உஷார்.. ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் வேகமாக இறந்துவிடுவார்களாம்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

சுறுசுறுப்பான இந்த உலகில் நாமும் வேகமாக ஓட வேண்டும் என்றாலும் உட்கார்ந்த இடத்தில் ஏசி-ல் வேலை என்பதனை தான் பலர் கவுரமாக நினைக்கின்றார்கள். ஆனால் இதுபோன்ற வேலை செய்பவர்களில் 60 சதவீதத்தினர் வாழ்க்கையை முழுமையாக வாழ முடியாமல் சீக்கிரமாக இறந்துவிடுவார்கள் என்று அன்மையில் வந்த ஒரு ஆய்வு கூறுகின்றது.

காலை 9 முதல் 5 மணி வரை ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டு வேலை செய்பவர்களாக நீங்கள் இருந்தால் குறைந்தது ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது இன்றைய வாழ்க்கை சூழலில் கட்டாயம் ஆகும்.

தவறான வாழ்க்கை முறை

உடல் உழைப்பு இல்லாமல் வேலை செய்வதால் ஆண்டுக்கு 90,000 நபர்கள் இறக்கின்றார்கள். 8 மணி நேரம் வரை உட்கார்ந்துகொண்டே ஒருவர் வேலை பார்க்கிறார் என்றால் 1 மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

உடற்பயறிச்சி செய்யவில்லை என்றால்

ஒருவேலை இப்படிச் செய்யவில்லை என்றால் வேகமாக நோய்வதிப்பட்டு இறக்க வாய்ப்பு உண்டு. இவர்கள் பெரும்பாலும் இதய நோய், பக்கவாதம் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறக்க நேரிடும் என்று ஆய்வறிக்கை கூறுகின்றது.

சோம்பேறியாக இருப்பது நல்லதல்ல

அலுவலகத்தில் உட்கார்ந்துகொண்டு வேலை செய்யும் ஒருவர் வீட்டிற்குச் சென்ற பிறகு சராசரியாக3 மணி நேரம் தொலைக்காட்சிகளைப் பார்க்கின்றனர்.

புகைபிடித்தலினால் இறப்பவர்களைப் போன்று சோம்பேறித்தனமாக்க இருப்பவர்களின் வாழ்க்கையும் வேகமாக முடிந்து போவதாக அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

உடற்பயிற்சி

ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வரை உட்கார்ந்து கொண்டு வேலை பார்ப்பவர்களில் 59 சதவீதத்தினர் வேலை பார்க்காமல் சும்மா இருப்பவர்களை விட வேகமாக 20 வருடத்தில் இறப்பதாகக் கூறப்படுகின்றது. எனவே இதனைத் தவிர்க்க 60 முதல் 75 நிமிடங்கள் வரையில் தினமும் உடற்பயிற்சி அவசியம் ஆகும்.

பாதிக்கப்படுவது இதயம் மட்டுமல்ல

இவர்களுக்கு இதய நோய் மட்டும் இல்லாமல் புற்றுநோய், வகை 2 நீரிழிவு மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்களிலிருந்தும் இறக்க நேரிடுவதாக ஆய்வு அறிக்கை கூறுகின்றது.

உட்கார்ந்த இடத்தில் வேலை செய்வது நாளுக்கு நாள் ஒருவருடைய உடல் உழைப்பினை குறைத்துக் கொண்டே செல்கின்றது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 

உடல் நலப் பிரச்சனைகள்

நுரை ஈரல் அளவு, காற்று சுவாசிக்கும் அளவும், காற்றுக் கொண்டு செல்தல், செறிமன கோளாறு மற்றும் சர்க்கரை உள்ளிட்ட வியாதிகள் வர நேரிடும்.

காலப்போக்கில், இது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு நம்மை இட்டுச்செல்கின்றது மற்றும் செயலிழப்பு நேரடியாக மூட்டுவலி உட்பட நீண்ட காலக் கால நோய்களுடன் தொடர்புபட்டுள்ளது.

 

முதியவர்களுக்கு அதிகப் பாதிப்பு

நடுத்தர வயது உடையவர்கள் மற்றும் முதுமை அடைந்தவர்கள் உட்கார்ந்த இடத்தில் வேலை செய்யும் போது அதிகச் சிக்கலுக்கு உள்ளவர்கள், எனவே இவர்கள் அதிக உடற் பயிற்சி செய்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Your desk job is killing you faster than you thought

Your desk job is killing you faster than you thought
Story first published: Saturday, August 12, 2017, 12:19 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns