அமெரிக்கா முதல் பாகிஸ்தான் வரை.. மோடியின் வோல்டு டூரில் இந்தியாவிற்கு என்ன கிடைத்தது..?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ன்னை: 2015ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா முதல் பாகிஸ்தான் வரை சுமார் 25 நாடுகளுக்கு அரசு முறை பயணமாகச் சென்றுள்ளார். இவரது பயணம் நாட்டின் வர்த்தகம் நட்புறவை மேம்படுத்துவதாக இருந்த போதிலும், பல சர்ச்சைகள் வெடித்தது. குறிப்பாக மோடியின் திடீர் பாகிஸ்தான் பயணத்தின் போது.

சர்ச்சைகள் மற்றும் கேள்விகள் மத்தியில் மோடி சென்ற அனைத்தும் இடத்திலும் பிரதமருக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சரி நாம விஷயத்திற்கு வருவோம், கடந்த ஓர் ஆண்டில் சுமார் 27 முறை வெளிநாடுகளுக்குச் சென்ற மோடி அப்படி எந்தெந்த நாடுகளுக்குச் சென்றார் என்னென்ன கொண்டு வந்தார் என்பதைப் பார்ப்போம். வங்களேன் நாமும் ஒரு வோல்டு டூர் போவோம்..

செஷல்ஸ் (Seychelles)
 

செஷல்ஸ் (Seychelles)

2015ஆம் ஆண்டில் முதலாவதாகப் பிரதமர் மோடி சென்ற இடம் இந்திய பெருங்கடலில் இருக்கும் செஷல்ஸ் நாட்டிற்கு. மார்ச் 10-11 ஆகிய 2 நாட்கள் பயணமாகச் செஷல்ஸ் சென்றார் மோடி.

இப்பயணத்தில் இந்தியா-செஷல்ஸ் நாட்டிற்கு மத்தியில் 4 ஒப்பந்தங்கள் செய்யப்பட்டது. இதில் மிக முக்கியமானது இரு நாடுகளுக்கு மத்தியிலான கடலோர பாதுகாப்பு குறித்த ஒப்பந்தம்.

மொரிஷியஸ்

மொரிஷியஸ்

மார்ச் மாதத்தில் 5 நாட்கள் வெளிநாட்டுப் பயணத்தில் மோடி மார்ச் 11-12ஆகிய தேதிகளில் மொரிஷியஸ் சென்றார். மொரிசீயஸ் நாட்டின் தேசிய தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இதன் பின் , அந்நாட்டின் கடலோர ரோந்து கப்பலை இயக்கி வைத்தார், மேலும் இந்திய நாட்டின் நிதி உதவியுடன் நிறைவேற்றப்படும் திட்டங்களைப் பார்வையிட்டார்.

இலங்கை

இலங்கை

மார்ச் 13-14ஆம் தேதியில் செஷல்ஸ் மற்றும் மொரிஷியஸ் பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக மோடி இலங்கை சென்றார். இப்பயணத்தில் இலங்கையில் 2 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இலங்கையில் நடந்த போரின்போது வாழ்வாதாரத்தை இழந்த ஈழத்தமிழர்களுக்கு இந்தியா கட்டி கொடுத்துள்ள வீடுகளைப் பிரதமர் மோடி ஒப்படைக்க உள்ளார். இது தவிரச் சில முக்கிய ஒப்பந்தங்களில் பிரதமர்கையெழுத்திட்டார்

மேலும் இலங்கை சென்ற மோடி, அந்நாட்டு அதிபர் சிறிசேன, ரனில் விக்ரமசிங்கே மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசுகிறார்.

இந்தியா-இலங்கை நட்புறவில் புதிய அத்தியாயம்: 2015

பிரான்ஸ்
 

பிரான்ஸ்

ஏப்ரல் 9-10 ஆம் தேதிகளில் 4 நாட்கள் பிரான்ஸ், ஜெர்மனி, கனடா நாடுகளுக்குப் பிரதமர் மோடி சென்றார். இதில் முதலில் பிரான்ஸ் சென்றமோடி, அந்நாட்டு அதிபரைச் சந்தித்து இருநாடுகளுக்கிடையேயான அணுசக்தி, பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தனர்.

