பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை 0.25% உயர்த்தியது.. இந்தியாவிற்கு லாபமா..? நஷ்டமா..?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: 10 வருடங்களுக்குப் பிறகு பல பொருளாதாரச் சிக்கல்களைத் தாண்டி, குறிப்பாக 2007-09 ஆண்டுகளில் சர்வதேச நிதி நெருக்கடியின் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த அமெரிக்கப் பொருளாதாரம் புதன்கிழமை தனது வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது.

 

கடந்த 2 நாட்களாக நடந்த அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கியின் முக்கியக் கூட்டத்தின் அந்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் நிலையற்ற வளர்ச்சி காரணிகள் குறித்துக் காரசாரமான விவாதம் நடைபெற்றபின் தனது வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் அல்லது 25 அடிப்படை புள்ளிகளை உயர்ந்த பெடரல் ரிசர்வ் உத்தரவிட்டுள்ளது.

இதனால் இனி அமெரிக்கச் சந்தையில் வட்டி விகிதத்தின் அளவு 0.25- 0.50 மத்தியில் இருக்கும்.

(இந்த மேஜையில் இருந்து தான் கோடி கோடியாக பணம் சம்பாதிக்கிறாங்க!!)(இந்த மேஜையில் இருந்து தான் கோடி கோடியாக பணம் சம்பாதிக்கிறாங்க!!)

ஜெனட் ஏலன்

ஜெனட் ஏலன்

தற்போதைய நிலையில் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி பாதையில் உள்ளது, மேலும் இந்நிலை அடுத்தச் சில காலாண்டுகள் வரை தொடரும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், கமிட்டி 10 வருடங்களுக்குப் பிறகு வட்டி விகிதத்தை உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. இது நாட்டின் வளர்ச்சிக்கும் ஏற்றதாக இருக்கும் என நம்பப்படுகிறது என அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெனட் ஏலன் தெரிவித்தார்.

லேபர் மார்கெட்

லேபர் மார்கெட்

பெடர்ல் ரிசர்வ் வங்கியின் இத்தகைய முடிவிற்கு முக்கியக் காரணம் லேபர் சந்தை அதாவது வேலைவாய்ப்புகள் சந்தையில் ஏற்பட்ட முக்கிய வளர்ச்சியே காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில் தற்போது அமெரிக்கச் சந்தையில் வேவையில்லாதோர் எண்ணிக்கை எப்போது இல்லாமல் 5 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இதன் காரணமாகவே வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. அடுத்தச் சில மாதங்கள் வரை நாட்டின் பணவீக்கம் 2 சதவீதமாக உயரும் எனப் பெடரல் ரிசர்வ் கணித்துள்ளது.

 

அடுத்த வட்டி உயர்வு
 

அடுத்த வட்டி உயர்வு

மேலும் அடுத்தடுத்த வட்டி உயர்விற்குச் சில காலம் அவகாசம் தேவைப்படும் எனவும் பெடரல் ரிசர்வ் தெரிவித்துள்ளது.

அமெரிக்கச் சந்தை

அமெரிக்கச் சந்தை


வட்டி உயர்வு அறிவிப்பால் அமெரிக்கப் பங்குச்சந்தை 1.45 சதவீதம் வரை உயர்ந்தது. அதேபோல் டாலர் மதிப்பில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. சரி இந்திய சந்தைக்கு இது லாபமா? நஷ்டமா?.

அமெரிக்கப் பெடரல் ரிசர்வின் வட்டி உயர்வால் இந்திய சந்தைக்கு என்ன நடக்கும். வாங்க பார்ப்போம்..

 

பங்குச்சந்தை

பங்குச்சந்தை

பொதுவாக இந்திய பங்குச்சந்தையில் அதிகளவில் முதலீடு செய்திருப்பது அன்னிய முதலீட்டாளர்கள் தான். இந்நிலையில் அமெரிக்கத் தனது வட்டியை உயர்த்திருப்பது அன்னிய முதலீட்டாளர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளதால் இந்திய பங்குச்சந்தையில் இருந்து அதிகளவிலான முதலீடு வெளியேறும்.

இந்திய கடன் சந்தையில் அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு மட்டும் 24.5 பில்லியன் டாலர்.

 

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

வட்டி உயர்வால் அமெரிக்க டாலர் மதிப்பு சர்வதேச சந்தையில் ஸ்திர தன்மையை அடைவதால் அதன் மதிப்பு கண்டிப்பாக உயரும்.

எனவே நாணய பரிமாற்றச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது.

 

கடன்

கடன்

மேலும் இந்திய நிறுவனங்கள் தனது வளர்ச்சிக்காக வெளிநாட்டு வங்கிகளில் இருந்து கடன் பெறத் திட்டமிட்டும் பட்சத்தில் கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US Fed Hikes Interest Rates

The Federal Reserve hiked interest rates for the first time in nearly a decade on Wednesday, signalling faith that the US economy had largely overcome the wounds of the 2007-2009 financial crisis.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X