இந்திய கோடீஸ்வரன்களின் ஆடம்பர வீடுகளில் 'கிங்பிஷர் வில்லா' தான் டாப்பு..!

By Srinivasan P M
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: நாம் தினமும் எத்தனையோ விதமான வீடுகளை பார்த்திருப்போம்.. நிறைய பங்களாக்கள், பண்ணை வீடுகள், சொகுசுக் குடியிருப்புக்கள்-ன்னு இதில் பல்வேறு வகை இருக்கும். ஆனால் இதையெல்லாம் தாண்டி இந்தியாவிலேயே மிகவும் விலைமதிப்பு மிக்க ஆடம்பர சொகுசு வீடுகள் இருக்கு. அதை கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு சொகுசாகவும் பல்வேறு வசதிகளோடும் இருக்கும்.

இந்தியக் கோடீஸ்வரர்கள் மிக ஆடம்பரமான வாழ்க்கை முறையை பின்பற்றுகின்றனர். அது அவர்களுடைய வீடுகள் மற்றும் நிலம் சார்ந்த சொத்துக்கள் மூலமும் நாம் அறிய முடியும். இந்தச் சொத்துக்கள் உலகில் இருக்கும் அனைத்து விதமான வசதிகளையும் ஆடம்பரங்களை உள்ளடக்கியது. இவற்றில் பெரும்பாலும் தொழிற்துறை பிரபலங்கள் வசிக்கின்றனர்.

உலகில் பிரபலமாகப் பேசப்படும் இது போன்ற ஏழு முக்கிய கோடீஸ்வரர்களின் வீடுகளின் பட்டியலை இதோ உங்களுக்காக..

முகேஷ் அம்பானி - ஆன்டிலியா

முகேஷ் அம்பானி - ஆன்டிலியா

ஆன்டிலியா இந்தியத் தொழிற்துறையில் முடிசூடா மன்னன் ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானியின் மாளிகை. இந்த மாளிகையின் பெயர் அட்லான்டிக் பெருங்கடலின் ஒரு மர்மத் தீவின் பெயரை அடிப்படையாகக் கொண்டு சிகாகோ நகர கட்டிட வல்லுநர்கள் பெர்கின்ஸ் மற்றும் வில்ல ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 27 மாடிக் கட்டிடம் ஆஸ்திரேலிய நிறுவனமான லீடன் ஹோல்டரிங்ஸ் நிறுவனத்தால் கட்டிமுடிக்கப்பட்டது.

ஆன்டிலியா

ஆன்டிலியா

இந்த நன்கு லட்சம் சதுர ஆதி கொண்ட அடுக்குமாடிக் கட்டிடம் மும்பையின் அல்டமவுண்ட் ரோடில் அமைந்துள்ளது. ரிக்டர் அளவில் 8 புள்ளிகள் கொண்ட பூகம்பத்தையும் தாங்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்ட இந்த கட்டிடம் 168 கார்கள் நிறுத்துமிடம், ஹெல்த் ஸ்பா எனப்படும் ஆரோக்கிய அழகு நிலையம், பல நீச்சல் குளங்கள், யோகா ஸ்டுடியோ, ஒன்பது மின்தூக்கிகள் (லிப்ட்) மற்றும் ஹெலிகாப்டர் நிறுத்த மூன்று ஹெலிபேடுகள் ஆகிய ஆடம்பர வசதிகளைக் கொண்டது. இந்த வீட்டை பராமரிக்க 600 வேலையாட்கள் தேவைப் படுகின்றனர். ஆன்டிலியா உலகின் சொகுசான வீடுகளில் முதலிடத்தைப் பிடிக்கிறது.

ஷாருக் கான் - மன்னத்
 

ஷாருக் கான் - மன்னத்

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் கனவு வீடான மன்னத் இந்தியாவின் முக்கிய விலைமதிப்பு மிக்க சொகுசு வீடுகளில் ஒன்றாகக் கருதப் படுகிறது. மும்பை பாந்த்ராவில் கடலை நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆறு மாடி வீடு இதற்கு முன் வில்லா வியன்னா என்று பெயர் கொண்டிருந்தது. 26328 சதுர அடி கொண்ட இந்த சொத்தை அவர் லீசுக்கு எடுத்து பின்னர் மன்னத் எனப் பெயர் சூட்டினார்.

