உலகின் சக்திவாய்ந்த நுகர்வோர் என்றால் இந்தியர்கள் தான்.. இது 2016 நவம்பர் 8க்கு முன்பு..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

இந்தியாவின் நுகர்வோர் சந்தை மீது சர்வதேச நாடுகளுக்கு மிகப்பெரிய ஈர்ப்பு உள்ளது. இந்நாட்டில் இரும்பு முதல் ஐபோன் வரையில் தாயரிக்கவும் முடியும் விற்பனை செய்யவும் முடியும். இதுவே ஒரு நாட்டின் வளர்ச்சியை உலகச் சந்தையில் தலைதூக்கி நிறுத்த முக்கியக் காரணமாகும்.

இத்தகைய மாபெரும் சந்தையை அடையவே ஆப்பிள் இன்க் முதல் கோல்டுமேன் சாச்சஸ் குரூப் வரை இந்தியாவில் முதலீடு செய்கிறது. எல்லாம் சரியான பாதையில் சென்று கொண்டும் இந்திய பொருளாதாரம் 2 டிரில்லியன் டாலர் அளவிற்குத் தருவாயில் இருக்கும்போது நவம்பர் 8, 2016 வந்தது.

நவம்பர் 8, 2016

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 8ஆம் தேதி அறிவித்த பணமதிப்பு மூலம் மக்கள் மத்தியில் இருந்த பணம் அனைத்தும் பிடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சர்வதேச சந்சையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட கணிசமான உயர்வு, அமெரிக்கப் பெடர்ல் ரிசர்வ் அமைப்பின் கட்டுப்பாடுகள், மட்டமான முறையில் அமலாக்கம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி ஆகியவை இந்திய பொருளாதாரத்தையும் அதன் அசைக்க முடியாத வளர்ச்சியை அடியோடு காலி செய்தது.

வளர்ச்சிக்கு வாய்ப்பில்லை..

தற்போது இந்திய பொருளாதாரத்தைச் சூழ்ந்து கொண்டு இருக்கும் பிரச்சனைகள் அடுத்தச் சில மாதங்களுக்கு வளர்ச்சியை அடைய விடாது என டச்சஸ் வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகர் கவுசிக் தாஸ் தெரிவித்தார்.

மோடி நவம்பர் 8ஆம் தேதி அறிவித்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டின் மீதான தடைக்குப் பின் இந்தியாவில் எந்தெந்த விஷயத்தில் மாற்றம் ஏற்படுட்டுள்ளது என்பதின் அலசல் தான் இந்தக் கட்டுரை.

 

நுகர்வோர்

மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் ஆசிய நுகர்வோர் உறுதி குறியீட்டில் 2017ஆம் ஆண்டின் முதல் பாதியில் உயர்ந்த இடத்தில் இந்தியா குளத்தில் விழுந்த கல் போலத் தரையைத் தட்டியுள்ளது.

சமீபத்தில் ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில் கூட இதனை ஒப்புக்கொண்டது. இதனுடன் இந்தியர்கள் மத்தியில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டிக்கு பின்பு வருமானம் அதிகளவில் குறைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.

 

வேலைவாய்ப்பு

நுகர்வோர் சந்தையில் இந்தியா முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்றால் அனைவருக்கும் வருமானம் அளிக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். தற்போது இருக்கும் சூழ்நிலையில் மோடி தலைமையிலான அரசுக்கு இது சாத்தியமாகாத ஒன்று.

அதிர்ச்சி ரிப்போர்ட்

உற்பத்தி துறையில் சுமார் 30 சதவீத வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளது, அதேபோல் பணியாளர்கள் நியமனம் 12 வருட வீழ்ச்சியை அடைந்துள்ளது இந்தியா. இந்த 12 வருட வீழ்ச்சி மார்ச் 2014 -2016 வரையிலான காலத்தில் நிகழ்ந்தவை.

இந்தியா சுதந்திரம் அடைந்து இத்தகைய பெறும் மாற்றம் நிகழ்ந்தது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

முதலீடு

வேலைவாய்ப்புகள் அதிகளவில் குறைந்துள்ள நிலையிலும், நிறுவனங்களின் அதீத கடன் மற்றும் குறைவான தேவை ஆகியவை புதிய வேலைவாய்ப்புகளையும் புதிய தொழிற்சாலைகளையும் உருவாக்கத் தவறியது.

ஜூலை - செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் வெறும் 512 பில்லியன் ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் மட்டுமே முடிவடைந்துள்ளது. இது மோடி 2014ஆம் ஆண்டுப் பதவியேற்றிய பின் பதிவான மிகக் குறைந்த அளவீடாகும்.

 

தனியார் நிறுவனங்கள்

நவம்பர் 8க்கு பின்பு தனியார் நிறுவனங்களில் செய்யப் புதிய முதலீட்டு விண்ணப்பங்கள் 15 காலாண்டு சரிவையும், மொத்த முதலீட்டு விண்ணப்பத்தின் எண்ணிக்கை 13 வருட சரிவையும் சந்தித்துள்ளது.

மோடி..

பிரதமர் மோடி நாட்டில் கருப்புப் பணத்தை முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற திட்டத்துடன் அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் ஏற்பட்ட மாற்றங்கள் இதுவே.

அதேபோல் நாட்டில் கருப்புப் பணம் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டதா என்றால் நிச்சயம் இல்லை.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India is world's most confident consumers.before November 8

India is world's most confident consumers.before November 8
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns