தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை தங்கத்தின் மீது முதலீடு குறிப்பிடத் தகுந்ததாக நிரூபணமாகியுள்ளது. அந்தக் காலகட்டத்தில் இந்த உலோகம் வருடத்திற்குச் சராசரியாக 29% வருவாயை அளித்துள்ளது. இது மற்ற முதலீட்டுத் தேர்வுகளை விடச் சிறந்ததாகும். இருப்பினும், நீண்ட கால அடிப்படையில் தங்கத்தின் மீதான முதலீடு ஆண்டுக்குச் சராசரியாக 10% க்கும் குறைவான வருவாயை அளிக்கிறது.

தங்கத்தில் எப்படி முதலீடு செய்யலாம் என்பதைப் பற்றி இங்கே சில குறிப்புகள் தரப்பட்டுள்ளன.

நகைகள் வாங்குதல்

நகைகள் வாங்குதல்

நமது பழங்காலப் பாரம்பரிய முதலீட்டு முறை நகைகள் வாங்குவதாகும். இந்த முறையில் ஒருவர் ஆபரணங்களாகவும், தங்கக் கட்டிகளாகவும் மற்றும் நாணயங்களாகவும் வாங்கலாம். இருப்பினும் இதிலும் சில பாதகங்கள் இருக்கின்றன. மொத்த வாங்கும் விலையில் மிக அதிகமான செய்கூலி கட்டணங்கள் அடங்கியுள்ளன. இருப்பினும், அதே நகையை அதே நகைக் கடைக்காரரிடம் நீங்கள் விற்க முயலும் போது அவர் அதைச் சந்தை விலைக்கும் குறைவாக வாங்கிக் கொள்வார் மேலும் உங்கள் நகையின் மொத்த விலையில் செய்கூலி கட்டணங்களைக் கழித்து விடுவார்.

தங்க நாணயங்கள் மற்றும் தங்கக் கட்டிகள்

தங்க நாணயங்கள் மற்றும் தங்கக் கட்டிகள்

தங்க நாணயங்கள் மற்றும் கட்டிகளில் முதலீடு செய்வது சிறந்த தேர்வாகும். நீங்கள் தங்கக் கட்டிகளையும் நாணயங்களையும் நகைக்கடைக்காரரிடம் மட்டுமே வாங்க வேண்டும். வங்கிகள் தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்களை விற்கின்றன. ஆனால் அவர்களால் அவற்றைத் திரும்ப வாங்கிக் கொள்ள முடியாது. அதே சமயம் நகைக் கடைக்காரர்களால் தங்க நாணயங்களை உங்களிடமிருந்து வாங்கிக் கொள்ள முடியும்.

தங்க ஈடிஎஃப்

தங்க ஈடிஎஃப்

நீங்கள் பங்கு பரிமாற்றகத்தில் ஒரு டீமேட் கணக்கையும் மற்றும் வர்த்தகக் கணக்கையும் தொடங்குவதன் மூலம் தங்க ஈடிஎஃப் களை வாங்க முடியும். இந்தத் தங்க ஈடிஎஃப் களை வாங்குவதற்கும் விற்பதற்கும் நீங்கள் தரகுக் கட்டணம் (பொதுவாக 0.25 முதல் 0.5% வரை) செலுத்த வேண்டி இருக்கும். மேற்கொண்டு நீங்கள் நிதி மேலாண்மை கட்டணமாக 0.5 முதல் 1% கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும்.

தங்க நிதிகளின் நிதி

தங்க நிதிகளின் நிதி

தங்க நிதிகளின் நிதித் திட்டத்தில் உங்கள் சார்பாகத் தங்க ஈடிஎப் களில் முதலீடு செய்யப்படும். இதில் முதலீடு செய்ய ஒருவருக்கு டீமேட் கணக்கு தேவையில்லை. இந்தத் திட்டத்தில் தங்க நிதிகளின் வழியே வேறு ஏதேனும் இதர பரஸ்பர நிதித் திட்டங்கள் மற்றும் தங்கத்தில் சிப் முதலீடுகள் போன்றவை சாத்தியமாகும்.

சம பங்குகளை அடிப்படையாகக் கொண்ட தங்க நிதிகள்

சம பங்குகளை அடிப்படையாகக் கொண்ட தங்க நிதிகள்

இந்த நிதிகளில் நேரடியாகத் தங்கத்தில் முதலீடு செய்யப்படுவதில்லை, ஆனால் தங்க அகழ்வு, தங்கத்தைப் பிரித்தெடுத்தல், சந்தைப்படுத்துதல் போன்ற செயல்களில் தொடர்புடைய நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது. அதைத் தவிர்த்து இதன் செயல் திறன் அது முதலீடு செய்யப்படும் நிதி நிறுவனங்கள் மற்றும் பங்குச்சந்தையின் செயல்பாட்டை முற்றிலும் சார்ந்திருக்கும். அதிக அபாயப் பசி கொண்ட முதலீட்டாளர்களுக்கு இந்த நிதித் திட்டங்களில் முதலீடு செய்வது பொருத்தமாக இருக்கும். இந்தியாவில் தங்கத்துடன் தொடர்புடைய பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் இல்லை. எனவே இந்த நிதிகள் சர்வதேச சந்தையில் வர்த்தகம் செய்யப்படுகின்றன. தங்க முதலீட்டு அபாயம் மற்றும் சமபங்கு நிதிகளை அடிப்படையாகக் கொண்ட அபாயங்களைத் தவிர்த்து நாணய மதிப்பு அபாயத்தினால் முற்றிலும் எளிதில் பாதிக்கப்படக்கூடியதாகும்.

தங்கத்தில் எவ்வளவு முதலீடு செய்யலாம்?

தங்கத்தில் எவ்வளவு முதலீடு செய்யலாம்?

உண்மையில், உங்கள் சொத்துக்களில் 5 முதல் 10 % ஐ தங்கத்தில் முதலீடு செய்யலாம். நீங்கள் அதிகப்படியாகத் தங்கத்தில் முதலீடு செய்வதாக இருந்தால், நீண்ட கால அடிப்படையில் தங்க முதலீட்டின் மீதான வருவாய் ஆண்டுக்கு 10% க்கும் குறைவு என்பதை நினைவில் கொள்ளுங்கள். தங்கத்தில் முதலீடு செய்யச் சரியான நேரம் தவறான நேரம் என்று எதுவுமில்லை. நீங்கள் தங்கத்தின் மீது நீண்ட காலத்திற்கு உதாரணமாக ஐந்து வருடத்திற்கும் மேல் முதலீடு செய்ய வேண்டும். கொள்முதல் விலையைச் சராசரி காணக் குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடுகளை நீட்டிப்பது சிறந்ததாகும். நீங்கள் தங்க ஈடிஎஃபில் முதலீடு செய்தல் அல்லது தங்க நிதித் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் இணையத்தில் தங்கத்தில் முதலீடு செய்வதைத் தொடங்கலாம். இணையத்தில் இதர பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வதைப் போலவே தங்க நிதிகளையும் இணையத்தில் வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to Invest in Gold?

How to Invest in Gold?
Story first published: Sunday, November 26, 2017, 19:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X