மின்னல் வேகத்தில் பறக்கும் இந்தியாவின் 13 அதிவேக ரயில்கள்

By: Muneeswaran
Subscribe to GoodReturns Tamil

இந்தியா மக்கள்தொகையில் மட்டுமல்ல பிராந்திய அளவிலும் உலகின் ஒரு மிகப்பெரிய நாடாக இருப்பதால் போக்குவரத்து ஒரு முக்கியமான பிரச்சனையாக உள்ளது. இந்திய நாடானது 1,147,839 சதுர மைல்கள் பரப்பளவு கொண்டது. அதன் நிலப்பரப்பின் அடிப்படையில் உலகின் 8வது மிகப்பெரிய நாடாக உள்ளது.

எனவே இந்தியாவில் சுற்றுலா செல்வதாக இருந்தால் எந்த வகைப் போக்குவரத்து உகந்தது? என்று ஆராய்ந்து செல்ல வேண்டும்.

விமானங்கள் சுலபமான தேர்வாக இருந்தாலும் அவற்றின் கட்டணங்கள் மிக அதிகம். குறைந்த கட்டண பயணங்கள் மேற்கொள்வதாக இருந்தால் தரை வழி போக்குவரத்தே உசிதமானது. இந்த அழகான நாட்டில் பயணம் செய்ய மிகச் சிறந்த தேர்வு ரயில் பயணம் மட்டுமே.

ரயில் போக்குவரத்து இந்தியாவின் பெரும்பாலான மக்களின் விருப்பமாக உள்ளது. மக்களின் விருப்பம் மட்டும் அல்லாமல் மத்திய அரசின் முக்கிய வருவாய் அளிக்கும் பிரிவாக இந்திய ரயில்வே துறை உள்ளது.

இந்திய ரயில்வே

ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகியவற்றிற்குப் பிறகு உலகின் பெரும்பாலான ரயில்வேக்கள் உலகின் நான்காவது மிகப்பெரிய ரயில்வே பிரிவைக் கொண்ட இந்திய ரயில்வேயால் பராமரிக்கப்படுகின்றன. இந்தியாவில் முதல் ரயில் மும்பையிலிருந்து தானே வரை 1853 ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1947 ல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது 42 ரயில் பிரிவுகள் இருந்தன. கூடுதலாகச் சில விரைவு ரயில்களும் விடப்பட்டன.

அதிகவேக ரயில்வே

மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் அதிவேக சேவை அளிப்பது என்பது சாதாரண விஷயமில்லை. இந்நிலையிலும் விரைவு ரயில்கள் இந்திய ரயில்வேயின் அன்றாடச் சேவைகளில் குறைந்த எண்ணிக்கை நிறுத்தங்களுடன் அதிவேக ரயில்கள் இயங்கி வருகிறது.

இந்த ரயில்களின் பெயர் என்ன, அதன் வேகம் என்ன என்பதையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

 

13. ஜன சதாப்தி விரைவு ரயில்

அதிகபட்ச வேகம் : 11௦ கி.மீ. மணிக்கு.
இந்த ரயில் செல்லும் வழித்தடம் : கோட்டா சந்திப்பு - சாவை மாதோபூர் சந்திப்பு - கங்காபூர் சிட்டி - ஸ்ரீ மகாபிர்ஜி - ஹின்டான் சிட்டி - பாயானா சந்திப்பு - பரத்பூர் சந்திப்பு - மதுரா சந்திப்பு - பல்லப்கார் - ஹஸ்ரத் நிஜாமுதீன்.

இந்த ரயிலின் வேகம் மணிக்கு 11௦ கி.மீ. என்றபோதிலும், மணிக்கு 7௦ கி.மீ. வேகத்தில் 6 மணி நேரம் 35 நிமிடங்களில் 458 கி.மீ. தூரத்தைக் கடக்கிறது. கோட்டாவிலிருந்து செல்லும்போது வண்டி எண் 12௦59. ராஜஸ்தான், உத்தரப் பிரதேஷ், ஹரியான மற்றும் டெல்லி யை 12௦6௦ என்ற எண்ணுடன் கடந்து செல்கிறது.

 

12. மகாராஷ்டிரா சம்பர்க் கிராந்தி விரைவு வண்டி

அதிகபட்ச வேகம் : 11௦ கி.மீ. மணிக்கு.
இந்த ரயிலின் முதல் சேவை 2004 ல் தொடங்கப்பட்டது. வழித்தடம் : ஹஸ்ரத் நிஜாமுதீன் - கோட்டா சந்திப்பு - வடோதரா சந்திப்பு - போரிவலி - பான்ற டெர்மினஸ். தூரம் 1367 கி.மீ. தோராயமாக 19 மணிகளில் மணிக்கு 72 கி.மீ. வேகத்தில் செல்லும் இதன் எண்: 12908.

