இந்திய ஸ்டார்ட்-அப் சந்தையின் 'கில்லி'..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: கடந்த 5 வருடத்தில் இந்தியாவில் தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளதற்கு முக்கியக் காரணம் இந்திய ஸ்டார்ட்-அப் சந்தையின் அதீத வளர்ச்சிதான்.

 

இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் மீது பன்னாட்டு நிறுவனங்களுக்கு அதிகளவிலான நம்பிக்கை வைத்துள்ளனர். இன்றைய நிலையில் ஸ்டார்ட்-அப் சந்தை சில பாதிப்புகளைச் சந்தித்தாலும், முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய நிறுவனங்களின் மீது மிகுந்த நம்பிக்கையுடன் பணத்தைக் கொட்டிக்கொண்டே தான் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு நம்பிக்கை.

இந்நிலையில் இந்திய ஸ்டார்ட்-அப் சந்தையில் கலக்கும் நிறுவனங்களைப் பார்ப்போமா..?

சொல்லி அடிக்கும் கில்லி

சொல்லி அடிக்கும் கில்லி

ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம் அந்த நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் தான். வர்த்தகச் சந்தையில் இருக்கும் பல ஆபத்துகளை முன்கூடியே கவனித்து, ஆராய்ந்து, ஆபத்துகளை எதிர்கொண்டு வாடிக்கையாளர்களின் முழுமையான சேவையைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் இவர்கள் தனித் திறமை பெற்றிருக்க வேண்டும்.

இல்லையென்றால் வெற்றிக் கனியை பறிக்க முடியாது. இந்த வகையில் இந்திய ஸ்டார்ட்-அப் சந்தையில் சொல்லி அடிக்கும் கில்லி யார் என்பதேயே பார்க்கலாமா..?

பிளிப்கார்ட் - பன்சால் பிரதர்ஸ்

பிளிப்கார்ட் - பன்சால் பிரதர்ஸ்

2007ஆம் ஆண்டுப் பெங்களூரில் ஒரு சிறு நிறுவனமாகத் துவங்கப்பட்ட இந்தப் பிளிப்கார்ட் இந்திய ஈகாமர்ஸ் சந்தையின் வளர்ச்சிக்கு ஒரு ஆரம்பப்புள்ளியாக இருந்து தற்போது, பல பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாக வளர்ந்து இந்தியா முழுவதும் வர்த்தகத்தில் கொடி கட்டி பறக்கிறது.

இந்நிறுவனத்தின் தலைவர்கள் இருவர் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் இவ்விருவரும் சகோதர்கள் இல்லை. ஆயினும் இவர்கள் மத்தியில் மிகப்பெரிய ஒத்துழைப்பு உள்ளது. கடந்த 7 வருடத்தில் பிளிப்கார்ட் நிறுவனத்தை வளர்த்தது மட்டும் அல்லாமல் மின்திரா, வீரீட், சக்பக்.காம் மற்றும் மைம்360 என்ற பல நிறுவனங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

 

ஸ்னாப்டீல்
 

ஸ்னாப்டீல்

இதே ஈகாமர்ஸ் துறையில் பிளிப்கார்ட் நிறுவனத்திற்குக் கடுமையான போட்டி அளித்துக்கொண்டு இருக்கும் ஸ்னாப்டீல் நிறுவனம் இந்திய ஸ்டார்ட்-அப் சந்தையில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது.

இந்நிறுவனத்தின் பன்னாட்டு ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபா முதல் ரத்தன் டாடா வரை பல நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது. இந்நிறுவனத்தைக் குனால் பகல் மற்றும் ரோஹித் பன்சால் ஆகியோர் இணைந்து 2010ஆம் ஆண்டுத் துவங்கினர்.

 

ஓலா

ஓலா

இந்தியாவில் ஆன்லைன் டாக்ஸி சேவையில் மிகப்பெரிய புரட்சியைச் செய்தது ஓலா கேப்ஸ் நிறுவனம்

இந்நிறுவனத்தை 2010ஆம் ஆண்டுப் பவிஷ் அகர்வால் துவங்கினார்.

 

 

பேடிஎம்

பேடிஎம்

இன்றைய உலகில் ஆங்கிலம் பேச முடியாவிட்டால் வெற்றி பெற முடியாது என்பதை உடைந்து எரிந்தார் பேடிஎம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விஜய் சேகர் சர்மா.

பல எதிர்ப்புகளைத் தாண்டி 1997ஆம் ஆண்டு indiasite.net என்ற இணையதளத்தைத் துவங்கினார், 2 வருடத்திற்குப் பின் அதை 1 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்தார்.

2005ஆம் ஆண்டு ஒன்97 கம்யூனிகேஷன் என்ற நிறுவனத்தைத் துவங்கி இந்திய மக்களுக்கு ஆன்லைன் செய்திகள், கிரிக்கெட் ஸ்கோர், ரிங்டோன்ஸ், ஜோக்ஸ் மற்றும் தேர்வு முடிவுகள் எனப் பல சேவைகளை அளிக்கத் துவங்கினார்.

இதில் வெற்றிக்கடன் விஜய் 2010ஆம் ஆண்டு ஆன்லைன் மொபைல் ரீசார்ஜ் மற்றும் பில் பேமென்ட் தளத்தை உருவாக்கினார். இதன் பின் படிப்படியாக ஈகாமர்ஸ், பஸ் டிக்கெட், ரயில் டிக்கெட் எனப் பல சேவைகளைத் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறார்.

 

குவிக்கர்

குவிக்கர்

இந்தியாவில் முதல் முறையாகப் பயன்படுத்தப்பட்ட அதாவது Second Handed பொருட்களை விற்பனை செய்யும் கிஜிஜி இந்தியா நிறுவனத்தைத் துவங்கினார்.

5க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் பணியாற்றிய பிரனாய் சுலெட் 2008ஆம் ஆண்டு ஜிபி தாமஸ் உடன் இணைந்து கிஜிஜி இந்தியா-வை உருவாக்கினர். தற்போது இதன் பெயர் குவிக்கர்.

 

 

சோமேட்டோ

சோமேட்டோ

இந்நிறுவனத்தின் தலைவர் பெயின் அண்ட் கோ நிறுவனத்தின் பணியாற்றிய போது, தன்னுடன் பணியாற்றிய பங்கஜ் சந்தா உடன் இணைந்து பெயின் நிறுவன ஊழியர்களுக்காக உணவகங்களில் உள்ள மெனு கார்டுகளை இணையத்தில் பதிவேற்றம் செய்தார்கள்.

பின்பு அதுவே ஒரு தொழில் துவங்குவதற்காக மூலகருவாக உருவாகி 2008ஆம் ஆண்டு FoodieBay இணையதளத்தை உருவாக்கினர். இதன்பின் இந்தியா முழுக்க இதனை விரிவாக்கம் செய்யும்போது சோமேட்டோ-வாகப் பெயர் மாற்றும் செய்து மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது சோமேட்டோ நிறுவனம் சுமார் 23 நாடுகளில் உள்ளது.

 

 

ஹைக்

ஹைக்

ஏர்டெல் நிறுவனத்தின் தலைவரான பார்தி மிட்டல் -இன் மகன் கவின் பார்தி மிட்டல். இவர்தான் வாட்ஸ்அப், பேஸ்புக் மெசஞர் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்குப் போட்டியாக ஹைக் (HIKE) என்னும் மெசேஞ் ஆப் நிறுவனத்தை உருவாக்கினார்.

இந்தியாவில் வாட்ஸ்அப், வீசேட், வைபர் மற்றும் டெலிகிராம் போன்ற பல நிறுவனங்களுக்கு ஹைக் மிகப்பெரிய போட்டியாக உள்ளது.

 

ப்ரீசார்ஜ்

ப்ரீசார்ஜ்

மொபைல் ரீசார்ஜ் சேவையில் துவங்கி வாடிக்கையாளர்களுக்குத் தள்ளுபடி கூப்பன் வரை பல வகையான சேவைகளை அள்ளி விசும் ப்ரீசார்ஜ் இந்திய ஸ்டார்ட்-அப் சந்தையின் மிகப்பெரிய வெற்றி நிறுவனம் என்று கூறினால் நீங்கள் மறுக்க முடியாது.

ஹவுசிங்.காம்

ஹவுசிங்.காம்

ஆன்லைன் ரியல் எஸ்டேட் நிறுவனமான ஹவுசிங்.காம் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய புரட்சியைச் செய்தது.

இந்நிறுவனத்தின் உருவாக்கத்திற்கு முக்கியக் காரணம் ராகுல் யாதவ்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

poster-boys of Indian startup industry

The Indian startup scene is witnessing a boom, with the number of entrepreneurs in India growing by the day.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X