மும்பையில் உள்ள விண்ணைத்தொடும் கட்டிடங்கள்..!

By Siva Lingam
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் மிக உயர்ந்த கட்டிடங்கள் அதிகளவில் உள்ள நகரம் மும்பை என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. இங்குச் சுமார் 3,000 கட்டிடங்கள் விண்ணைத் தொட முயற்சி செய்து வருகின்றன.

 

குடியிருப்புகள், வணிக வளாகங்கள், சில்லறை வணிகக் காம்ப்ளக்ஸ்கள் என மிக உயர்ந்த கட்டிடங்கள் இந்த மெட்ரோபாலிட்டன் நகரமான மும்பையில் அதிகளவில் காணப்படுகிறது. அவற்றில் சிலவற்றை இங்குப் பார்ப்போம்.

இம்ப்ரீயல் II

இம்ப்ரீயல் II

இந்தியாவின் மற்றும் மும்பையின் மிக உயர்ந்த கட்டிடம் தான் இந்த இம்பிரீயல் டவர் II. 256 மீட்டர் உயரம் கொண்ட இந்தக் கட்டிடம் ஒரு குடியிருப்புக் கட்டிடம் ஆகும். MP மில்ஸ் காம்பவுண்ட் என்ற பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டிடத்தில் மொத்தம் 60 மாடிகள் உள்ளன. இவற்றில் 40வது மாடிக்கு மேல் அபார்ட்மெண்ட் ஆக உள்ளது. ஒவ்வொரு அபார்ட்மெண்டும் 150 முதல் 270 டிகிரி வரை வெளிப்பக்க பார்வை இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் ஹஃபீஸ் என்பவரால் டிசை செய்யப்பட்டு ஷாபூர்ஜி பல்லாஜி குருப் நிறுவனத்தால் கட்டப்பட்டது.

அஹுஜா டவர்ஸ்

அஹுஜா டவர்ஸ்

அஹுஜா டவர்ஸ் இந்தியாவின் மற்றும் மும்பையின் இரண்டாவது பெரிய டவர் ஆகும். கடந்த 2015ஆம் ஆண்டுக் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் அஹூஜா கன்ஸ்ட்ரக்சன்ஸ் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமானது. 54 மாடிகள் கொண்ட இந்தக் கட்டிடத்தின் மொத்த உயரம் 248 மீட்டர் ஆகும். இதில் உள்ள 78 அபார்ட்மெண்ட்களில் மும்பையின் மிகப்பெரிய தொழிலதிபர்கள் மற்றும் செல்வந்தர்கள் குடியிருக்கின்றனர். அவர்களில் ஒருவர் மும்பை ஐபிஎல் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த டவரின் 40வது மாடியில் 7 முக்கியமான அபார்ட்மெண்ட் உள்ளது. இந்தக் கட்டிடத்தின் இண்டீரியர் டிசைனிங் நியூயார்க நகரைச் சேர்ந்த வில்சன் அசோசியேட்ஸ் நிறுவனத்தால் செய்யப்பட்டது.

லோதா பெல்லிசிமோ
 

லோதா பெல்லிசிமோ

மும்பையில் உள்ள மகாலட்சுமி பகுதியில் அமைந்துள்ள இந்த லோதா பெல்லிசிமோ கட்டிடம் மும்பையின் மூன்றாவது பெரிய கட்டிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து 222 மீட்டர் உயரம் உள்ள கட்டிடத்தில் மொத்தம் 48 மாடிகள் உள்ளது. இந்தக் கட்டிடத்தில் இரண்டு, மூன்று மற்றும் BHK வீடுகள் உள்ளது. ஜெஃப்ராய் பாவா என்பவரால் டிசைன் செய்யப்பட்ட இந்தக் கட்டிடத்தில் ஒருசீல அபார்ட்மெண்ட்கள் அதிநவீன வசதியுடன் கூடிய 5BHK வீடுகள் உள்ளது. ஒவ்வொரு அபார்ட்மெண்ட் வீடும் கிழக்கே உள்ள கடற்கரை மற்றும் நகரின் அழகை ரசிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

ஆர்ச்சிட் என்கிளேவ் 2

ஆர்ச்சிட் என்கிளேவ் 2

ஆர்ச்சிட் என்கிளேவ் என்ற இந்தக் கட்டிடம் தற்போது கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் மிக உயர்ந்த கட்டிடங்களில் ஒன்று. இந்தக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டவுடன் மும்பையின் 4வது மிக உயர்ந்த கட்டிடமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை சென்ட்ரல் மிக அருகில் அமைக்கப்பட்டு வரும் இந்தக் கட்டிடத்தை DB ரியாலிட்டி நிறுவனம் கட்டிக் கொண்டு வருகிறது. 210 மீட்டர் உயரமுள்ள இந்த ஆர்ச்சிட் கிளேவ் கட்டிடம் முடிக்கப்பட்டவுடன் 52 மாடிக் கட்டிடமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கோஹினூர் ஸ்கொயர் டவர் I

