பிரதமர் மோடியின் பணமில்லா டிஜிட்டல் பரிவர்த்தனையினால் இந்தியா சந்திக்க இருக்கும் இரண்டு பிரச்சனைகள்.

டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யுங்கள் என்று விளம்பரப் படுத்த காரணம் குறைவான இணையக் குற்றங்கள் இந்தியாவில் நடப்பது ஆகும்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாடு முழுவதும் இணைய இணைப்பும், உயர் இணையப் பாதுகாப்பும் இருக்கும் போது தான் பணமில்லா பொருளாதாரம் சாத்தியமாகும்.

இருந்தாலும் அதைப்பற்றி இந்தியா பொருட்படுத்தாமல் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யுங்கள் என்று விளம்பரப் படுத்த காரணம் குறைவான இணையக் குற்றங்கள் இந்தியாவில் நடப்பது ஆகும்.

இணையதளத்தில் இருந்து பதிவிறக்கும் வேகத்தில் உலகளவில் 96 வது இடத்திலும், பேண்ட்விட்த் இருப்பில் 105 வது இடத்திலும் இந்தியா உள்ளது.

வங்கதேசம் மற்றும் நேபாளத்தில் உள்ளதை விட இந்தியாவில் பதிவிறக்கும் வேகம் குறைவாக இருப்பதாகக் கூறப்படுகின்றது.

வல்லுநர்கள் கருத்து

வல்லுநர்கள் கருத்து

பயனர்கள் மற்றும் வல்லுநர்கள் அதிகரித்து வரும் இணையக் குற்றங்களை கண்டு வருத்தப்படுகின்றனர். இணைய வல்லுநர்கள் இந்தியாவில் சைபர் குற்றம் அதிகம் இல்லை என்றாலும் ஏற்கனவே நடந்த சைபர் குற்றங்களுக்கு சரியான தீர்வைக் காவல்துறை உட்பட யாரும் அளிக்கவில்லை என்றும் அதனால் தான் மக்கள் ட்ஜிட்டல் பரிவர்த்தனை செய்ய அஞ்சுகின்றனர் என்று கூறுகின்றனர்.

பாதுகாப்பான இணையதள பண பரிவர்த்தனை செய்வதற்காக செய்ய வேண்டிய உள்கட்டமைப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போன்றவற்றுக்கு உதவ அரசு முன்வர வேண்டும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 

சைபர் குற்றங்கள்

சைபர் குற்றங்கள்

சைபர் குற்றங்களில் இந்தியாவைப் பொருத்த வரை உலகளவில் 6 வது இடத்தில் உள்ளது. சைபர் குற்றங்கள் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

டிடிஓஎஸ் தாக்குதல்கள்

டிடிஓஎஸ் தாக்குதல்கள்

டிடிஓஎஸ் தாக்குதல்கள் என்றால் இணையதள சேவை போன்றவற்றின் மீது தாக்குதல் நடப்பது என்பதாகும். இது போன்ற தாக்குதல் அதிகம் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5 வது இடத்தில் உள்ளது. டிடிஓஎஸ் தாக்குதல்கள் முக்கியமாக நடப்பது சில முக்கிய விவரங்களை திருடுவதற்காகத் தான் என்று கூறப்படுகின்றது.

டாப் 5 டிடிஓஎஸ் தாக்குதல்கள் நடைபெறும் இடங்கள்

டாப் 5 டிடிஓஎஸ் தாக்குதல்கள் நடைபெறும் இடங்கள்

சீனா 20.7 சதவீதம், இங்கிலாந்து 25.6 சதவீதம், அமெரிக்கா 17.04 சதவீதம், இந்தியா 6.95 சதவீதம், ஸ்பெயின் 6.87 சதவீதம் டிடிஓஎஸ் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.

இணையதள செயலிகள் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 10 நாடுகள்

இணையதள செயலிகள் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 10 நாடுகள்

சைபர் குற்றங்களில் இணையதள செயலிகள் தாக்குதலில் சேவை பாதிக்கப்பட்ட டாப் 10 நாடுகளில் அமெரிக்கா 66 சதவீதம், ஜெர்மனி 5 சதவீதம், பிரேசில் 5 சதவீடஹ்ம், மலேஷியா 3 சதவீதம், இந்தியா 3 சதவீதம், ஜப்பான் 3 சதவீதம், ஆஸ்த்ரேலியா 3 சதவீதம், இங்கிலாந்து 3 சதவீதம், சீனா 1 சதவீதம், ஃபிரான்ஸ் 1 சதவீதமும் ஆகும்.

பதிவிறக்கும் வேகம்

பதிவிறக்கும் வேகம்

இணையதளம் பதிவிறக்கும் செய்யும் வேகத்தில் அமெரிக்கா 21 வது இடத்திலும், நேப்பால் 90 வது இடத்திலும், வங்கதேசம் 91 வது இடத்திலும், இராக் 95 வது இடத்திலும், இந்தியா 96 வது இடத்திலும் பின்தங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சராசரி இணைய வேகம்

சராசரி இணைய வேகம்

உலகளவில் இந்தியாவின் சராசரி இணையதள பயன்பாட்டு வேகம் 105 வது இடத்தில் 4.1 எம்பிபிஎஸ் வேகமாக உள்ளது குறிப்பிடத்தக்தாகும்.

இணைய பேண்டுவித்

இணைய பேண்டுவித்

இணையதள பேண்டுவித் உள்ள நாடுகளில் இலங்கை, சீனா, தென் கொரியா, இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகள் இந்தியாவை விட முன்னேறி உள்ளன.

இணையத் தடை

இணையத் தடை

இன்று வரை மெட்ரோ நகரங்களில் உள்ள வங்கிகள் பல இணையத் தடையில் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதுவே கிராமங்கள், சிறு நகரங்களில் இன்னும் அதிகம்.

இதை எல்லாம் பார்க்கும் போது பணமில்லா பரிவர்த்தனையைக் கொண்டு வரும் முன்பு இந்தியா இந்தச் சிக்கலில் இருந்து சிறப்பாக பணியாற்றி சேவை அளிதால் தான் பணமில்லா பொருளாதாரம் சாத்தியமாகும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PM Modi's cashless economy push has 2 worries: India has low esecurity & bandwidth

PM Modi's cashless economy push has 2 worries: India has low esecurity & bandwidth
Story first published: Saturday, December 24, 2016, 15:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X