக்கிய அணுஉலையில் ஏற்பட்ட சேதம் இந்நாட்டை மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் புதிய அணு உலையை அமைக்கும் பணியை முழுமையாக நிறுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவுடன் கைகோர்ந்துள்ள ஜப்பான் தனது அணு சக்தி துறைக்குப் புதிய சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது.

வர்த்தகம்

வர்த்தகம்

ஜப்பான் நாட்டில் இருந்து அணு உலை மற்றும் அணு சக்தி மின்சாரத் தயாரிப்பதற்கான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை உலக நாடுகளில் மிகப்பெரிய அளவில் வர்த்தகம் செய்து வருகிறது.

இத்துறையில் ஜப்பான் நாட்டிற்கு முக்கிய வாடிக்கையாளர் என்றால் அமெரிக்கா தான்.

பிற ஒப்பந்தம்

பிற ஒப்பந்தம்

உலக நாடுகளுக்கு அணு சக்தி மற்றும் அணு ஆயுதங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தும் யூரேனியம் என்னும் தாது பொருட்களை ஏற்றுமதி செய்வதில் கனடா மற்றும் ஆஸ்திரேலியா மிக முக்கியமானவை.

இந்நிலையில் யூரேனியம் தாது பொருட்களுக்காக இந்தியா கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளுடனும் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அணு சக்தி

அணு சக்தி

இந்தியாவில் அணு சக்தி உற்பத்திக்குத் தேவையான தாது பொருட்களை அமெரிக்கா கையாள் ஆஸ்திரேலியா அளிக்க ஒப்புக்கொண்டது, இதேபோல் இதன் டெலிவிரியில் ஏதேனும் பிரச்சனை வந்தால் அதனை ஈடு செய்யக் கனடா உள்ளது.

அணு உலை அமைப்பதிலும், தொழில்நுட்ப உதவிகளை அளிப்பதிலும் இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்துள்ளது. அவ்வப்போது உதவிக்கரம் நீட்ட பிரான்ஸ் உள்ளது. பிரான்ஸ் உதவிட முக்கியக் காரணம் இந்நாட்டிடம் இந்தியா செய்து வரும் ராணுவ ஆயுதங்கள் கொள்முதல் வர்த்தகம் தான்.

அமெரிக்கா என்னும் கழுகு..

அமெரிக்கா என்னும் கழுகு..

தன் வீட்டுப் பிரச்சனையைப் பார்க்காமல் அடுத்த நாடுகளை அடக்கி ஆள வேண்டும் எனச் சுற்றித்திரியும் அமெரிக்க இந்தியாவின் அணு சக்தி வளர்ச்சியில் பல பிரச்சனைகள் அளித்தும் அளிக்கவும் காத்துக்கிடக்கிறது.

இதனை இந்தியா பல கட்டப் பேச்சுவார்த்தை என்னும் பிரம்மாஸ்திரம் மூலம் எளிமையாக எதிர்கொள்ளும். இந்தத் திறமையின் மூலம் தான் NPT ஒப்பந்தம் செய்யாமல் எப்படி இந்தியா அணு சக்தியை பயன்படுத்த முடிகிறது, இல்லை என்றால் முடியுமா..?

புதிய நம்பிக்கை

புதிய நம்பிக்கை

இதனால் அணு சக்தி மூலம் இந்தியா 2032ஆம் ஆண்டுக்குள் 63,000 மெகாவாட் மின்சார உற்பத்தி இலக்கை மிக எளிமையாக எட்டிவிடும் என்பது தெளிவாகிறது.

போட்டி..

போட்டி..

இந்நிலையில் சீனா 2030ஆம் ஆண்டுக்குள் 110 அணு உலைகளை அமைக்கத் தயாராகி வருகிறது. மேலும் 2025ஆம் ஆண்டுக்குள் அணு சக்தியில் பாகிஸ்தான் உலகளவில் 5வது இடத்தைப் பிடிக்க உள்ளதாகவும் கணிப்புகள் வெளியாகியுள்ளது.

அடபோங்கப்பா இந்தியா யாருக்கும் தெரியாமலேயே அணு ஆயுத சோதனையை நடத்தி உலக நாடுகளுக்குப் பேரதிர்ச்சி அளித்துள்ளது. இது எல்லாம் ஒரு மேட்டாரா..

இந்தியா நடத்திய அணுகுண்டு சோதனையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா..? இல்லை என்றால் அடுத்த ஸ்லைடரை பாருங்கள்..

எப்படி சிரித்தார்...

எப்படி சிரித்தார்...

புத்தர் சிரித்தாலும் சிரித்தார்-பாகம் 1

புத்தர் சிரித்தாலும் சிரித்தார்-பாகம் 2

புத்தர் சிரித்தாலும் சிரித்தார்-பாகம் 3

புத்தர் சிரித்தாலும் சிரித்தார்-பாகம் 4

புத்தர் சிரித்தாலும் சிரித்தார்-பாகம் 5

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nuclear power: A new faith for India

If the Modi government has its way, Nuclear power will be the new faith for India.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X