கோஹினூர் ஸ்கொயர் டவர் I

48 மாடிகளைக் கொண்ட மும்பையின் மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்றான இந்தக் கோஹினூர் ஸ்கொயர் டவர் தற்போது கட்டப்பட்டுக் கொண்டு இருந்தாலும் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த வருடத்திற்குள் அனேகமாகக் கட்டுமானப் பணிகள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தக் கட்டிடம் ஒரு கமர்ஷியல் கட்டிடம் ஆகும். 206 மீட்டர் கொண்ட இந்த உயர்ந்த கட்டிடத்தில் ஓட்டல்கள், அலுவலகங்கள் மற்றும் கடைகள் விரைவில் வரவுள்ளன. தாதர் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கட்டிடத்து இரண்டு டவர்களும் கமர்ஷியல் கட்டிடங்அக்ள் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்டிலியா

அண்டிலியா

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி அவர்களுக்குச் சொந்தமான இந்த அண்டிலியா என்ற கட்டிடம் குறித்து அனேகமாகத் தெரியாதவர்கள், பேசாதவர்கள் இருக்க மாட்டார்கள். மும்பையில் உள்ள அல்டாமவுண்ட் என்ற பகுதியில் அமைந்துள்ள இந்தக் கட்டிடம் உலகின் மிக உயர்ந்த குடியிருப்பு வீடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்தக் கட்டிடத்தில் மூன்று ஹெலிகாப்டர் நிறுத்தும் ஹெலிபேட், கோவில், ஸ்பா, இரண்டு பொழுதுபோக்கு மையங்கள், நீச்சல் குளங்கள், 50 பேர் உட்கார்ந்து பார்க்கும் அளவில் உள்ள திரையரங்கம், பால்ரூம் என்று கூறப்படும் மிகப்பெரிய பார்ட்டி ஹல், பார்க்கிங் கேரேஜ் எனப் பிரமாண்டத்தின் உச்சமாக இந்தக் கட்டிடம் அமைந்துள்ளது.

பிளானெட் கோத்ரேஜ்

பிளானெட் கோத்ரேஜ்

தெற்கு மும்பையில் உள்ள மகாலட்சுமி பகுதியில் அமைந்துள்ள இந்தப் பிளானெட் கோத்ரேஜ் என்ற கட்டிடம் மும்பை மட்டுமின்றி இந்தியாவில் உள்ள உயர்ந்த கட்டிடங்களில் ஒன்று. இந்தக் கட்டிடத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவெனில் கட்டிடத்தைச் சுற்றி மிகப்பெரிய சமவெளி பகுதி உள்ளது. மொத்த இடத்தில் வெறும் 5% மட்டுமே கட்டிடத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வர்ல்ட் டிரேட் செண்டர் மும்பை

வர்ல்ட் டிரேட் செண்டர் மும்பை

மும்பை உலக வர்ல்ட் செண்டர் கட்டிடம் மும்பையில் உள்ள மிகப்பெரிய கட்டிடங்களில் மிக முக்கியமானது. மும்பையின் முக்கிய இடமான கஃபி பேரேட் பகுதியில் இந்தக் கட்டிடம் அமைந்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு வரை இந்தக் கட்டிடம் தெற்காசியாவில் உள்ள மிகப்பெரிய கட்டிடம் என்ற பெருமையைப் பெற்றிருந்தது. இம்ப்ரீயல் டவர் இந்தப் பெருமையை 2010 ஆம் ஆண்டு உடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓபராய் டிரிடெண்ட்

ஓபராய் டிரிடெண்ட்

இரவிலும் கூடப் பொன்போல் மின்னும் கட்டிடமான இந்த ஓபராய் டிரிடெண்ட் நரிமேன் பகுதியில் அமைந்துள்ளது. மும்பை நகரின் மிகப்பெரிய ஓட்டலாக இயங்கி வரும் இந்தக் கட்டிடத்தில் கடற்கரையின் அழகை ரசிக்கும் வகையில் அறைகள் அமைந்துள்ளதால் இங்குத் தங்குபவர்களுக்கு வித்தியாசமான அனுபவம் ஏற்படும் என்பது உறுதி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tallest Buildings in Indias Financial city Mumbai

Tallest Buildings in Indias Financial city Mumbai
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X