டாப் 50 ஆடம்பர பிராண்டுகளில் 3 இந்திய நிறுவனங்கள்.. போடு திகிட திகிட..!!

Written By:
Subscribe to GoodReturns Tamil

மக்கள் மத்தியில் எப்போதும் ஆடம்பர பொருட்களுக்கு மவுசு குறைவதில்லை, அது காராக இருந்தாலும் சரி, சாப்பிடும் உணவாக இருந்தாலும் சரி.

இந்த வகையில் உலகின் டாப் 50 ஆடம்பர பிராண்டுகளின் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை 3 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது.

3 இந்திய நிறுவனங்கள்

குளோபல் பவர்ஸ் ஆஃப் லக்சுரி கூட்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள 50 ஆடம்பர பிராண்டுகள் அடங்கிய பட்டியலில் 3 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது, இந்திய சந்தைக்குப் பெருமை.

இப்பட்டியலில் 30வது இடத்தில் கீதாஞ்சலி ஜெம்ஸ் லிமிடெட், 31வது இடத்தில் டைடன் கம்பெனி, 44வது இடத்தில் பிசி ஜூவல்லர் ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்று அசத்தியுள்ளது.

 

இந்திய சந்தை

இந்திய மக்கள் தொகையில் பணக்காரர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தாலும், கடந்த சில நாட்களாக இந்தியாவில் ஆடம்பர பொருட்களுக்கான சந்தைப் பெரிய அளவில் வளர்ந்துள்ளது.

இதை நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் ஒரு அங்கமாகவே பார்க்கப்படுகிறது.

 

மக்கள்

மேலும் இந்தியாவில் தற்போது நடுத்தர மக்களும் ஆடம்பர பொருட்களை அதிகளவில் பயன்படுத்த துவங்கியுள்ளனர். இது தனிமனித வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இது வளரும் சந்தைக்கு மக்கள் இத்தகைய எண்ணம் கூடுதல் வலிமையைச் சேர்க்கும்.

 

3 நிறுவனங்கள்

50 பிராண்டுகள் அடங்கிய இப்பட்டியலில் 3 வர்த்தகக் குழுமங்கள் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி ஒட்டுமொத்த ஆடம்பர சந்தையையே ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

இதுதான் அந்த நிறுவனங்கள்

1. LVMH மோட் ஹென்சி-லூயிஸ் விட்டார் எஸ்ஏ (Louis Vuitton, Bulgari, Emilio Pucci, DonnaKaran, TAGHeuer),

2. காம்பெயின் பைனான்சியரி ரிச்சிமான்ட் எஸ்ஏ (Cartier, Van Cleef & Arpels, Montblanc, Chloe)

3. தி எஸ்டீ லாடர் கம்பனீஸ் இன்க் (Estee Lauder, M.A.C., Aramis, Clinique, Aveda, Jo Malone).

 

வளர்ச்சி

கடந்த 5 வருடத்தில் சீனா, ரஷ்யா மற்றும் ஐக்கிய அரசு நாடுகள் ஆடம்பர பொருட்களுக்காகச் செலவிடும் தொகை சுமார் 70 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இதன் அளவு 53 சதவீதமாக மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

200 பில்லியன் டாலர்

உலகின் தலைசிறந்த 100 ஆடம்பர பிராண்டு நிறுவனங்கள் 2014-15ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 212 பில்லியன் டாலர் அளவிற்கு விற்பனை செய்துள்ளது. அதாவது சராசரியாக ஒரு பிராண்டு ஒரு வருடத்திற்கு 2.1 பில்லியன் டாலர்.

இன்றைய ரூபாய் மதிப்பில் 2.1 பில்லியன் டாலர் என்பது 13,614.3 கோடி ரூபாய்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

3 Indian brands among world's top 50 luxury goods companies

3 Indian brands among world's top 50 luxury goods companies
Story first published: Wednesday, May 24, 2017, 14:21 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns