இன்னும் இரண்டே வருடத்தில் டாப் 3 இடத்தில் இந்தியா..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

இந்தியாவில் விமானச் சேவைகளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், 2018-19 நிதியாண்டில் இந்தியாவில் சுமார் 15 கோடி பேர் விமானப் பயணம் செய்வார்கள் எனக் கணிப்பை வெளியிட்டுள்ளது ஆசிய பசிபிர் விமானப் போக்குவரத்து அமைப்பு.

இந்த உயர்வின் மூலம் அடுத்த இரண்டு வருடத்தில் இந்தியா விமானப் போக்குவரத்துத் துறையில் தலைசிறந்த 3 நாடுகள் பட்டியலில் இடம்பெற உள்ளது.

டாப் 3 இடம்

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் விமானப் பயணம் செய்வோரின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் கச்சா எண்ணெய் விலை குறைந்த பின்பு விமானக் கட்டணங்கள் அதிகளவில் குறைந்து பயணிகளை ஈர்த்தது.

இதன் மூலம் 2025ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய விமானப் போக்குவரத்து சந்தையின் டாப் 3 இடங்களில் நிரந்தரமாக இந்தியா இருக்கும் சர்வதே விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது.

 

இந்திய விமான நிலையங்கள்

ஆனால் இந்த வளர்ச்சிக்குச் சற்றும் ஈடுகொடுக்காத வகையில் இந்திய விமான நிறுவனங்கள் இருப்பது கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது எனவும் இந்த அமைப்புகள்.

முழுமையான அளவு

இந்தியாவில் இருக்கும் விமான நிலையங்கள் தற்போது அரசு காட்டும் முழுப் பயணிகளைக் கொள்ளவை 2022 நிதியாண்டில் அடையும் நிலையில் கூடுதலான பயணிகளை ஏற்கும் வகையில் உள்கட்டுமானத்தை ஏற்கவேண்டும்.

மேம்படுத்த வேண்டிய சேவைகள்

மேலும் செக்-இன், பாதுகாப்பு, குடியேற்பு முகாம், நீண்ட காத்திருப்புக் காலம் மற்றும் அதிகளவிலான கட்டணங்கள் ஆகியவற்றை அரசும் இத்துறையில் இருக்கும் முக்கிய நிறுவனங்களும் கவனிக்க வேண்டும்.

விமான நிலையங்கள்

இன்றைய நிலையைப் பார்க்கும்ரோது நாட்டின் பெரிய விமான நிலையமாக இருக்கும் மும்பை, டெல்லி மற்றும் சென்னை விமான நிலையங்கள் கூடிய விரைவில் தனது முழுக் கொள்ளவை அடைந்துவிடும் தருவாயில் உள்ளது.

அதனுடன் அகர்தலா, டேராடூன், குவஹாத்தி, ஜெய்ப்பூர், கோழிக்கோடு, லக்னோ, மங்களூர், புனே, ஸ்ரீநகர் மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளில் இருக்கும் விமான நிலையங்கள் கொள்ளவை தாண்டி பயணிகளுக்குச் சேவை அளித்து வருகிறது என்றும் IATA மற்றும் CAPA அமைப்புகள் தெரிவித்துள்ளது.

 

பயணிகள் எண்ணிக்கை

இந்தியாவில் தற்போது 131 மில்லியன் விமானப் பயணிகளைக் கொண்டு 4வது இடத்தில் உள்ளது.

அமெரிக்கா - 815 மில்லியன் விமானப் பயணிகள்
சீனா - 490 மில்லியன் விமானப் பயணிகள்
ஜப்பான் - 141 மில்லியன் விமானப் பயணிகள்
பிரிட்டன் - 131 மில்லியன் விமானப் பயணிகள்

 

வளர்ச்சி

கடந்த 3 வருடத்தில் இந்தியாவில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 18.9 சதவீதம் உயர்ந்து 61 மில்லியனில் இருந்து 103 மில்லியனாக உயர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India to be 3rd largest aviation market By 2019

India to be 3rd largest aviation market By 2019
Story first published: Monday, November 13, 2017, 17:35 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns