இந்தியாவில் கொடிக்கட்டி பறக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றான இந்தியா, பன்னாட்டு நிறுவனங்களுக்கு மிகப்பெரும் சந்தை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. அதிக அளவில் தேவைகளும், ஆற்றல்களும் இந்தியாவில் நிறைந்திருப்பதால் இன்றைக்கு, ஆயிரக்கணக்கான பன்னாட்டு நிறுவனங்கள் (எம்என்சி) தத்தம் வர்த்தகத்தை இங்கு திறம்பட நிறுவியுள்ளன.

தற்போது, இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளை விரிவாக்கம் செய்து, தரமான பொருட்களையும், சேவைகளையும் வழங்கி வருவதோடு பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பையும் வழங்கி வரும் தலைசிறந்த 10 பன்னாட்டு நிறுவனங்களையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

10. சிட்டி குரூப்

அமெரிக்காவின் இன்வெஸ்ட்மென்ட் பாங்கிங் மற்றும் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் சிட்டி குரூப் 1812 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரில் நிறுவப்பட்டது. சுமார் 160 நாடுகளில் தம் சேவைகளை வழங்கி வரும் சிட்டி குரூப், 200 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை தன் வசம் வைத்துள்ளது.

2002ஆம் ஆண்டில் துவக்கம்

உலகெங்கிலும் சுமார் 230,000 ஊழியர்களைக் கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம் 2002 ஆம் ஆண்டில் சிட்டிபாங்க் என்ற தன் துணை நிறுவனத்தின் மூலம் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது. இதன் முதன்மைக் கிளை அலுவலகம் மும்பையில் அமைந்துள்ளது. இந்தியாவின் முதன்மையான 10 பன்னாட்டு நிறுவனங்களுள் ஒன்றான இந்நிறுவனம் சுமார் 30-க்கும் மேற்பட்ட இந்திய நகரங்களில் 40-க்கும் மேற்பட்ட கிளை அலுவலகங்களைக் கொண்டுள்ளது.

9. எல்ஜி

தென்கொரிய பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான எல்ஜி, இந்தியாவின் முதன்மையான 10 பன்னாட்டு நிறுவனங்கள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தை வகிக்கின்றது.

இந்நிறுவனம் உலகெங்கிலும் தனக்கு சொந்தமாக உள்ள 119 துணை நிறுவனங்களில் சுமார் 82,000 ஊழியர்களைப் பணியமர்த்தி, வலிமையான நிறுவனமாகத் திகழ்கிறது.

 

4 முக்கிய பிரிவுகள்

எல்ஜி அதன் செயல்பாடுகளை நான்கு முக்கிய பிரிவுகளில் மேற்கொண்டு வருகிறது: மொபைல் கம்யூனிகேஷன்ஸ், ஹோம் எண்டெர்டெயின்மென்ட், ஹோம் அப்ளையன்ஸ் & ஏர் சொல்யூஷன் மற்றும் வெஹிக்கிள் காம்பனென்ட்ஸ். புதிய தொழில்நுட்பத்தில் உருவான ஓஎல்இடி டிவி, ஸ்மார்ட்ஃபோன், ஏசி போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்களை நுகர்வோரைக் கவரும் விதத்தில் வழங்கி வரும் எல்ஜி, இந்தியாவின் மிகப் பிரபலமான எல்க்ட்ரானிக்ஸ் நிறுவனங்களுள் ஒன்றாகும்.

8. சோனி கார்ப்பரேஷன்

ஜப்பானிய பன்னாட்டு நிறுவனமான சோனி கார்ப்பரேஷன், நுகர்வோர் மற்றும் தொழில்முறை சார்ந்த எலக்ட்ரானிக்ஸ், எண்டர்டெயின்மென்ட், கேமிங் மற்றும் ஃபைனான்ஷியல் சேவைகளை வழங்கும் பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகிறது.

1946 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த ஜப்பானிய நிறுவனம், 1994 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவிலும் அதன் செயல்பாட்டை ஆரம்பித்து, இயங்கி வருகிறது.

 

125,300 ஊழியர்கள்

டெலிவிஷன், காமெரா, ப்ளே ஸ்டேஷன், ஹெட்ஃபோன், மொபைல் ஃபோன், கம்ப்யூட்டர், மெமரி கார்டு போன்ற பல்வேறு விதத் தயாரிப்புகளை உற்பத்தி செய்வதோடு, விற்பனையும் செய்து வருகிறது. தன் தயாரிப்புகளை உலகெங்கும் விற்று வரும் சோனி நிறுவனம் சுமார் 125,300-க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணியமர்த்தியுள்ளது.

