இந்தியாவில் விற்பனையாகும் 64% மருந்துகள் அங்கீகரிக்கப்படாதவை.. அதிர்ச்சி ரிப்போர்ட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் அங்கீகரிக்கப்படாத மருந்துகளை பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து தயாரித்தும், விற்பனை செய்து வருகிறது. இதனால் இந்தியாவில் தற்போது ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பு (antimicrobial resistance) மிகப்பெரியதாக வெடித்துள்ளது என அதிர்ச்சி ஆய்வு கூறுகிறது.

 

 ஆய்வு

ஆய்வு

லண்டன் குவின் மேரி பல்கலைகழகம் மற்றும் நியூகேஸ்டில் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வின் முடிவுகளை திங்கட்கிழமை வெளியிடப்பட்டது.

இந்த ஆய்வில் இந்தியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா நாடுகளில் 10 லட்சத்திற்கும் அதிகமான ஒழுங்குபடுத்தப்படாத (Not Regulated) ஆண்டிபியோடிக் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக இந்த ஆய்வு கூறுவதாக எக்னாமிக்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

 

இந்தியா

இந்தியா

2007 முதல் 2012ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் சுமார் 118 வித்தியாசமான எப்டிசி (fixed dose combination) ஆண்டிபியோடிக் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது, இதில் 64 சதவீத மருந்துகள் CDSCO (Central Drugs Standard Control Organisation) அமைப்பால் அங்கீகரிக்கப்படவில்லை.


அங்கீகரிக்கப்படாத மருந்துகளை இந்தியாவில் விற்பனை மற்றும் விநியோகம் செய்வது குற்றச்செயல் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அமெரிக்கா மற்றும் பிரிட்டன்
 

அமெரிக்கா மற்றும் பிரிட்டன்

அதேபோல் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாட்டில் வெறும் 4 சதவீத மருத்துகள் (இரண்டு மருந்துகளை ஒரு மருந்தில் வைத்து தயாரிக்கும் மருந்துகள்) மட்டுமே அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா தான் டாப்பு

இந்தியா தான் டாப்பு

உலகளவில் ஆண்டிபயோடிக் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை இந்தியாவில் மிகவும் அதிகமாக உள்ளது எனவும் இந்த ஆய்வு கூறுகிறது.

நோய் எதிர்ப்பு

நோய் எதிர்ப்பு

இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் அங்கீகரிக்கப்படாத மருந்துகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதால் இந்நாடுகளில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதும் இந்த ஆய்வின் மூலம் கண்டுப்பிடக்கப்பட்டுள்ளது.

500 நிறுவனங்கள்

500 நிறுவனங்கள்

FDC ஆண்டிபயோடிக்ஸ் மருந்துகள் சுமார் 3,300 பிராண்டுகளின் பெயரில் சுமார் 500 நிறுவனங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 12 நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

148 பிராண்டுகளின் பெயரில் தயாரிக்கப்படும் 188 FDC மருந்துகளில் 53 மருத்துகள் ஆதாவது 45 சதவீத மருந்துகள் Abbott, Astra Zeneca, Baxter, Bayer, Eli Lilly, GlaxoSmith-Kline, Merck/MSD, Novartis, Pfizer, Sanofi-Aventis மற்றும் Wyeth ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கிறது.

(மக்கள் நிறுவனங்களின் பெயர் முழுமையாகவும் சரியாகவும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் நிறுவனங்களின் பெயர் ஆங்கிலத்தில் அளிக்கப்பட்டுள்ளது.)

 

அங்கீகாரம்

அங்கீகாரம்

இந்த 188 FDC மருந்துகளில் வெறும் 62 சதவீதம் அதாவது 33 மருந்துகள் மட்டுமே CDSCO அமைப்பால் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் வெறும் 8 சதவீதம் அதாவது 4 மருந்துகள் மட்டுமே அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அப்பாட்

அப்பாட்

FDC மருந்துகளில் 38 சதவீதம் சுமார் 20 சதவீத மருந்துகள் பன்னாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டதுஸ இதற்கு CDSCO அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளதாக எவ்விதமான தகவல்களும் இல்லை.

இதில் 90 சதவீதம் அதாவது 18 மருத்துகள் அப்பாட் (Abbott) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

 ஊசிக்கு 525% லாபம்

ஊசிக்கு 525% லாபம்

<strong>ஒரு ஊசிக்கு 525% லாபம் சம்பாதிக்கும் தனியார் மருத்துவமனை.. அதிர்ச்சியில் மக்கள்..!</strong>ஒரு ஊசிக்கு 525% லாபம் சம்பாதிக்கும் தனியார் மருத்துவமனை.. அதிர்ச்சியில் மக்கள்..!

மருத்துவக் காப்பீடு.. மத்திய அரசு அசத்தல்..!

மருத்துவக் காப்பீடு.. மத்திய அரசு அசத்தல்..!

<strong>10 கோடி மக்களுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு.. மத்திய அரசு அசத்தல்..!</strong>10 கோடி மக்களுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு.. மத்திய அரசு அசத்தல்..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு

<strong>ரஜினியை விடுங்க.. கமல்ஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? </strong>ரஜினியை விடுங்க.. கமல்ஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

64percent of antibiotics sold in India unapproved: Red Alarm

64percent of antibiotics sold in India unapproved: Red Alarm
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X