மன்னத்

மன்னத்

இந்த வீடு ஒரு பரபரப்பான சுற்றுலா மையமாக மாறியுள்ளது. இந்த வீட்டில் எலிவேட்டர்கள், லௌன்ச் எனப்படும் ஓய்விடங்கள் மற்றும் இரு பெரிய அறைகள் உள்ளன. உல் அலங்காரங்கள் பல்வேறு பழமை வாய்ந்த பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் என பலவற்றால் செய்யப்பட்டுள்ளன. இதில் ஒரு தனிப்பட்ட பார், நூலகம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களும் கொண்டுள்ளது.

திலிப் ஷங்வி - ஷாந்தம்

திலிப் ஷங்வி - ஷாந்தம்

சன் பார்மா குழும நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குனரான திலிப் ஷங்வி இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களின் ஒருவர். அவர் செழுமையான வாழ்க்கை முறையை பின்பற்றக்கூடிய ஒரு அரிதான கோடீஸ்வரர். அவருக்கு மும்பை ஜூஹூ புறநகர் பகுதியில் ஒரு சாதாரண வீடு இருந்தாலும் குஜராத் மாநிலம் சூரத்திலுள்ள அவரது வீடு ஒரு அற்புதம் என்று கூறலாம்.

ஷாந்தம்

ஷாந்தம்

இங்கு மத்தாரு அசோசியேட்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு மற்ற கோடீஸ்வரர்கள் வீடுகளை போல் கலைப் பொருட்களால் நிரப்பப்படவில்லை. மாறாக ஒரு நவீன தோற்றத்தோடு பழைய முறைகளைத் தாண்டிய ஒன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு நுழை வாயில்களைக் கொண்ட இது புல்வெளி, அறைகள், ஒரு வழிபாட்டு அரை மற்றும் ஒரு படிப்பறை ஆகியவற்றை கொண்டுள்ளது.

லக்ஷ்மி  மிட்டல் - பங்களா எண் 22

லக்ஷ்மி மிட்டல் - பங்களா எண் 22

ஆர்செலார் மித்தல் நிறுவன தலைவர் மற்றும் செயல் அதிகாரியான லக்ஷ்மி மித்தல் இந்தியாவின் மிகப்பெரும் தொழிலதிபர்களும் ஒருவர். லண்டனில் அவருக்கு மிகவும் விலை மதிப்புள்ள வீடு சொந்தமாக உள்ளது. அவர் ஒரு இராஜ வாழ்க்கை வாழ விரும்புவது அவர் வாங்கும் சொகுசு வீடுகள் மூலம் நமக்கு புலனாகிறது. டெல்லி அவுரங்கசீப் ரோடில் அமைந்துள்ள இவருடைய பங்களா எண் 22 அவருடைய விலைமதிப்பு மிக்க சொத்துக்களில் ஒன்று.

பங்களா எண் 22

பங்களா எண் 22

இந்த ஆடம்பர மாளிகை பல வெளிநாட்டு தூதரகங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளதோடு பிர்லாவின் வீட்டிற்கு மிக அருகில் உள்ளது. தலைநகரில் உள்ள மிகவும் செழிப்பு மிக்க பகுதிகளில் இதுவும் ஒன்று. இந்தியாவில் உள்ள இந்த வீட்டைத் தவிர அவருடைய வீடுகளில் தாஜ் மித்தல், சம்மர் பேலஸ் மற்றும் பெண்ட் ஹவுஸ் லண்டன், பேலஸ் கிரீன்ஸ் எண் 6 மற்றும் பேலஸ் கிரீன்ஸ் எண் 9 (யுனைட்டட் கிங்டம்) மற்றும் ஸ்காட்லாண்தில் உள்ள ஸ்காட்லாந்த்து ஹோம் ஆகியவை குறிப்பிடத் தக்கவை.

விஜய் மல்லையா - வைட் ஹவுஸ் இன் ஸ்கை

விஜய் மல்லையா - வைட் ஹவுஸ் இன் ஸ்கை

இந்தியக் கோடீஸ்வரர்களைப் பற்றி பார்க்கும்போது விஜய் மல்லையாவை மறக்க முடியுமா? ஒரு பிரபலமான ஆடம்பர பணக்காரர் ஆன மல்லையா சொகுசு வாழ்கைக்குப் பெயர் போனவர். இந்த ரசனை அவருடைய சொத்துக்களில் வெகு நன்றாகவே பிரதிபலிக்கும். கிங்பிஷர் டவரில் உள்ள வைட் ஹவுஸ் இன் ஸ்கை வீடு இவர் வைத்திருக்கும் வீடுகளிலேயே மிகவும் விலை மதிப்புடையது. 4.5 ஏக்கர் பரப்புடைய ஒரு பரம்பரை வீடு இந்த 34 அடுக்கு மாளிகையை கட்டுவதற்காக இடிக்கப்பட்டது.

