24 மணிநேரத்தில் 1,230 புத்தகங்களை வெளியிடுகிறது சீனா..!

By Batri Krishnan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  சென்னை: அடுத்தத் தலைமுறைக்கு அறிவையும், ஞானத்தையும் கடத்துவதில் புத்தகங்களின் பங்கு மகத்தானது. கல்வெட்டில் ஆரம்பித்த இந்தப் பழக்கம், அச்சுத்துறையின் அபார வளர்ச்சியின் காரணமாக இன்று புத்தகங்களாகப் புதிய பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது. இன்று, பதிப்புத்துறையானது பல பில்லியன் டாலர் புழங்கும் ஒரு மிகப்பெரிய வர்த்தகமாக உள்ளது.

  புத்தகங்கள் பல்வேறு மொழிகளில், பல்வேறு இடங்களில், பல்வேறு நோக்கங்களுக்காக, பல்வேறு வடிவங்களில் வெளியிடப்படுகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்று புத்தக வெளியீடு என்பது ஒரு எளிதில் அணுகக்கூடிய மற்றும் அதிக நிதி புழங்கும் ஒரு தொழிலாக விளங்குகின்றது.

  புத்தக வெளியீடு

  இந்நிலையில் உலக அளவில் மிக அதிக அளவில் புத்தகங்கள் வெளியிடும் நாடுகளின் பட்டியலை தயாரிப்பது மிகவும் கடினமான பணியாகும். ஏனெனில் இதில் துல்லியம் மிகவும் முக்கியம். புத்தக வெளியீடு சம்பந்தப்பட்ட புள்ளி விபரங்களைப் பெறுவது அவ்வளவு எளிதாக இல்லை. ஏனெனில் இது சம்பந்தப்பட்ட புள்ளிவிவரங்கள் பொது வெளியில் கிடைப்பது இல்லை.

  முக்கியத் தகவல்

  இந்தப் பட்டியலை தயாரிக்க நாம் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ), மற்றும் சர்வதேச வெளியீட்டாளர்கள் சங்கம் (ஐபிஏ) போன்றவற்றிலிருந்து தரவுகளைப் பெற்று அவற்றைப் பயன்படுத்தியுள்ளோம்.

  8. ஸ்பெயின்

  வெளியிடப்பட்டுள்ள மொத்த புத்தகங்கள்: 76,434

  ஸ்பானிஷ் புத்தகத் துறை கடந்த காலத்தில் அனுபவித்த பொருளாதாரப் பிரச்சினைகள் நிச்சயமாகப் புத்தக விற்பனைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இங்குக் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகள் 2013ம் ஆண்டு ஸ்பெயின் அரசு அதன் உச்சபச்ச பொருளாதாரக் குழப்பம் ஆரம்பித்த முதல் இரண்டு வருடத்தில் எடுக்கப்பட்டவை. இவை அவர்களின் தொழில் நெகிழ்ச்சிக்கான சாட்சிகளாய்க் காணப்படுகின்றன.

   

  7. ஜப்பான்

  வெளியிடப்பட்டுள்ள மொத்த புத்தகங்கள்: 82,589

  ஜப்பான் நாட்டின் புத்தகத் துறை (பொது மற்றும் வெளியீடு தொழில்) மதிப்பு குறைந்து ஒரு ஆபத்தான காலகட்டத்தில் இருக்கின்றது. 90களின் மத்தியில் இதழ்கள், மற்றும் புத்தகங்களின் விற்பனை சரிவடைய ஆரம்பித்தது. அது இன்றும் சீரான நிலையை அடையவில்லை.

  இந்நிலையில் இன்றும் உலகப் புத்தக உற்பத்தியில் ஜப்பான் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. எனவே ஜப்பான் உலகில் அதிக அளவில் புத்தகம் வெளியிடும் நாடுகளின் பட்டியலில் ஏழாவது இடத்தைப் பெற்றுள்ளது.

   

  6. இந்தியா

  வெளியிடப்பட்டுள்ள மொத்த புத்தகங்கள்: 90,000

  மேற்கு உலகப் புத்தக வெளியீட்டுச் சந்தைகளில் புத்தக விற்பனை பாதிக்கப்பட்ட போது, அதற்கு மாறாக இந்தியாவில், அதன் புத்தகச் சந்தைப் பிரகாசமாக உள்ளது.

  இந்தியா உலகின் ஆறாவது பெரிய பதிப்பக சந்தையாகவும் மற்றும் ஆங்கில மொழி புத்தகங்களுக்கான சந்தையில் அமெரிக்காவிற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்திலும் உள்ளது. 2014 ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள சுமார் 16,000 வெளியீட்டாளர்கள் 30% வளர்ச்சியை அடைந்துள்ளார்கள்.

   

  5. ஜெர்மனி

  வெளியிடப்பட்டுள்ள மொத்த புத்தகங்கள்: 93,600

  2015 ல் மின் புத்தக விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இருந்தாலும், ஜெர்மன் புத்தகத் துறையின் செயல்பாடு அவ்வுளவு பிரகாசமாக இல்லை. இங்குப் புத்தக வெளியீட்டுத் துறை அடைந்த இலாபங்களை விட இழப்புகள் மிக அதிகம். ஸ்பெயினைப் போலவே, ஜெர்மனியின் புத்தக வெளியீட்டுத் துறையும் யூரோ பிரச்சனைகளால் தத்தளித்து வருகின்றது.