‘மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் இந்தியாவில் முதலீடு செய்வது தொடர்பாகப் பிரான்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்யப்படும் எனத் தெரிகிறது. மேலும், ராணுவ உற்பத்தித் துறையிலும் பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

2015ஆம் ஆண்டில் நவம்பர் மாத்தில் பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி சோலார் மின் திட்டம், மற்றும் பல முக்கியக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

ஜெர்மனி

ஜெர்மனி

பிரான்ஸ் நாட்டிற்குப் பிறகு ஏப்ரல் 12-14 ஆம் தேதிகளில் ஜெர்மன் சென்ற மோடி, அந்நாட்டுடன் வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்து அந்நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜெர்மனி சுற்றுப்பயணத்தில் பிரதமர் மோடி நேதாஜியின் பேரன் உறவான சூர்யகுமார் போஸ் நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது சூர்யகுமார் போஸ், பிரதமர் மோடியிடம் நேதாஜி தொடர்பான ரகசிய கோப்புகளை வெளியிடும்படி வலியுறுத்தினார்.

கனடா

கனடா

முன்னதாக 1973ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கனடா சென்றார். அதன் பிறகு 42 ஆண்டுகள் கழித்துக் கனடா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி ஆவார்.

2015ஆம் ஆண்டின் ஏப்ரல் 14-17 தேதிகளில் கனடா சென்ற மோடி, ஒட்டவா நகரில் அந்த நாட்டின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பரை சந்தித்துப் பேசினார்.

இப்பயணத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானதாகக் கருத்தும் இந்தியாவில் உள்ள அணு உலைகளுக்கு 5 ஆண்டுகளுக்கு யுரேனியம் வழங்கும் ஒப்பந்தம் இந்தியா-கனடா இடையே கையெழுத்தானது.

இதில் ரூ.1,600 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தின் படி கனடா இந்தியாவுக்கு 3 ஆயிரம் டன் யுரேனியம் வழங்க உள்ளது. இந்த யுரேனியத்தை 2020ம் ஆண்டு வரை வழங்கும்.

சீனா

சீனா

2015ஆம் ஆண்டின் மே மாதம் 14-16ஆம் தேதிகளில்ல சீன சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபருடன் இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது ஆலோசனை நடத்திய மோடி, எல்லை கட்டுப்பாட்டு வரையறை செய்வது குறித்தும்பேசினார்.

இப்பயணத்தில் இரு நாடுகளுக்கும் மத்தியில் இருந்து மிகப்பெரிய எல்லை பிரச்சனைகளை எளிமையாகத் தீர்க்கப்பட்டது. மேலும் இருநாடுகளுக்கு மத்தியிலான வர்த்தகம் மேம்பட்டுள்ளது.

மங்கோலியா

மங்கோலியா

சீன பயணத்தைத் தொடர்ந்து மே 17-18ஆம் தேதியில் மங்கோலியா சென்றார் மோடி. இப்பயணத்தில் மூலம் மங்கோலியா சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் மோடி பெற்றார்.

மேலும், அந்நாட்டின் உள்கட்டமைப்புக்கு இந்தியா சார்பில் ஒரு பில்லியன் அமெரிக்கா டாலர் நிதியுதவி செய்யப்படும் எனவும் மோடி அறிவித்தார்.

கொரியா

கொரியா

மோடியின் 6 நாட்கள் சுற்றுப்பயணத்தில் சீனா மற்றும் மங்கோலியா நாடுகளைத் தொடர்ந்து, மே 18-19 தேதிகளில் கொரியாவிற்குச் சென்றார். இப்பயணத்தில் மோடி இந்நாட்டின் பல முக்கியத் தலைவர்களைச் சந்தித்து, இந்தியாவின் உள்கட்டமைப்பு, ரயில்வே மற்றும் ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட திட்டங்களுக்கு 10 பில்லியன் டாலர் அளவிலான நிதியுதவியைப் பெற்றது.

பங்களாதேஷ்

பங்களாதேஷ்

ஜூன் மாதம் 6 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாகப் பங்களாதேஷ் சென்றார்.

பங்களாதேஷ் சென்ற செல்லும் பிரதமர் மோடி, டாக்கா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில், அதிபர் அப்துல் ஹமீது, பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோருடன் கலந்துகொண்டார்.

இப்பயணத்தில் எல்லை பாதுகாப்பு மற்றும் பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையில் இரு ஒப்பந்தங்கள், இரு நாடுகள் மத்தியிலான வர்த்தக ஒப்பந்தம் மற்றும் சாலை போக்குவரத்துக் குறித்துச் சில ஒப்பந்தங்கள் இரு நாடுகள் மத்தியில் செய்யப்பட்டது.