வைட் ஹவுஸ் இன் ஸ்கை

வைட் ஹவுஸ் இன் ஸ்கை

பெங்களூருவில் உள்ள யுபி சிட்டியில் உள்ள இந்த குடியிருப்புத் திட்டம் 82 வீடுகளைக் கொண்டிருந்தாலும் 72 வீடுகள் மட்டுமே விற்பனைக்கு உள்ளன. மீதமுள்ள 10 வீடுகள் மல்லையாவின் குடும்ப உறுப்பினர்களால் பகிர்ந்துகொள்ளப்படும். வைட் ஹவுஸ் இன் ஸ்கை 33 மற்றும் 34 ஆம் தளத்தில் உள்ள ஒரு பெண்ட் ஹவுஸ் எனப்படும் சொகுசு வீடு. இந்தக் கட்டிடம் ஒரு ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு மதுபான அறை, சுடுநீர் நீச்சல் குளம், அழகு நிலையம், திறந்த வெளி நீச்சல் குளம் மற்றும் உடல் மெருகேற்றும் வசதி (ஸ்பா) ஆகியவற்றை கொண்டிருக்கும். இந்த வீட்டின் கூரையில் ஹெலிபேடும் அமைக்கப்பட்டிருக்கும்

அனில் அம்பானி

அனில் அம்பானி

அனில் அம்பானியின் புதிய வீடு மும்பையின் பாளி ஹில் பகுதியில் கட்டப்பட்டு வருகிறது. இதுவும் இந்தியாவில் விலை மதிப்பு மிக்க வீடாகக் கருதப்படுகிறது. இந்த 17 மாடிக்கு கட்டிடம் முதலில் 150 மீட்டர் உயரத்திற்கு திட்டமிடப்பட்டாலும் பின்னர் அரசாங்க அதிகாரிகளால் 66 மீட்டராகக் குறைக்கப்பட்டது. இந்த வீடு முடிக்கப்பட்டால் இரு அம்பானி சகோதரர்களும் உலகின் மிக விலையுயர்ந்த வீட்டிற்குச் சொந்தக்காரர்களாக இருப்பர் எனக் கருதப்படுகிறது.

கவுதம் சிங்ஹானியா - ஜேகே ஹவுஸ்

கவுதம் சிங்ஹானியா - ஜேகே ஹவுஸ்

ரேமண்ட் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனரும் ஆனா கவுதம் சிங்ஹானியாவின் வீடு 37 அடுக்குகளைக் கொண்ட 145 மீட்டர் உயரமுள்ள வீடு. அம்பானியின் ஆன்டிலியா வீட்டிற்கு அடுத்தபடியாக மிகவும் உயரமான குடியிருப்பாக இது கட்டி முடிக்கப்பட்டவுடன் விளங்கும்.

ஜேகே ஹவுஸ்

ஜேகே ஹவுஸ்

இது நீச்சல் குளம், உடற்பயிற்சிக்கூடம் (ஜிம்), ஸ்பா, ஆறு அடுக்கு கார் பார்க்கிங், பெரிய அபார்ட்மெண்டுகள், ஒரு ஹெலிபேட் மற்றும் ஒரு சிறந்த அருங்காட்சியகம் ஆகியவற்றை கொண்ட ஒரு ஆடம்பரமான குடியிருப்பாகத் திகழும்.

'கிங்பிஷர் வில்லா'

'கிங்பிஷர் வில்லா'

<strong>மதுவும் மாதுவுமாய் இருந்த மல்லையா-வின் 'கிங்பிஷர் வில்லா'.. இப்போது அரசின் பிடியில்...!</strong>மதுவும் மாதுவுமாய் இருந்த மல்லையா-வின் 'கிங்பிஷர் வில்லா'.. இப்போது அரசின் பிடியில்...!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

7 Most Expensive Billionaire Homes In India

Indian billionaires live an extravagant lifestyle and it reflects in the real estate they own, especially their private houses or residential properties. These adobes are equipped with all the luxuries of the world and living in them are some of the biggest names from various industries.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X