11.அலாஹாபாத் துரொண்டோ விரைவு ரயில்

அதிகபட்ச வேகம் : 12௦ கி.மீ. முதல் 13௦ கி.மீ. மணிக்கு.
2016 ம் ஆண்டின் அதிவிரைவு ரயிலான இது லோக்மான்யா திலக் டெர்மினஸ் லிருந்து அலாஹாபாத் சந்திப்புக்கு 19 மணி 10 நிமிடங்களில் மணிக்கு 7௦ கி.மீ. வேகத்தில் செல்கிறது.

1௦. துரொண்டோ விரைவு ரயில்

அதிகபட்ச வேகம் : 12௦ கி.மீ. முதல் 13௦ கி.மீ. மணிக்கு.
இந்த ரயிலின் முதல் சேவை 2௦௦9 ல் தொடங்கியது. 12273 என்ற எண்ணுடன் மணிக்கு 74 கி.மீ. வேகத்தில் செல்கிறது. வழித்தடம் : ஹௌரா சந்திப்பு - தன்பாத் சந்திப்பு - முகல் சராய் சந்திப்பு - கான்பூர் சென்ட்ரல் - புது டெல்லி .

9. மும்பை சென்ட்ரல் - அஹமதாபாத் குளிர்சாதன இரண்டடுக்கு விரைவு ரயில்

அதிகபட்ச வேகம் : 13௦ கி.மீ. மணிக்கு.
12931 மற்றும் 12932 என்ற எண்களுடன் மும்பை சென்ட்ரல் - அஹமதாபாத் குளிர்சாதன இரண்டடுக்கு விரைவு ரயில் பயணிக்கிறது. இடையில் எட்டு நிறுத்தங்கள் உள்ளன. நாடியாத் சந்திப்பு - ஆனந்த் சந்திப்பு - வடோதரா சந்திப்பு - பாருச் சந்திப்பு - சூரத் - வல்சாத் - வாபி - போரிவலி. 7 மணி 2௦ நிமிடத்தில் 493கி.மீ. தூரத்தை மணிக்கு 67 கி.மீ. வேகத்தில் கடக்கிறது.

8.மும்பை LTT - ஹஸ்ரத் நிஜாமுதீன் குளிர் சாதன அதிவிரைவு ரயில்

அதிகபட்ச வேகம் : 13௦ கி.மீ. மணிக்கு.
இந்தியாவின் பிரசித்தி பெற்ற குளிர்சாதன அதிவேக ரயில்களில் இதுவும் ஒன்று. 22109 என்ற எண்ணில் செல்லும் இதன் வழித்தடம் : லோக்மான்யா திலக் டெர்மினஸ் - கல்யான் சந்திப்பு - இகட்புரி - நாசிக் ரோடு - புசாவல் சந்திப்பு - போபால் சந்திப்பு - ஜான்சி சந்திப்பு - குவாலியர் சந்திப்பு - ஆக்ரா கண்டோன்மென்ட் - ஹஸ்ரத் நிஜாமுதீன். மணிக்கு 76 கி.மீ. வேகத்தில் 1518 கி.மீ. தூரத்தை 19 மணி 55 நிமிடத்தில் கடக்கிறது.

7. பாந்திரா டெர்மினஸ் ஹஸ்ரத் நிஜாமுதீன் கரீப் ரத் விரைவு ரயில்

அதிகபட்ச வேகம் : 13௦ கி.மீ. மணிக்கு.
12909 /10 என்ற எண்ணுடன் 1367 கி.மீ. களை 16 மணிகள் 35 நிமிடங்களில் மணிக்கு 82 கி.மீ. வேகத்தில் கடக்கிறது. ஏழு நிறுத்தங்கள் உள்ளன. ஹஸ்ரத் நிஜாமுதீன் - மதுரா சந்திப்பு - கோட்டா சந்திப்பு - ரத்லாம் சந்திப்பு - டாஹோத் - வதோதரா சந்திப்பு - சூரத் - போரிவலி - பாந்திரா டெர்மினஸ்.

6.ஹௌரா ராஜதானி விரைவு ரயில்

அதிகபட்ச வேகம் : 135 கி.மீ. மணிக்கு.
இந்த ரயில் புது டெல்லி, ஹௌரா மற்றும் கொல்கட்டா ஆகியவற்றை இணைக்கிறது. இந்தியாவின் முதல் ராஜதானி விரைவு ரயில் இது. வை-பை வசதி உள்ள ரயில் இது. மணிக்கு 86 கி.மீ. வேகத்தில் 145௦ கி.மீ. களை 16 மணிகள் 55 நிமிடங்களில் கடக்கும் இதன் எண் 12302.

5. புது டெல்லி - சீல்டாஹ் துரொண்டோ விரைவு ரயில்

அதிகபட்ச வேகம் : 135 கி.மீ. மணிக்கு.
2009 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது இந்த ரயில். இதன் சராசரி வேகம் மணிக்கு 88 கி.மீ. தூரம் 1468 கி.மீ. சராசரி பயண நேரம் 16 மணிகள் 55 நிமிடங்கள். ஐந்து நிறுத்தங்கள் உள்ளன : புது டெல்லி - கான்பூர் சென்ட்ரல் - முகல் சராய் சந்திப்பு - தன்பாத் சந்திப்பு - சீல்டாஹ் . இந்த வண்டியின் எண் : 12260.

4.மும்பை – புது டெல்லி ராஜதானி விரைவு ரயில்

அதிகபட்ச வேகம் : 140 கி.மீ. மணிக்கு.
2016 ம் ஆண்டின் அதிவேக ரயில்களில் ஒன்று. மணிக்கு 89 கி.மீ. சராசரி வேகத்தில் 1386 கி.மீ. தூரத்தை 15 மணிகள் 15 நிமிடங்களில் கடக்கிறது. வழித்தடம் : மும்பை சென்ட்ரல் - போரிவலி - சூரத் - வதோதரா சந்திப்பு - ரத்லாம் சந்திப்பு - நாக்ட சந்திப்பு - கோட்டா சந்திப்பு - புது டெல்லி.

1975 ல் அறிமுகம் செய்யப்பட்டது. 12951 என்ற எண்ணுடன் மும்பையிலிருந்து புது டெல்லி க்கும் 12952 என்ற எண்ணுடன் எதிர் திசையிலும் பயணிக்கிறது. இந்த ரயில் ராஜதானி விரைவு ரயில் என்ற திரைப்படத்தில் காண்பிக்கப்படுகிறது.

 

3. புது டெல்லி – கான்பூர் சதாப்தி விரைவு ரயில்

அதிகபட்ச வேகம் : 140 கி.மீ. மணிக்கு.
2010 ல் அறிமுகம் செய்யப்பட ரயில் சராசரியாக மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் 440 கி.மீ. தூரத்தை 4 மணி 55 நிமிடங்களில் கடக்கிறது. புது டெல்லியிலிருந்து காசியாபாத் சந்திப்பு மற்றும் எடவா சந்திப்பு வழியாகக் கான்பூர் சென்ட்ரல் சேர்கிறது. இதன் எண் 12034.

2. புது டெல்லி – ஹபிப்கஞ்ச் சதாப்தி விரைவு ரயில்

அதிகபட்ச வேகம் : 150 கி.மீ. மணிக்கு.
புது டெல்லி - ஹபிப்கஞ்ச் சதாப்தி விரைவு ரயில் 12002 என்ற எண்ணுடன் வடக்கு ரயில்வேயில் இயங்குகிறது. சராசரியாக 90 கி.மீ. வேகத்தில் 702 கி.மீ. தூரத்தை 7 மணி 50 நிமிடங்களில் கடந்து செல்லும் இதன் வழித்தடம் : புது டெல்லி - மதுரா சந்திப்பு - ஆக்ரா கண்டோன்மென்ட் - மோரேனா - குவாலியர் - ஜான்சி சந்திப்பு - லலித்பூர் சந்திப்பு - போபால் சந்திப்பு - ஹபிப் கஞ்ச். இது தனது முதல் சேவையை 1988 ல் தொடங்கியது.

1. காட்டிமான் விரைவு ரயில்

அதிகபட்ச வேகம் : 160 கி.மீ. மணிக்கு.
இந்தியாவின் அதிவிரைவு ரயில்களான 13 ரயில்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2016 ன் அதிவேக ரயில் இதுதான். மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் 188 தூரத்தை சராசரி வேகமான மணிக்கு 113 கி.மீ. வேகத்தில் 1மணி 40 நிமிடங்களில் பயணிக்கிறது. 12050 என்ற எண் கொண்ட இந்த ரயில் இரண்டு இடங்களில் நிற்கிறது. ஹஸ்ரத் நிஜாமுதீன் மற்றும் ஆக்ரா கண்டோன்மென்ட்.

பல்வேறு இயற்கை காட்சிகளை இந்திய ரயிலில் பயணம் செய்யும்போது ரசித்துக் கொண்டே செல்லும் இனிய அனுபவத்தைத் தவற விட மாட்டீர்கள்தானே.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

13 Fastest Trains in India in 2016

13 Fastest Trains in India in 2016 - Tamil Goodreturns | மின்னல் வேகத்தில் பறக்கும் இந்தியாவின் 13 அதிவேக ரயில்கள் - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Story first published: Sunday, May 28, 2017, 20:45 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns