இந்தியாவை வலிமைப்படுத்திய 5 பட்ஜெட்கள்.. அருண் ஜேட்லி இதைச் செய்வாரா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) வரி விதிப்பிற்குப் பிறகான முதல் பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

 

ஒரு நாடு, ஒரு வரி என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட வரி சீர்திருத்த நடவடிக்கையாக இந்த ஜிஎஸ்டி பார்க்கப்படுகிறது. இந்திய பட்ஜெட்டில் இந்த வரி விதிப்பு முறை ஒரு சரித்திர தருணமாகப் பார்க்கப்படுகிறது. இதனைப் போன்ற வேறு சில முக்கிய நிகழ்வுகளும், இந்திய பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதைப் போன்ற சில சரித்திர நிகழ்வுகள் முந்தைய ஆண்டுகளில் நடைபெற்றுள்ளன. அவற்றைப் பற்றிய பதிவு தான் இது. வாருங்கள் மேலும் தெரிந்து கொள்வோம்.

நிதியமைச்சர் திரு.அருண் ஜெட்லி, 2018-19ஆம் ஆண்டிற்கான யூனியன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதற்கிடையில் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற 5 பட்ஜெட்கள் பற்றியும் அவை, சுதந்திர இந்தியாவின் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய மாற்றத்தைப் பற்றியும் இப்போது பார்க்கலாம்.

பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

பிப்ரவரி 28, 1950

பிப்ரவரி 28, 1950

நிதி அமைச்சர் : ஜான் மத்தாய்

இது இந்திய குடியரசின் முதல் பட்ஜெட் ஆகும். இந்த ஆண்டில் தான் இந்தியாவின் திட்டமிடல் கமிஷனை உருவாக்க முடிவு செய்யப்பட்டது (இது மார்ச் 1950 இல் உருவாக்கப்பட்டது). இந்தக் கமிஷன் இந்தியாவின் ஐந்து ஆண்டுத் திட்டங்களை உருவாக்கியது. 2014ம் ஆண்டு, பிரதம மந்திரி, திரு.மோடி அவர்கள் இந்தக் கமிஷனை நிதி ஆயோக் என்று மாற்றியமைத்தார்.

 

பிப்ரவரி 29, 1968

பிப்ரவரி 29, 1968

நிதி அமைச்சர் - மொரார்ஜி தேசாய்

10 பட்ஜெட் தாக்கல் செய்த ஒரே நிதி அமைச்சர் திரு.மொரார்ஜி தேசாய் அவர்கள் மட்டும் தான். இந்தக் குறிப்பிட்ட ஆண்டில், தொழிற்சாலை வாயிலில் இருந்து வெளியேறிய அனைத்துப் பொருட்களையும் கட்டாயமாகச் சுங்கவரித்துறை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும் என்ற விதியை அவர் அகற்றினார். அனைத்துச் சிறிய மற்றும் பெரிய உற்பத்தியாளர்களிடமிருந்தும் பொருட்களைச் சுய மதிப்பீடு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது உற்பத்தியாளர்களின் ஆற்றலை அதிகப்படுத்தியது, மேலும் பொருட்களை அகற்றுவதில் நிர்வாகத்தினருக்கு இருந்த சிக்கலை தீர்த்து வைத்தது.

அதே வருடம், துணைவருக்கான சலுகை ரத்துச் செய்யப்பட்டது. மொரார்ஜி தேசாய் அவர்களின் பட்ஜெட் சொற்பொழிவில், யார் , யாரை சார்ந்து இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள, வெளியில் இருப்பவர்களுக்கு எந்த ஒரு உரிமையும் கிடையாது. என்றும் திருமணம் தொடர்பான உறவு பற்றிய இந்தத் திட்டமிடப்படாத திரிபு நீக்கப்பட வேண்டும்."என்றும் கூறினார்.

 

பிப்ரவரி 28, 1986
 

பிப்ரவரி 28, 1986

நிதி அமைச்சர் - விஸ்வநாத் பிரதாப் சிங் (வி.பி.சிங் )

மறைமுக வரி சீர்திருத்தத்திற்கான ஒரு தொடக்கத்தை இந்தப் பட்ஜெட் கொடுத்தது. அதுவே இன்று ஜிஎஸ்டி யாக மாற்றம் பெற்றுள்ளது. 1986-87 பட்ஜெட் திட்டத்தில் சுங்க வரி விதிப்புக் கட்டமைப்பில் ஒரு பெரிய மாற்றத்தை வி.பி.சிங் முன்வைத்தார்.

 

ஜூலை 24, 1991

ஜூலை 24, 1991

நிதி அமைச்சர் - மன்மோகன் சிங்

பொருளாதார வல்லுனரான திரு.மன்மோகன் சிங் அவர்கள், அந்த ஆண்டுக் கட்டணத்தில் சமநிலையை உண்டாக்க ஏற்றுமதி இறக்குமதி கொள்கையில், மாற்றத்தை ஏற்படுத்தினார். இறக்குமதி குறைந்து, ஏற்றுமதி அதிகரித்தும், காணப்பட்டது. இதுவே வெளிநாடுகளுடன் போட்டியிட இந்தியாவின் நுழைவு வாயிலாகக் கருதப்பட்டது.

உலகின் முதல் பத்துப் பொருளாதாரத்தில் இன்று இந்தியாவும் ஒன்றாக உள்ளது.

 

பிப்ரவரி 28, 1997

பிப்ரவரி 28, 1997

நிதி அமைச்சர் - ப.சிதம்பரம்

1997ம் ஆண்டுப் பட்ஜெட், தனி நபர் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வரி விதிப்பை மிதமான மதிப்பீட்டை உண்டாக்கியது. இது நாட்டின் வரித் தளத்தை அதிகரித்தது. வரிகளைத் தவிர்ப்பதற்காகத் தங்கள் வருவாயை மறைத்து வைத்திருந்தவர்கள் பணம் செலுத்த தொடங்கினர். 1997-98ல் வரி வசூல் 18,700 கோடி ரூபாயிலிருந்து 2010-11 ஆம் ஆண்டில் ரூ 1,00,100 கோடியாக உயர்ந்துள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 Significant Budgets that Shaped India

5 Significant Budgets that Shaped India
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X