இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு எந்த இடம் தெரியுமா..?

Posted By: தேஜா
Subscribe to GoodReturns Tamil
இந்தியா 29 மாநிலங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய பொருளாதார நாடாகும். ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு மொழிகள், கலாச்சாரம், பாரம்பரியம், மற்றும் தட்பவெப்ப நிலைகளைக் கொண்டவை. மேலும், பல மாநிலங்கள் பல்வேறு மூலாதாரங்களிலிருந்து கணிசமான வருவாயை பெறுகின்றன.

அனைத்து மாநிலங்களும் அந்தந்த மாநிலத்தின் கூடுதல் செலவுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியை சார்ந்திருக்கிறது. 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியா, 8.80 ட்ரில்லியன் ஜிடிபியுடன் உலகின் மூன்றாவது பணக்கார நாடாகியுள்ளது.

ஜிடிபி என்பது நாட்டின் பொருளாதார ஆரோக்கியம் அல்லது அதிகப்படியான செலவுகளை தரமதிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் குறியீடுகள் ஆகும். ஒரு மாநிலத்தின் பொருளாதாரம் அதன் ஜிடிபி யை கொண்டும் தீரமானிக்கப்படுகிறது. அதாவது மொத்த உள்நாட்டு விளைபொருள் அல்லது உற்பத்தி. ஒரு மாநிலத்தின் ஜிடிபி யை அடிப்படையாகக் கொண்டு 2016 ஆம் ஆண்டு நாங்கள் இந்தியாவிலுள்ள முதன்மையான 10 பணக்கார மாநிலங்களின் பட்டியலை தயாரித்துள்ளோம்

10. டெல்லி

இந்தியாவின் தலைநகரமும் யூனியன் பிரதேசமுமான டெல்லி முதன்மையான இந்தியாவின் 10 பணக்கார மாநிலங்களின் பட்டியலில் 10வது நிலையை அடைகிறது. டெல்லி 4.51 இலட்சம் கோடி (அமெரிக்க டாலர் மதிப்பில் 66 பில்லியன்) ஜிடிபி யுடன் இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது.

இந்த நகரம் வட இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக மையமாகும். மேலும் டெல்லி, வட இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம், தொலைதொடர்பு, ஊடகம், உணவகங்கள், வங்கியியல் மற்றும் சுற்றுலா பிரிவின் மையமாகத் திகழ்கின்றது. மின்சாரம், உடல்நலம் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியவையும் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளோடு வேறுபடுத்திப் பார்க்கும் போது டெல்லியின் ஜிடிபி 5 முதல் 7% வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் தனிநபர் வருமானம் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டின் ரூ.2,52,022 லிருந்து 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டில் 2,80,193 ஆக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

 

9. மத்திய பிரதேசம்

‘இந்தியாவின் இதயம்' என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் மத்திய பிரதேசம் இந்தியாவின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. பரப்பளவைப் பொறுத்து மத்தியப் பிரதேசம் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய மாநிலமாகும்.

மத்திய பிரதேசம் ஜிடிபி 5.08 இலட்சம் கோடிகளுடன் (அமெரிக்க டாலர் மதிப்பில் 75 பில்லியன்) இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. 2003 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் மிகுந்த ‘நலிவுற்ற' பொருளாதாரமாக கருதப்பட்ட இந்த மாநிலத்தின் பொருளாதாரம் தற்போது இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பணக்கார மாநிலமாக மாறியுள்ளது.

ஆனால் 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு 10% முதல் 12% வரை நிலையான வளர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளதாகப் பதிவாகியுள்ளது. மேலும் ஜிடிபி வளர்ச்சியை பொறுத்த அளவில் இது இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாகியுள்ளது. மத்திய பிரதேசம் இந்தியாவின் மிகப்பெரிய தாமிரம் மற்றும் வைர வளங்களை கொண்டுள்ளது. மத்திய பிரதேசம் அதன் சுற்றுலா, மருத்துவம் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக இந்திய ஜனாதிபதியிடமிருந்து விருதைப் பெற்றுள்ளது.

 

8. ஆந்திரப் பிரதேசம்

தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான ஆந்திர பிரதேசம் 5.20 இலட்சம் கோடி (அமெரிக்க டாலர் மதிப்பில் 77 பில்லியன்) ஜிடிபி யுடன் எங்கள் முதன்மையான 10 இந்திய பணக்கார மாநிலங்களின் பட்டியலில் எட்டாவது நிலையை பெற்றிருக்கிறது. விவசாயம், தொழிற்துறை மற்றும் சேவை பிரிவுகள் ஆந்திர பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரங்களாகும்.

மேலும் கப்பற்படைத் தளம் மற்றும் ஏவுகணை நிலையம் ஆகியவை மாநிலத்தின் வளர்ச்சியில் முக்கியமானவை ஆகும். ஆந்திர பிரதேசத்திலிருந்து பிரிந்து தெலங்கானா என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டு இந்திய மாநிலங்களின் எண்ணிக்கையை 29 ஆக உயர்த்தியுள்ளது என்று இந்த மாநிலம் சமீபத்திய செய்திகளில் இடம்பெற்றது.

 

7. ராஜஸ்தான்

ராஜஸ்தான் இந்தியாவின் கனிம வளங்கள் நிறைந்த மாநிலம் மேலும் 5.7 இலட்சம் கோடி (அமெரிக்க டாலர் மதிப்பில் 100 பில்லியன்) ஜிடிபி யை கொண்டுள்ளது. ராஜஸ்தான் 2017 ஆம் ஆண்டின் பணக்கார இந்திய மாநிலங்களில் ஒன்றாகும். மேலும் எங்கள் 10 முதன்மையான இந்திய பணக்கார நகரங்களின் பட்டியலில் 7 வது இடத்தைப் பிடித்துள்ளது. விவசாயம், சுரங்கப்பணி மற்றும் சுற்றுலா ஆகியவை இந்த மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான முக்கிய பொறிகளாகும்.

ராஜஸ்தானில் நாட்டின் மிகப்பெரிய பாலைவனம் உள்ளது மேலும் இது நாட்டின் மிக அதிக வெப்பமான மாநிலங்களில் ஒன்றாகும். மேலும் இது நம் நாட்டிலுள்ள முதன்மையான சுற்றுலா மாநிலங்களில் ஒன்றாகும். மஹாராஷ்டிரா மற்றும் குஜராத்திற்கு பிறகு இந்த அழகிய மாநிலம் இந்தியாவிலுள்ள முன்னணி முதலீட்டு பயண இலக்காகும்.

 

 

6. கர்நாடகா

கர்நாடகா 7.02 இலட்சம் கோடி (அமெரிக்க டாலர் மதிப்பில் 100 பில்லியன்) ஜிடிபி யுடன் இந்தியாவின் மிக அதிக முன்னேற்றம் கொண்ட மாநிலமாகத் திகழ்கிறது. ஜிடிபி யை பொறுத்த அளவில் கர்நாடகா இந்தியாவின் செல்வவள மிக்க மாநிலமாக இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் கர்நாடகாவின் ஜிடிபி மற்றும் தனி நபர் வருவாய் ஜிடிபி யின் வளர்ச்சி விகிதம் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது மிக அதிக அளவில் இருக்கிறது.

விவசாயம், சுரங்கப்பணி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா ஆகியவை கர்நாடகாவின் மிகப்பெரிய பங்களிப்புகளாகும். இந்த மாநிலத்தின் தலைநகரமான பெங்களூரு நகரத்தின் ஐடி தொழிற்துறையின் தற்போதைய வளர்ச்சி காரணமாக இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அறியப்படுகிறது. மேலும் இந்த அழகிய மாநிலம் சிறந்த ஷாப்பிங் இலக்காகவும் மற்றும் அற்புதமான இரவு வாழ்க்கைக்கு பெயர் பெற்றதாகவும் அறியப்படுகிறது.

 

5. குஜராத்

குஜராத் 7.66 இலட்சம் கோடி (அமெரிக்க டாலர் மதிப்பில் 110 பில்லியன்) ஜிடிபி கொண்ட இந்தியாவின் மேற்கத்திய மாநிலமாகும். இது இந்தியாவின் அதிக அளவில் தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாகும். மேலும் விலையுயர்ந்த கற்கள் மற்றும் வைரங்களின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர் ஆகும். இது 2017 ஆம் ஆண்டின் முதன்மையான 10 பணக்கார நாடுகளில் ஒன்றாகும்.

மேலும் இந்திய நாட்டின் சராசரி தனிநபர் வருவாயை விட அதிக அளவு குறிப்பிடத் தகுந்த அளவு தனிநபர் வருவாய் ஜிடிபி யை கொண்டுள்ள இந்தியாவின் மிகுந்த செழிப்பான மாநிலங்களில் ஒன்றாகும். இந்த மாநிலத்தில் விவசாயம் எந்திரமயமாக்கப்பட்டுள்ளது மேலும் இந்த மாநிலம் நாட்டின் பருத்தி, கடலைக்காய், பேரிட்சம்பழம், கரும்பு, போன்ற விவசாய விளைபொருட்களின் மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். இந்த மாநிலம் 2015 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகக் குறைந்த வேலை வாய்ப்பின்மை கொண்ட மாநிலமாகப் பதிவாகியுள்ளது.

 

4. மேற்கு வங்காளம்

மேற்கு வங்காளம் கிழக்கிந்தியாவில் அமைந்துள்ளது மேலும் அதன் சர்வதேச எல்லைகளை பங்களாதேஷ், பூடான் மற்றும் நேபாளத்துடன் பகிர்ந்துக் கொள்கிறது. மேற்கு வங்காளம் 8.00 இலட்சம் கோடி (அமெரிக்க டாலர் மதிப்பில் 140 பில்லியன்) ஜிடிபி கொண்ட இந்தியாவின் செல்வந்த மாநிலங்களில் ஒன்றாகும். மேற்கு வங்காளம் முதன்மையாக விவசாயம் மற்றும் நடுத்தர அளவு தொழிற்துறைகளின் மீது சார்ந்துள்ளது.

இந்த மாநிலம் அரிசி மற்றும் மீனின் மிகப்பெரிய உற்பத்தியாளராகும். மேலும் இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய தேயிலை உற்பத்தி மாநிலமாகும். கொல்கத்தா இந்த மாநிலத்தின் தலைநகரமாகும். மேலும் இந்த மாநிலம் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் (ஐடி) வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளது. 2015 முதல் 2016 ஆம் ஆண்டுக்குள் இந்த மாநிலத்தில் எட்டு ஐடி பூங்காக்கள் இயங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

3. உத்தர பிரதேசம்

உத்தர பிரதேசம் இந்தியாவின் மக்கள் தொகை மிகுந்த மாநிலமாகும் மேலும் 9.76 இலட்சம் கோடி (அமெரிக்க டாலர் மதிப்பில் 140 பில்லியன்) ஜிடிபி ஐ கொண்டுள்ளது, இது மஹாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டிற்கு பிறகு இந்தியாவின் மிக அதிக ஜிடிபி கொண்ட மூன்றாவது மாநிலமாகும். இங்கு தாஜ் மஹால் அமைந்துள்ளதால் இந்தியாவின் மிக விருப்பமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

உத்தர பிரதேசம் தேசீய தானிய உணவு கிடங்கின் மிகப்பெரிய பங்களிப்பாளராகத் திகழ்கிறது. இந்த மாநிலம் இந்தியாவின் மிகப்பெரிய உணவு தானிய உற்பத்தியாளராகும் மேலும் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தியில் சுமார் 18.39 சதவிகிதம் இந்த மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்திற்கு பிறகு 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டில் உத்தர பிரதேசம் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய காய்கறி உற்பத்தியாளராக இருந்துள்ளது.

 

2. தமிழ்நாடு

நமது நாட்டின் தென்மூலைப் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு, ரூ. 13,842 (அமெரிக்க டாலர் மதிப்பில் 210 பில்லியன்) ஜிடிபி யுடன் இந்திியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக உள்ளது. நமது முதன்மையான 10 பணக்கார மாநிலங்களின் பட்டியலில் இந்த மாநிலம் இரண்டாவது இடத்தை பிடிக்கிறது. பல்வேறு தொழிற்துறைகளான ஆட்டோமொபைல்ஸ், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், ஆடைகள், பொறியியல், ஜவுளி உற்பத்தி பொருட்கள், தோல் உற்பத்தி பொருட்கள், இரசாயனங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பலவற்றில் முன்னணியில் இருக்கிறது.

2014 மற்றும் 2015 ஆம் வருடங்களில் தமிழ்நாட்டின் தனி நபர் வருவாய் சுமார் அமெரிக்க டாலர் மதிப்பில் 2,200 ஆகும். தமிழ்நாடு மூன்று மிகப்பெரிய துறைமுகங்கள், 23 சிறிய துறைமுகங்கள், அற்புதமான சாலை மற்றும் இரயில் இணைப்புகள் மற்றும் ஏழு விமான நிலையங்களுடன் நன்கு மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

 

1. மஹாராஷ்டிரா

மஹாராஷ்டிரா அமெரிக்க டாலர் மதிப்பில் ஒட்டுமொத்த ஜிடிபி 295 பில்லியனுடன் இந்தியாவின் முதன்மையான பணக்கார மாநிலமாகத் திகழ்கிறது. மேலும் இது இந்தியாவின் மிகுந்த வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றாகும். 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டின் இந்திய மொத்த ஜிடிபி யில் மஹாராஷ்டிராவின் ஜிடிபி 12.98 சதவிகிதமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது மற்ற அனைத்து மாநிலங்களை விட மிக உயர்ந்த அளவாகும்.

மும்பை மஹாராஷ்டிராவின் தலைநகரமும் இந்தியாவின் நிதியியல் தலைநகரமும் ஆகும். இங்கு பெரும்பாலான மில்லினியர்களும் பில்லினியர்களும் உள்ளனர். 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டின் நிலவரப்படி மஹாராஷ்டிராவின் தனிநபர் வருவாய் அமெரிக்க டாலர் மதிப்பில் 2,300 ஆகும். இது இந்திய சராசரி தனிநபர் வருவாயை விட அதிகமாகும். மேலும் மஹாராஷ்டிரா நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதியாளர் ஆகும்.

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Top 10 Richest States in India

Top 10 Richest States in India - Tamil Goodreturns | இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் தமிழ்நாட்டு எந்த இடம் தெரியுமா..? - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns