விண்ணை முட்டும் 'விலை'.. தலை சுற்றும் 'நிலை'.. இந்தியாவின் காஸ்ட்லியான தெருக்கள்..!

By Ashok CR
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு நாட்டின் தலையெழுத்தை பணத்தை வைத்து மதிப்பீடு செய்வதை விட, அதன் சுவர்கள் மற்றும் தாழ்வாரங்களை வைத்து வரையறுக்கலாம். சொல்லப்போனால், அதனால் தான் ஒரு நாட்டின் அரசியல் மையங்கள் வழக்கமாக விலையுயர்ந்த ரியல் எஸ்டேட் மையங்களாக இருக்கின்றன.

 

பெரும்பாலும், சக்தி வாய்ந்த அரசாங்க இயந்திரத்தின் ஒரு அங்கமாக நீங்கள் இல்லாத வரை, இத்தகைய அரசியல் அதிகாரமையங்களில் வாழ்வதற்கான தேர்வை தனி நபரான எடுக்க முடியாது. ஆனாலும், உங்களது தனிப்பட்ட திறனால், அவற்றுக்கு அருகில் உள்ள இடம் விற்பனைக்கு வந்தால் அதனை நீங்கள் வாங்கலாம்.

இப்போது புரிகிறதா, ஏன் நம் நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள லுட்யன் ஸோன் பகுதியில் ரியல் எஸ்டேட் உச்சாணிக் கொம்பில் உள்ளதென்று?

மேலும், நிதி தலைநகரமான மும்பையிலும் கூட சில பகுதிகளில் இதே நிலை தான். அப்படி இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த ஐந்து வீதிகளைப் பற்றி ப்ராப்கைட் பட்டியலை இங்குப் பார்க்கலாம்.

அம்ரிதா ஷெர்கில் மார்க் (டெல்லி)

அம்ரிதா ஷெர்கில் மார்க் (டெல்லி)

இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் உள்ள லுட்யன் பங்களா ஸோனில் (எல்.பி.இசட்) வாழ நீங்கள் முடிவு செய்தால், நீங்கள் பணம் செலுத்துவது அந்தச் சொத்துக்காக மட்டும் இருப்பதில்லை; அதனுடன் சேர்த்து, நீங்கள் வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்து விட்டீர்கள் என்ற சான்றிதழுடன் கூடிய உங்கள் சொத்துக்கான பிரத்தியேக அடையாளம் அது.

அம்ரிதா ஷெர்கில் மார்க்கில் உள்ள பிரபலங்கள்

அம்ரிதா ஷெர்கில் மார்க்கில் உள்ள பிரபலங்கள்

விடுதலைக்கு முன்னாள் லாகூரை சேர்ந்த அழகிய ஓவியரான அம்ரிதா ஷெர்கில் அவர்களின் நினைவாகப் பெயரிடப்பட்ட இந்த வீதியில் சில அரசியல் பெரும் தலைகள் மட்டுமல்லாது, பாரதி என்டர்ப்ரைஸ் தலைவர் மற்றும் குழு முதன்மை இயக்க அதிகாரி சுனில் மிட்டல், பூஷன் பவர் & ஸ்டீல் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சிங்கால் மற்றும் ஹிந்துஜா குழுவின் ப்ரோமோட்டர்கள் ஆகியோர்களுக்கும் இங்கு வசிக்கின்றனர்.

அப்துல் கலாம் சாலை  (அவுரங்கசீப் சாலை, டெல்லி)
 

அப்துல் கலாம் சாலை (அவுரங்கசீப் சாலை, டெல்லி)

எல்.பி.இசட்.-ன் ஒரு அங்கமான அவுரங்கசீப் சாலையும் கூட அம்ரிதா ஷெர்கில் மார்க்கை போலவே மிகவும் சக்தி வாய்ந்த மையமாகும். பிரதம மந்திரியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு (7, ரேஸ் கோர்ஸ் சாலை) மிகவும் நெருக்கமான தெரு என்பதால், அதிகாரமுள்ள அந்தஸ்தை குறிக்கும் சின்னமாக இது விளங்குகிறது.