   

  4. ரஷ்யா

  வெளியிடப்பட்டுள்ள மொத்த புத்தகங்கள்: 101,981

  மேற்கத்திய இலக்கியத் தூண்களில் ஒன்றாக ரஷ்யா இருந்த போதிலும், பழங்கால ரஷ்யர்களைப் போல், இன்றைய ரஷ்ய மக்களின் புத்தம் வாசிக்கும் ஆர்வம் இல்லை. இது ரஷ்ய புத்தகச் சந்தையைக் கடுமையாகப் பாதித்துள்ளது. 2015ம் ஆண்டில் மாஸ்கோவில் பல புத்தகக்கடைகள் மூடப்பட்டுள்ளது. அங்குப் புத்தக வெளியீடு குறைந்து வருகின்றது என்பதே அதற்கான மறைமுக அர்த்தம்.

  எனவே புத்தங்களின் தேவையைப் பூர்த்திச் செய்ய அதனுடைய விலை ஏறத்தொடங்கியது. நிதிப் பிரச்சனைகள் மற்றும் உற்பத்தி குறைவு இருந்த போதிலும், ரஷ்யா உலகின் அதிகப் புத்தகங்கள் வெளியிடும் முதல் 8 நாடுகள் பட்டியலில் உள்ளது.

   

  3. ஐக்கிய ராஜ்யம்

  வெளியிடப்பட்டுள்ள மொத்த புத்தகங்கள்: 184,000

  புகழ்பெற்ற புத்தக ஆசிரியரான ஜே.கே. ரோலிங்கின் சொந்த தேசமான இங்கு டிஜிட்டல் புத்தகங்களின் வளர்ச்சியைத் தொடர்ந்து புத்தகச் சந்தை மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய புத்தக வெளியீட்டுச் சந்தையான இங்குத் தற்பொழுது புத்தகச் சந்தை மதிப்பில் டிஜிட்டல் புத்தங்களின் பங்கு சுமார் 17% ஆகும்.

  மேற்கு உலகப் புத்தகச் சந்தை அவதியுற்ற போதிலும், சில இங்கிலாந்து வெளியீட்டாளர்களுக்கு அவர்களுடைய தொழில் எதிர்காலம் பற்றி அதிக நம்பிக்கை இருக்கிறது.

   

  2. அமெரிக்கா

  வெளியிடப்பட்டுள்ள மொத்த புத்தகங்கள்: 304,912

  உலகின் மிகப் பெரிய புத்தக வெளியீட்டுச் சந்தையான இது தற்பொழுது சிறிய அளவில் வெற்றிகளை அனுபவித்து வருகின்றது. மேற்குலகப் புத்தகச் சந்தை பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்த போதும், அமெரிக்கச் சந்தை நன்றாகவே உள்ளது. கடந்த 2014 ம் ஆண்டின் புத்தக விற்பனையானது 2013 ம் ஆண்டின் விற்பனையை விடச் சற்று அதிகமாகும்.

   

  1. சீனா

  வெளியிடப்பட்டுள்ள மொத்த புத்தகங்கள்: 444,000

  சீனா அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் உலகின் இரண்டாவது பெரிய புத்தக வெளியீட்டுத் துறையாக உள்ளது. ஆனால் இங்குப் புத்தகத் தயாரிப்பானது வேறு எந்த நாட்டையும் விட அதிகமாகவே உள்ளது. இந்தியா போன்று, சீன புத்தகச் சந்தையும் வேகமாக முன்னேறி வருகின்றது. சீனா ஒரு நாளுக்குச் சராசரியாக 1230 புத்தகங்களை வெளியிடுகிறது.

  இங்குச் சந்தை சுணங்குவதைப் போன்று எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை. இங்குப் புத்தகச் சந்தை தொடர்ந்து லாபத்தைப் பதிவு செய்து வருகின்றது. இங்குப் புத்தகப் பதிப்புத் துறை 2015 ல் மட்டும் சுமார் 10% ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இங்குப் புத்தகத் தயாரிப்புக்கான அவர்களின் அனைத்து முயற்சிகளும் அவர்களை உலகின் மிக அதிகப் புத்தகங்கள் தயாரிக்கும் முதல் 8 நாடுகளில் பட்டியலில் முதலிடத்தில் நிறுத்தியுள்ளது; இது புத்தகப் பதிப்புத் துறையில் மிகவும் செல்வாக்கான நாடாக உள்ளது.

   

  தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

  English summary

  8 Countries that Produce the Most Books in the World

  Book publishing of today has gone a long way from its first traces in stone tablets. Today, it is a multi-billion dollar global industry – in various languages, niches, purposes, and formats.
  Story first published: Saturday, May 14, 2016, 15:01 [IST]
  Company Search
  Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
  Thousands of Goodreturn readers receive our evening newsletter.
  Have you subscribed?

  Find IFSC

  Get Latest News alerts from Tamil Goodreturns

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more