இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆடம்பர கார் விற்பனை.. 2017-ம் ஆண்டு எத்தனை கார்கள்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் ஆடம்பர கார் வங்க வாங்க வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. 2009-ம் ஆண்டு முதல் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட வந்த ஆடம்பர கார் விற்பனை 2016-ம் ஆண்டு மட்டும் 7.98 சரிந்து இருந்தது.

இதுவே 2017-ம் ஆண்டு 16.93 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி அறிமுகம் ஆன போது சற்று விலை குறைவாக இருந்த ஆடம்பர கார்களின் விலை 2 மாதங்களுக்குப் பிறகு செஸ் வரி போட்ட உடன் மீண்டும் விலை உயர்ந்தது.

இருந்த போதிலும் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 2017-ம் ஆண்டு அதிக ஆடம்பர கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதால் பீஎம்டப்ளியூ, லேண்ட்ரோவர் என்று எவ்வளவு கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

பீஎம்டப்ளியூ

பீஎம்டப்ளியூ

2016-ம் ஆண்டு 7,861 பீஎம்டப்ளியூ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதுவே 2017-ம் ஆண்டு 9,800 கார்களை விற்பனை செய்துள்ளது.

மெர்சிடிஸ்

மெர்சிடிஸ்

மெர்சிடிஸ் கார்கள் 2016-ம் ஆண்டு 13,231 விற்பனை செய்யப்பட்டது இருந்தது. 2017-ம் ஆண்டு 15,300 ஆக அதிகரித்துள்ளது.

ஆடி கார்

ஆடி கார்

2016-ம் ஆண்டு 7,742 ஆடி கார்கள் விற்கப்பட்ட நிலையில் 2017-ம் ஆண்டு 7,876 ஆக அதிகரித்துள்ளது.

ஜாகுவார் லாண்ட் ரோவர்

ஜாகுவார் லாண்ட் ரோவர்

இந்தியாவின் டாடா குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஜாகுவார் லாண்ட் ரோவர் ஆடம்பர கார்கள் 2016-ம் ஆண்டு 2,900 விற்கப்பட்டது. 2017-ம் ஆண்டு 3,954 ஆக அதிகரித்துள்ளது.

வோல்வோ

வோல்வோ

2016-ம் ஆண்டு 1,584 கார்களை விற்ற வோல்வோ 2017-ம் ஆண்டு 2,029 ஆடம்பர கார்களை விற்பனை செய்துள்ளது.

மொத்த விற்பனை

மொத்த விற்பனை

2016-ம் ஆண்டு 7.98 சதவீதம் சரிந்து 33,318 ஆடம்பர கார்கள் விற்கப்பட்ட நிலையில் 2017-ம் ஆண்டு 16.93 சதவீதம் உயர்ந்து 38,959 ஆடம்பர கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Luxury car sales grow fastest in 5 years in India

Luxury car sales grow fastest in 5 years in India
Story first published: Tuesday, January 9, 2018, 18:47 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X