அவுரங்கசீப் சாலையில் உள்ள பிரபலங்கள்

அவுரங்கசீப் சாலையில் உள்ள பிரபலங்கள்

அவுரங்கசீப் சாலையில் வீடுகள் வைத்துள்ளவர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளவர்களில் சிலர் - ஆர்ஸெலர் மிட்டல் தலைவர் & சி.ஈ.ஓ. எல்.என்.மிட்டல், டி.எல்.எப். தலைவர் & சி.ஈ.ஓ. கே.பி.சிங், மேக்ஸ் இந்தியா தலைவர் அனால்ஜித் சிங், ஹெல்த்கேர் மொகல் மல்விந்தர் மற்றும் ஷிவிண்டர் சிங், கோடீஸ்வரர் ரவி ஜெய்பூரியா, பூஞ் லாயிட் தலைவர் அடுல் பூஞ் மற்றும் ஜிண்டால் ஸ்டீல் & பவர் தலைவர் நவீன் ஜிண்டால்.

அல்டாமவுண்ட் சாலை (மும்பை):

அல்டாமவுண்ட் சாலை (மும்பை):

உலகத்தில் உள்ள மிகவும் விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் & எம்.டி. முகேஷ் அம்பானியின் வீடான ஆன்டிலியா இங்கு தான் அமைந்துள்ளது. ஆதித்யா பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்களம் பிர்லா, ஜெட் ஏர்வேஸ் தலைவர் நரேஷ் கோயல், தி மபட்லால் இண்டஸ்ட்ரீஸ் ப்ரோமோட்டார்ஸ் மற்றும் டாடா குழும நபர்கள் போன்ற பிற பணக்காரர்களும் இந்தச் சாலையில் தான் வசிக்கிறார்கள்.

மலபார் ஹில் (மும்பை):

மலபார் ஹில் (மும்பை):

உருவகத்திலும் பெயருக்கு ஏற்றதைப் போலவும் உயரத்தில் அமைந்துள்ள இந்த இடத்தை வளர்த்தது கடந்த நூற்றாண்டு கார்ப்பரேட் திமிலங்களாக திகழ்ந்த ஆதி கோத்ரேஜ், ஷாபூர்ஜி பலோன்ஜி, வேணுகோபால் தூட், எஸ்ஸார் குழுமத்தின் ருயஸ், கோடீஸ்வர முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, மற்றும் ஜெ.பி. கெமிக்கல்ஸின் பிரணவ் மோடி.

சதாசிவநகர் (பெங்களூரு)

சதாசிவநகர் (பெங்களூரு)

ரியல் எஸ்டேட் என வரும் போது, இந்தியாவின் சிலிகான் வேலியான பெங்களூரு, டெல்லிக்கும் மும்பைக்கும் மிகத் தூரத்தில் இல்லை. இங்குள்ள சதாசிவநகரில் சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் மற்றும் இதர பழங்கால பணக்காரர்கள் வசிக்கிறார்கள். நகரத்தின் வடக்கே அமைந்துள்ள இங்கே, தென் இந்தியாவில் மிகவும் பிரபலமாக திகழும் பலரும் வசிக்கின்றனர்.

உலகளவில்..

உலகளவில்..

உலகின் மிகவும் காஸ்ட்லியான தெருக்கள் இதுதான்..!உலகின் மிகவும் காஸ்ட்லியான தெருக்கள் இதுதான்..!

சூப்பர் ஐடியா..!

10 வருடத்தில் ரூ.17 லட்சம் சேமிக்க சூப்பர் ஐடியா..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 Expensive Streets That Are Centres Of Power In India

The walls and corridors that witness a country’s fate being defined are certainly worth more than what money can measure. Perhaps that is why the political centres of a country usually house some of the costliest real estate.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X