வானாக்ரை ரான்சம்வேர் தாக்குதல் காரணமாக இந்திய ‘ஏடிஎம்’கள் மூடப்பட்டிருக்கின்றனவா? ஆர்பிஐ

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகம் முழுவதிலும் வானாக்ரை ரான்சம்வேர் வைரைஸ் தாக்குதல் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது. அதில் இருந்து இந்தியா தப்பிக்க ஏடிஎம் அனைத்தையும் மூடவும் என்றும் மென்பொருள் புதுப்பித்த பிறகு பயன்பாட்டிற்கு அனுமதிக்கவும் என்று ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளது.

 

இந்திய அரசு வானாக்ரை ரான்சம்வேர் குறித்துச் சிவப்பு எச்சரிக்கை மணியை எழுப்பியுள்ளது. இதன் மூலம் சைபர் தாக்குதலில் இருந்து தப்பிக்க வங்கிகள் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

முன்னணி நடவடிக்கை ஆர்பிஐ அறிவுறுத்தல்

முன்னணி நடவடிக்கை ஆர்பிஐ அறிவுறுத்தல்

இந்திய அரசு இந்தத் தாக்குதலில் இருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ளப் பல முன்னணி நடவடிக்கையை எடுத்து வருகின்றது. இத்தானால் தான் ஆர்பிஐ அனைத்து வங்கிகளையும் தங்களது ஏடிஎம் மையங்களில் உள்ள கணினிகளின் இயங்குதளத்தைப் புதுப்பித்த பிறகு பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.

புதுப்பிக்காத மென்பொருளில் செயல்பட்டு வரும் இந்திய ஏடிஎம்கள்

புதுப்பிக்காத மென்பொருளில் செயல்பட்டு வரும் இந்திய ஏடிஎம்கள்

இந்திய ஏடிஎம்கள் பெரும்பாலானவை விண்டோஸ் இயங்கு தள மென்பொருள் மூலமாகச் செயல்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக 60 சதவீதத்திற்ம் அதிகமான ஏடிஎம் கணினிகள் அதாவது 2.25 லட்சத்திற்கும் அதிகமான ஏடிஎம் கணினிகள் விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தில் செயல்பட்டு வருகின்றன.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதுப்பித்தல் மென்பொருள்
 

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதுப்பித்தல் மென்பொருள்

மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தச் சைபர் தாக்குதலை தவிர்க்கும் விதமாகப் புதுப்பித்தல்களை அறிமுகம் செய்துள்ளது. எனவே புதிய இயங்குதள மென்பொருளுக்கு மாறுவதன் மூலமாக இந்தப் புதுப்பித்தலை பயன்படுத்திச் சைபர் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும்.

இந்திய ஏடிஎம்களில் பாதிப்பு இல்லை

இந்திய ஏடிஎம்களில் பாதிப்பு இல்லை

எனினும் ஏடிஎம் ஆப்ரேட்டர்கள் இந்திய ஏடிஎம்களில் இதுவரை எந்தப் பாதிப்பும் இல்லை என்றும், ஏடிஎம் கணினிகள் எந்தத் தரவையும் சேமித்து வைக்காது என்றும் தெரிவித்துள்ளனர்.

ஹேக்கர்கள் கேட்கும் தொகை எவ்வளவு தெரியுமா?

ஹேக்கர்கள் கேட்கும் தொகை எவ்வளவு தெரியுமா?

வானாக்ரை ரான்சம்வேர் தாக்குதல் மூலமாக விண்டோஸ் கணினிகள் தான் பெரும்பாலும் தாக்கப்படும் என்றும், இந்தத் தக்குதலில் பாதிக்கப்பட்ட கணினி பயன்படுத்துனரிடம் இருந்து வங்கி கணக்கு மூலமாக 19,000 முதல் 38,000 வரை ஹேக்கர்கள் பணத்தைக் கேட்டுப் பெறுகின்றனர் என்றும் கூறப்படுகின்றது.