ஜூலை மாதம்

ஜூலை மாதம்

இது தவிர ஜூலை மாதத்தில் உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், ரஷ்யா, துர்க்மெனிஸ்தான், கிர்கிஸ், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குச் சென்றார்.

இப்பயணங்களில் உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், துர்க்மெனிஸ்தான், கிர்கிஸ், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் வர்த்தகம் மற்றும் நட்புறவு சார்ந்த பல்வேறு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டது.

ரஷ்யா

ரஷ்யா

ஜுலை மாதத்தில் ரஷ்யா சென்ற பிரதமர் மோடி பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் கலந்துகொண்டார். அதுமட்டும் அல்லாமல் பிரிக்ஸ் வங்கியை அமைப்பதும், அதன் தலைவரை நியமிப்பதும் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

ஐக்கிய அரபு நாடுகள்

ஐக்கிய அரபு நாடுகள்

ஆகஸ்ட் மாதத்தில் 16-17ஆம் தேதிகளில் 25 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வாழும் ஐக்கிய அரபு நாடுகளுக்குப் பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். 34 ஆண்டுகளுக்கு முன் பிரதமராக இருந்த இந்திரா அங்குச் சென்று வந்தார், அதன் பின் பிரதமர் மோடி ஐக்கிய அரபு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.

அபுதாபி சென்ற மோடி அங்குப் பட்டத்து இளவரசர், அரசு அதிகாரிகள், தொழில் அதிபர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்களை இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்யுமாறு வலியுறுத்தினார். இதன் படி அடுத்த 5 வருடத்தில் இந்தியாவில் ரூ.. 5 லட்சம் கோடி முதலீடு செய்ய அமீரகம் முடிவு செய்துள்ளது.

அயர்லாந்து

அயர்லாந்து

செப்.23 ஆம் தேதி அயர்லாந்து சென்ற பிரதமர் மோடி, டப்ளின் நகரில் அந்நாட்டு அதிபர் எண்டா கென்னியை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

அமெரிக்கா

அமெரிக்கா

பின்னர், 23-ம் தேதி நியூயார்க் நகருக்கு வந்த அவர் ஐக்கிய நாடுகள் சபையில் நிலைத்த பொருளாதார வளர்ச்சி, பருவநிலை மாற்றம், புவி வெப்பமாயதல், உலகஅமைதி, தீவிரவாத ஒழிப்பு, ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் தகுதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக உரையாற்றிய பிரதமர் மோடி, டிஜிட்டல் இந்தியா கருத்தரங்கில் சிறப்புரையாற்றினார்.

அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர்கள் சுமார் 500 பேருக்கு விருந்து அளித்த மோடி, இந்தியாவில் தொழில் துவங்க வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

டெஸ்லா

கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா தொழிற்சாலைக்குச் சென்ற அவர் அங்குப் புகை வெளியிடாதபடி பேட்டரியால் இயங்கும் கார்கள் தயாரிக்கப்படுவதைப் பார்வையிட்டார்.

பேஸ்புக்

பேஸ்புக்

சிலிக்கான் வேலி பகுதி என அழைக்கப்படும் வெஸ்ட் கோஸ்ட் நகருக்குச் சென்று பேஸ்புக் நிறுவனத்தைப் பார்வையிட்டார். பேஸ்புக் நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க்குடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

முக்கிய நிறுவன தலைவர்கள்

முக்கிய நிறுவன தலைவர்கள்

அமெரிக்காவின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் டிம் குக்(ஆப்பிள்), சாந்தனு நாராயணன்(அடோபி), சத்யா நாதெள்ளா(மைக்ரோசாப்ட்), பால் ஜேக்கப்ஸ்(குவால்காம்), சுந்தர் பிச்சை(கூகுள்), ஜான் கேம்பர்ஸ்(சிஸ்கோ) ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார்.

ஒபாமா

ஒபாமா

மேலும் அமெரிக்கப் பயணத்தில் அமெரிக்கப் பிரதமர் ஒபாமா மோடி கட்டியணைத்து உற்சாக வரவேற்பு அளித்தார். இந்தச் சந்திப்பின்போது, இருநாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது, பருவ நிலை மாற்றத்தை தடுத்தாள்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பிரிட்டன்

பிரிட்டன்

நவம்பர் மாதத்தில் 12-14 தேதிகளில் 3 நாள் பயணமாகப் பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து சென்றார்.

இப்பயணத்தில் அணு சக்தி துறையில் மட்டும் அல்லாமல் பிரிட்டன், இந்தியாவுடன் பாதுகாப்புத் துறை, சைபர் செக்கியூரிட்டி போன்ற துறைகளிலும் இணைந்து செயல்படும் 9 பில்லியன் பவுண்டு மதிப்புள்ள ஒப்பந்தங்களில் இரு நாட்டு நிறுவனக்களும் கையெழுத்திட்டுள்ளது. இதன் உடன் இங்கிலாந்தில் ரயில்வே ரூபாய் பத்திரங்களும் வெளியிடப் பிரட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் செய்தியாளர்களிடம், இனி இந்தியாவிற்கும் பிரட்டனுக்கு இடையே உள்ள நட்பு "new dynamic modern partnership" ஆக இருக்கும் எனத் தெரிவித்தார்,

துருக்கி

துருக்கி

இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி-20 கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு துருக்கியில் இன்று தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக லண்டனில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு துருக்கி வந்தடைந்தார்.

மலேசியா

மலேசியா

நவ.23-24 ஆம் தேதிகளில் 2 நாள் பயணமாக மலேசியா சென்ற மோடி பயணத்தில் பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து போராட இந்தியா மலேசியா ஆகிய இருநாட்டுத் தலைவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதுமட்டும் அல்லாமல் இரு நாடுகள் மத்தில் வர்த்தகம், பாதுகாப்பு, ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் உறவை மேலும் வலுப்படுத்த 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

நவ.23-24 ஆம் தேதிகளில் 2 நாள் பயணமாகச் சிங்கப்பூர் மோடி சென்றார். இப்பயணத்தில் இந்தியா- சிங்கப்பூர் இடையே ராணுவ ரீதியாக இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்த தனி ஒப்பந்தமும், சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட 9 ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. இதில் ராணுவ ரீதியாக ஒத்துழைத்துச் செயல்படுவது கூட்டுப் பிரகடனமாகவே வெளியிடப்பட்டது.

ராணுவ ரீதியான ஒப்பந்தத்தில், திறன் மேம்பாடு, பொருளாதார ரீதியாக இணைப்பை ஏற்படுத்துதல், பாதுகாப்பில் ஒத்துழைத்துச் செயல்படுதல் ஆகிய 3 அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் இந்தப் பிராந்தியத்தில் பெரும் ஸ்திரத்தன்மையும், வளர்ச்சியும் ஏற்படும், இருநாடுகளின் கலாசாரம், மக்கள் தொடர்பு ஆகியவை புதிய உச்சத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று கூட்டுப் பிரகடனத்தில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தவிர வர்த்தகம் மற்றும் முதலீடு, வான்வழி மற்றும் கடல்சார் இணைப்பை இன்னும் விரைவு படுத்துதல் மற்றும் கடலோர வளர்ச்சி, ஸ்மார்ட்சிட்டி உருவாக்குதல் மற்றும் நகரப்புற பகுதிகளுக்குப் புத்துயிர் அளித்தல், திறன் கட்டமைத்தல், வர்த்தக மற்றும் கலாசார உறவுகளைப் பலப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளித்தல் ஆகியவற்றில் இரு நாடுகளும் ஒத்துழைத்து செயல்படுவதற்கான துறைகளாக அடையாளம் காணப்பட்டு உள்ளது.

மீண்டும் ரஷ்யா

மீண்டும் ரஷ்யா

ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, தலைநகர் மாஸ்கோவில் இந்திய ரஷ்ய தொழிலதிபர்களைச் சந்தித்துப் பேசினார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ரஷ்யாவின் பங்களிப்பை வரவேற்பதாகக் கூறினார்.

இந்தியாவின் உள்கட்டமைப்புத்துறைகளில் அதிக முதலீடுகளை மேற்கொள்ளுமாறு தொழிலதிபர்களுக்கு அப்போது அவர் அழைப்பு விடுத்தார்.

இரு நாடுகளிடையே அணுசக்தி திட்டம், ஏவுகணைகள் வாங்குவது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். முன்னதாகக் காபூல் நகரிற்கு வந்த மோடிக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் அதிபர் உள்ளிட்ட தலைவர்களை மோடி சந்தித்துப் பேசினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PM Modi's world tour in 2015

In 2015 prime minister modi went to 25 countries in 27 journey. what he brings for india..? let see..
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more