இந்தியாவில் உள்ள டாப் 10 ஐடி நிறுவனங்கள் இவை தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தகவல் தொழில்நுட்ப துறை இந்தியாவில் மிகப் பெரிய சேவைத் துறையாக உள்ளது. இது நாட்டை வளர்சி பாதைக்கு எடுத்துச் செல்லவும் பெறும் பங்கு வகிக்கிறது.

நாம் இங்கு 2016-இல் இந்தியாவில் வருவாய் மற்றும் லாபத்தில் முதல் 10 இடத்தைப் பிடித்து இருக்கும் நிறுவனங்களைப் பற்றி பார்ப்போம்.

இதில் அளிக்கப்பட்ட தரவுகள் அனைத்தும் 2015-2016 நிதி ஆண்டு வருவாய் மற்றும் லாபத்தைப் பொருத்து அளிக்கப்படுகிறது.

10. ரோல்டா

10. ரோல்டா

மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரோல்டா ஐடி நிறுவனம் 1989 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

பாதுகாப்புத் துறை, அரசு திட்டங்கள், எண்ணை, போன்ற பல திட்டங்களில் இந்த நிறுவனம் தொழில்நுட்ப வசதியை வழங்கி உள்ளது. இந்நிறுவனம் உலகளவில் வணிக நுண்ணறிவு மற்றும் பகுப்பாய்வு ஐடி சேவையில் பேர் பெற்ற ஒரு நிறுவனமாகும்.

பிக் டேட்டா மற்றும் அனலிட்டிக்ஸ் சேவைக்காக நாஸ்காம் விருது பெற்ற நிறுவனமான இந்நிறுவனம் ஆரக்கிள், எஸ்ஏபி, தால்ஸ் போன்ற நிறுவனங்களுடன் இணைப்பில் உள்ளது.

ரொல்டா நிறுவனம் 3899 கோடி வருவாயுடன் 165 கோடி லாபத்தைச் சென்ற நிதி ஆண்டில் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

09. ஆரக்கிள் ஃபினான்ஷியல் சர்வீசஸ் மென்பொருள் லிமிட்டட்

09. ஆரக்கிள் ஃபினான்ஷியல் சர்வீசஸ் மென்பொருள் லிமிட்டட்

ஆரக்கிள் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஃபினான்ஷியல் சர்வீசஸ் சாப்ட்வேர் லிமிட்டட் தனியாகச் செயல்பட்டு வருவதால் இந்திய ஐடி நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெற்று உள்ளது.

மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் கோர் பேங்கிங், இன்வெஸ்டர் சர்வீஸிங், பிடைவேட் பேங்கிங், டைரக்ட் பேங்கிங் போன்ற ஃபினான்ஷியல் சேவைகளுக்கான மென்பொருளை அளித்து வருகிறது.

ஆண்டுக்கு 3717 கோடி ரூபாய் வருவாயுடன் 928.85 கோடி லாபம் சம்பாதிக்கிறது இந்த நிறுவனம்.

 

08. மைண்ட்ட்ரீ

08. மைண்ட்ட்ரீ

பெங்களூரைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மைண்ட்ட்ரீ நிறுவனம் 1999 ஆம் ஆண்டு துவங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் 16000 ஊழியர்கள் வேலை செய்வதாக கூறப்படுகிறது.

ஆண்டுக்கு 4689.6 கோடி வருவாயுடன் 603.3 கோடி லாபம் பெறும் நிறுவனமாக மைண்ட்ட்ரீ வளர்ந்துள்ளது.

 

07. எல்அண்ட்டி இன்ஃபோடெக்

07. எல்அண்ட்டி இன்ஃபோடெக்

உற்பத்தித் துறையில் லார்சன் அண்ட் டூப்ரோ உலகளவில் பேர் போன நிறுவனம். உற்பத்தித் துறை போன்றே ஐடி துறையிலும் 1997 ஆம் அண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் 5847.06 கோடி வருவாயுடன் 803.1 கோடி லாபத்துடனும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

06. எம்பேஸிஸ்

06. எம்பேஸிஸ்

எம்பேஸிஸ் நிறுவனமும் இந்திய நிறுவனங்களில் ஒன்றே. 2008 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தை எச்பி நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு, மும்பை, பூனே, சென்னை என பல இடங்களை தங்களது நிறுவனத்தின் அலுவளகத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆண்டிற்கு 6150 கோடி வருவாயுடன் 758 கோடி லாபத்தை ஈட்டி 6வது இடத்தை எம்பேஸிஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

05. டெக் மகேந்திரா

05. டெக் மகேந்திரா

இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஐடி நிறுவனங்களில் டெக் மகேந்திராவும் ஒன்று. சத்யம் நிறுவனத்தை வாங்கிய பிறகு மகேந்திரா சத்தியம் என்று அழைக்கப்பட்டு வந்த இந்நிறுவனம் பின்பு டெக் மகேந்திரா என்று அழைக்கப்பட்டு வருகிறது.

ஆண்டுக்கு 25727.2 கோடி வருவாயுடன் இயங்கி வரும் இந்த நிறுவனம் 2693 கோடி லாபத்தைச் சென்ற நிதி ஆண்டில் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

 

04. எச்சிஎல் டெக்னாலஜிஸ்

04. எச்சிஎல் டெக்னாலஜிஸ்

1991 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி நொய்டாவில் தொடங்கப்பட்ட எச்சிஎல் டெக்னாலஜிஸ் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் மிகவும் முக்கியமான நிறுவனமாகும்.

தமிழகத்தைச் சேர்ந்த சிவ நாடாரால் துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் தற்போது வரை தலைவராக நீடித்து வருகிறார்.

ஆண்டிற்கு 40527.5 கோடி வருவாய் ஈட்டு வரும் இந்நிறுவனம் 7267 கோடி ரூபாய் லாபம் ஈட்டி 4 வது இடத்தைப் பிடித்துள்ளது.

 

03. விப்ரோ

03. விப்ரோ

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு 1945 ஆம் ஆண்டு ஒரு சிறு நிறுவனமாகத் துவங்கப்பட்ட விப்ரோ 1981 ஆ முதன் முதலாக ஐடி துறையில் நுழைந்தது.

பெங்களூருவைத் தலைமை இடமாக செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தில் 1,70,000 ஊழியர்கள் இப்போது பணியாற்றி வருகின்றனர்.

ஆண்டுக்கு 45096.4 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் விப்ரோ 8099 கோடி லாபத்துடன் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

 

இன்ஃபோஸிஸ்

இன்ஃபோஸிஸ்

இந்தியாவில் இரண்டாம் மிகப் பெரிய ஐடி நிறுவனம் இஃபோஸிஸ். 1981 ஆம் ஆண்டு ஒரு சிறிய ஐடி நிறுவனமாக நாராயண மூர்த்தியால் துவங்கப்பட்டது. இன்று 9.12 பில்லியன் டாலர் மதிப்புதக்க நிறுவனமாக வளர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

1,94,000 ஊழியர்கள் பணியாற்றி வரும் இந்நிறுவனம் ஆண்டுக்கு 65,569 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி 18,982 கோடி லாபத்துடன் இயங்கி வருகிறது.

 

01. டிசிஎஸ் - டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்

01. டிசிஎஸ் - டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்

இந்தியாவின் மிகப் பெரிய பழமையான ஐடி நிறுவனம் டிசிஎஸ் இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்து உள்ளது அதே போல உலகளவிலும் இது ஒரு மிகச் சிறந்த ஐடி நிறுவனமாகும்.

1968 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனத்தில் 3,50,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது அலுவலகத்தை இந்நிறுவனம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆண்டிற்கு 1,07,542.5 கோடி வாவாய் ஈட்டி 23,972 லாபத்துடன் இந்நிறுவனம் இயங்கி வருகிறது

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 10 Information Technology Companies in India 2016

Top 10 Information Technology Companies in India 2016
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X