உலகளவில் பதிக்கப்பட்டுள்ள முக்கிய நிறுவனங்கள்

உலகளவில் பதிக்கப்பட்டுள்ள முக்கிய நிறுவனங்கள்

இந்தத் தாக்குதல் பிரிட்டிஷ் NHS, சர்வதேச கப்பல்சேவை FedEx, Telefonica மற்றும் பல நிறுவனங்களின் கணினிகளில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வானாக்ரை ரான்சம்வேர் தாக்குதல்

வானாக்ரை ரான்சம்வேர் தாக்குதல்

உலகளவில் உள்ள கணினிகள் மற்றும் கணினியை சார்ந்த அமைப்புகள் வானாக்ரை என்றிழைக்கப்படும் ரான்சம்வேர் சைபர் தக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ளன.

104 நாடுகளில் இருந்து லட்சக் கணக்கான கணினிகள் இந்தச் சைபர் தாக்குதலினால் பதிப்பை அடைந்துள்ளன. சைபர் தாக்குதலில் இது உதான் இன்றளவில் மிகப் பெரிய தாக்குதல் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

வானாக்ரை ரான்சம்வேர் தாக்குதல் கணினிகளை 24 மணி நேரத்திற்கு வேகத்தைக் குறைவாகச் செயல்பட வைக்கும். ஆனாலும் அனைத்து அரசுகளும் பிற்காலத்தில் எந்தப் பாதிப்புகளும் ஏற்படாத வகையில் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளன.

ரான்சம்வேர் என்றால் என்ன?

ரான்சம்வேர் என்றால் என்ன?

ரான்சம்வேர் சைபர் தாக்குதல் மூலமாக ஹேக்கர்களால் கணினிகளின் செயல்பாட்டை நிறுத்தி வைத்து அதில் உள்ள முக்கியத் தரவுகளை நீக்க முடியும். பின்னர் அந்தக் கணினியை பயன்படுத்தும் நபர்களிடம் இருந்து பணம் கேட்டுப் பெற்றுக்கொண்டு பிறகே விடுவிப்பார்கள்.

இந்தச் சைபர் தாக்குதல் ஒரு நெட்வொர்க் கட்டமைப்பு உள்ளது என்றால் அதன் உள்நுழைந்து செயல்படுத்துவதாகும். ரான்சம்வேர் தாக்குதல் ஒரு இணைப்பை கிளிக் செய்வதன் மூலமாக எளிதாகச் செய்ய முடியும். நெட்வொர்க்கில் உள்ள கணினியில் தக்குதல் ஏற்பட்டால் போது அந்த நெட்வொர்க்கில் உள்ள அனைத்துக் கணினிகளின் விவரங்களையும் திருட முடியும், நீக்க முடியும். பொதுவாக இந்தத் தாக்குதல் பணத்தை ஏமாற்றிப் பெறுவதற்காகவே பயன்படுத்துகின்றனர்.

வானாக்ரை அல்லது வானா டிகிரப்டர் என்றால் என்ன?

வானாக்ரை அல்லது வானா டிகிரப்டர் என்றால் என்ன?

வானாக்ரை அல்லது வானா டிகிரப்டர் தாக்குதல் என்றால் மைக்ரோசாப்ட் வர்டு கோப்புகள், பிடிஎப் கோப்புகள், எக்செல் தரவுகள் போன்ற அனைத்துக் கோப்புகளும் .wcry என்ற விரிவாக்கத்தில் மாற்றிப் பயன்படுத்த முடியாத படி தடுக்கப்பட்டு இருக்கும். அப்படி என்றால் கணினியில் உள்ள அனைத்துக் கோப்புகளும் பூட்டப்பட்டுப் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும். இப்படி ஒரு கணினி பாதிப்புக்குள்ளாகினால் கணினியின் பயனர் அவர்களுக்குப் பணத்தை வழங்கிய பிறகே கோப்புகளை அணுக முடியும்.

வானாக்ரை தக்குதல் LAN நெட்வொர்க்கில் பாதுகாப்பு மென்பொருட்கள் இல்லை என்றால் எளிதாக, வேகமாகச் செயல்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Due to Wannacry Ransomware attack ATMs in India going to shut, Open ATMs only after software update, suggests RBI

Due to Wannacry Ransomware attack ATMs in India going to shut, Open ATMs only after software update, suggests RBI
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X