7. பெப்ஸிகோ

ஃப்ரிட்டோ-லே, இன்க் மற்றும் பெப்ஸி-கோலா ஆகிய நிறுவனங்களின் இணைப்புக்குப் பின் 1965 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பெப்ஸிகோ ஓரு மிகப்பெரிய அமெரிக்க பன்னாட்டு நிறுவனமாக விளங்கியது. பெப்ஸிகோ குளிர்பானங்கள் மட்டும் அல்லாமல் இந்நிறுவனம் தானியங்களைக் கொண்டு உருவாக்கப்படும் தின்பண்டங்கள், குளிர்பானங்கள் மற்றும் இதர பல பொருட்களைத் தயாரிப்பது, சந்தைப்படுத்துவது மற்றும் விநியோகிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

200 நாடுகள்

தற்போது இந்நிறுவனம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் அதன் தயாரிப்புகளான 7அப், மிரிண்டா, பெப்ஸி, ஸ்லைஸ், குர்குரே, லேய்ஸ், சீட்டோஸ், லெஹர் நம்கீன் மற்றும் அதன் இதர பல தயாரிப்புகளின் மூலம் இந்தியாவில் பெரும் புகழ் பெற்றுள்ளது.

6.கோகோ கோலா

பன்னாட்டுக் குளிர்பான நிறுவனமான கோகோ கோலா 1886 ஆம் ஆண்டில் ஆஸா ப்ரிக்ஸ் கேண்ட்லர் என்பவரால் நிறுவப்பட்டதாகும். ஜியார்ஜியாவின் அட்லாண்டா பகுதியில் உள்ள இந்த அமெரிக்க நிறுவனம் அந்நாட்டின் பிரபலமான சில வகை குளிர்பானங்களின் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது.

1993இல் இந்தியா

இந்திய சந்தைக்குள் 1993 ஆம் ஆண்டில் நுழைந்த இந்நிறுவனம் கோகோ கோலா, தம்ஸ் அப், ஃபான்டா மற்றும் மாஸா போன்ற அதன் பிரபலமான குளிர்பானங்களின் மூலம் மிகப் பெரிய அளவில் சந்தைப் பங்குகளைப் பெற்றிருக்கிறது. சுமார் 123,200 ஊழியர்களைக் கொண்டிருக்கும் இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் சுமார் 41.863 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்

5. ப்ராக்டெர் அண்ட் கேம்பிள்

நுகர்வோர்க்கான பொருட்கள் தயாரிப்பில் உலகப்புகழ் பெற்றுள்ள அமெரிக்க நிறுவனமான ப்ராக்டெர் & கேம்பிள் நிறுவனம், 1837 ஆம் ஆண்டில் வில்லியம் ப்ராக்டெர் மற்றும் ஜேம்ஸ் கேம்பிள் ஆகியோரால் துவங்கப்பட்டது.

1964ஆம் ஆண்டில் இந்தியாவில் தன் செயல்பாட்டைத் தொடங்கிய இந்நிறுவனம் இந்தியாவில் நுகர்வோர்க்கான பொருட்கள் தயாரிப்பில் தற்போது மிக வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய நிறுவனங்களுள் ஒன்றாகும்.

 

முக்கியப் பொருட்கள்

அழகு, ஆரோக்கியம், வீட்டு உபயோகம், பெர்ஸனல் கேர் மற்றும் உடல்நலம் சார்ந்த தயாரிப்புகள் போன்ற பல்வேறு வித தயாரிப்புகளை வழங்கி வருகிறது இந்நிறுவனம் ஏரியல், டைட், ஜில்லெட், விக்ஸ், ஓலேய், பான்டீன், ஓரல்-பி, ஹெட் & ஷோல்டர்ஸ் போன்ற இந்நிறுவனத்தின் பிரபலமான சில தயாரிப்புகள் இந்திய மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றவை. ப்ராக்டெர் & கேம்பிள் இந்தியாவின் முதன்மையான 10 பெரும் பன்னாட்டு நிறுவனங்களுள் ஒன்றாகும்.

4. ஐபிஎம்

அமெரிக்க பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம், 1911 ஆம் ஆண்டில் தாமஸ் ஜே.வாட்ஸன் மற்றும் சார்லஸ் ரான்லெட் ஃப்ளின்ட் ஆகிய இருவரால் நிறுவப்பட்டது. ஐபிஎம் -இன் இந்தியத் துணை நிறுவனமான ஐபிஎம் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் 1992 ஆம் ஆண்டில் இந்தியாவில் தன் செயல்பாட்டைத் தொடங்கியது.

தலைமையகம்

பெங்களூருவில் தன் தலைமையகத்தைக் கொண்டுள்ள ஐபிஎம் இந்தியா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் ஐடி சேவைகள், கம்ப்யூட்டர் ஹார்டுவேர், சாஃப்ட்வேர், அப்ளிக்கேஷன் மேனேஜ்மென்ட், சர்வர்கள், பிசினஸ் கன்சல்டிங் மற்றும் ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது. சுமார் 170 நாடுகளில் செயல்பட்டு வரும் ஐபிஎம் கிட்டத்தட்ட 380,000 ஊழியர்களைக் கொண்டுள்ளது.

3. நெஸ்லே

சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த உணவு மற்றும் குளிர்பான நிறுவனமான நெஸ்லே, குழந்தைகளுக்கான உணவு, பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீர், காலை உணவுக்கான சீரியல்கள், காஃபி, டீ, பால் பொருட்கள், ஐஸ்க்ரீம், உறைய வைக்கப்பட்ட உணவு மற்றும் தின்பண்டங்கள் போன்ற பலவித பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது.

1912 முதல்..

இந்தியாவில் உணவு மற்றும் குளிர்பானத் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் நெஸ்லே நிறுவனம் இந்திய நுகர்வோருக்கு 1912 ஆம் ஆண்டிலிருந்து தன் தயாரிப்புகளை வழங்கி வருகிறது.

194 நாடுகளில் வர்த்தகம்

சர்வதேச ஜாம்பவானாகிய இந்நிறுவனம் இந்தியாவில் 4 கிளை அலுவலகங்களையும்,, 8 உற்பத்தி மையங்களையும் கொண்டு, இந்தியாவின் 10 முதன்மையான பன்னாட்டு நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. உணவு மற்றும் குளிர்பானத் தயாரிப்பில் உலகின் மிகப்பெரும் நிறுவனமாக விளங்கும் இது சுமார் 194 நாடுகளில் ஏறத்தாழ 339,000 ஊழியர்களுடன் இயங்கி வருகிறது.

2. மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் இந்தியா, 1990 ஆம் வருடத்தின் போது இந்தியாவில் அதன் செயல்பாட்டைத் தொடங்கியது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு இந்தியா முழுவதிலும் 9 இடங்களில் அலுவலகங்கள் உள்ளன.

பன்னாட்டு மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான இது கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர், பெர்ஸனல் கம்ப்யூட்டர்கள், கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சர்வீஸஸ் போன்றவற்றை உருவாக்கி, தயாரித்து, விற்பனை செய்து வருகிறது.

 

பில்கேட்ஸ்

ஆபரேட்டிங் ஸிஸ்டம், மைக்ரோசாப்ட் ஆஃபீஸ் ஸூட், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மற்றும் இதர பல கணினி தொடர்பான சேவைகள் போன்றவற்றிற்கு இந்நிறுவனம் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்நிறுவனத்தை நிறுவியவரான பில்கேட்ஸ் தற்போது உலகின் முதன்மையான பணக்கார மனிதராக அறியப்படுகிறார்.

1. ஆப்பிள் இன்க்

உலகின் மிகப் பிரபலமான மற்றும் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக விளங்கும் ஆப்பிள், ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வோஸ்னியாக் மற்றும் ரொனால்ட் வேய்னே ஆகியோரால் 1976 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

ஆப்பிள் நிறுவனம் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர், ஆன்லைன் சர்வீஸ்கள் மற்றும் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் போன்றவற்றை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது.

 

முக்கிய தயாரிப்புகள்

அமெரிக்காவின் பெரும் பணக்கார நிறுவனமான இது, ஐஃபோன், ஐபேட் மற்றும் மேக் கம்ப்யூட்டர்கள் போன்ற சில கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளுக்கு உலகெங்கும் மிகப் பிரபலமாக அறியப்படுகிறது.

2வது இடம்

மேலும் உலக அளவில் மொபைல் தயாரிப்பில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்நிறுவனம் இந்தியாவில் மிகக் குறுகிய காலத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. நாம் பட்டியலிட்டுள்ள இந்தியாவின் முதன்மையான 10 பன்னாட்டு நிறுவனங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் சுமார் 230 பில்லியன் டாலர்களுக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

வாசகர் கருத்து..

இப்பட்டியலில் நீங்கள் சேர்க்க நினைக்கும் முக்கியமான நிறுவனங்களை கருத்து பதிவிடும் தளத்தில் பதிவு செய்யலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 10 Best Multinational Companies in India

Top 10 Best Multinational Companies in India
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns