முகேஷ் அம்பானியுடன் போட்டி போட இந்தியாவில் புதிதாக 27 பில்லியனர்கள்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய பில்லியனர்கள் பட்டியலில் புதிதாக 27 பேர் இணைந்துள்ளதாக ஹூரன் குளோபல் ரிச் லிஸ்ட் 2016 அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்திய சந்தையில் 26 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் உள்ள நிலையில், இவருடன் போட்டி போட இந்தியாவில் 2016ஆம் ஆண்டுக்காலத்தில் புதிதாக 27 பேர் பல்லியனர்கள் உருவாகியுள்ளதாக ஹூரன் பத்திரிக்கை நிறுவனம் தெரிவித்துள்ளது.

308 பில்லியன் டாலர்
 

308 பில்லியன் டாலர்

இந்திய பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு, 2016ஆம் நிதியாண்டில் 308 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது. அதிலும் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்திய பில்லியனர்களின் சொத்து மதிப்பு 25 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முகேஷ்- திலீப்

முகேஷ்- திலீப்

இந்நிலையில் உலக நாடுகளின் பில்லியனர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 26 பில்லியன் டாலர் மதிப்புடன் 21வது இடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து சன் பார்மா நிறுவனத்தின் தலைவரான திலீப் சங்வீ 18 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்திய பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார்.

111 பில்லியனர்கள்

111 பில்லியனர்கள்

இந்தியாவில் மட்டும் சுமார் 111 பில்லியனர்கள் உள்ளனர் என்று ஹூரன் பத்திரிக்கை செய்ய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் மும்பையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

புதிதாக இணைந்த பில்லியனர்களில் ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைவர்கள் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகியோர் 1.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 69 இடத்தில் உள்ளனர்.

99 புதிதாகப் பில்லியனர்கள்
 

99 புதிதாகப் பில்லியனர்கள்

2016ஆம் ஆண்டில் உலக நாடுகளில் சுமார் 99 பேர் புதிதாகப் பில்லியனர்கள் பட்டியலில் இணைந்துள்ளனர். இதன் மூலம் மொத்த எண்ணிக்கையின் அளவு 2,188 ஆக உயர்ந்துள்ளது. 2013ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது எண்ணிக்கையில் 50 சதவீத உயர்வு காணப்பட்டுள்ளது என ஹூரன் தெரிவித்துள்ளது.

சீனா

சீனா

பில்லியனர்கள் பட்டியலில் அமெரிக்காவை வீழ்த்தி சீனா முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் சீனாவில் மட்டும் பில்லியனர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யா

ரஷ்யா

ரஷ்ய நாணயமான ரூபெல் மதிப்பு 19 சதவீதம் சரிந்துள்ளதால் ரஷ்ய பில்லியனர்களின் சொத்து மதிப்பு 130 பில்லியன் டாலர் வரை குறைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India adds 27 new billionaires

India added 27 new billionaires with Mukesh Ambani, Chairman of Reliance Industries (RIL), emerging at the top with a personal wealth of $26 billion, according to Hurun Global Rich List 2016.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X