மோடி அரசை அலறவிடும் தென்னிந்திய மாநிலங்கள்.. ஆட்சி கலையுமா..?

Written By:
Subscribe to GoodReturns Tamil

மோடி அரசு 4 வருட ஆட்சியில் பணமதிப்பிழப்பால் மக்களுக்கும், ஜிஎஸ்டியால் வர்த்தகர்களுக்கும், அரசு திட்டங்களின் தொடர் தோல்வியின் காரணமாக பொருளாதார வளர்ச்சியில் தொய்வு என பல இருந்தாலும் தொடர்ந்து ஆட்சியை காப்பாற்றி வருகிறது.

தற்போது இந்த நிலை மோசமடைந்துள்ளது.

தொடர்ந்து தோல்வி

2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 282 இடங்களைப் பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. 30 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியை அமைத்தது.

பாஜக ஆட்சியில் அமர்ந்த பின் நடைபெற்ற 17 லோக்சபா இடைத் தேர்தல்களில் பாஜக 3-ல் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது. 2014-ல் வீசியதாக சொல்லப்பட்டு மோடி அலை புஷ்வானமாகி உள்ளது.

 

ஆந்திர பிரதேசம்

இந்நிலையில் ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக மோடி அரசு கொடுத்த நம்பிக்கையை உடைத்தது மட்டும் அல்லாமல் ஆந்திர முதல்வரின் இக்கோரிக்கை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உதாசினப்படுத்தியுள்ளார்.

கோபம்

இதில் கோபமடைந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயடு, மத்தியில் இருக்கும் இரு அமைச்சர்களை ராஜினாமா செய்ய உத்தரவிட்டார். இந்த முடிவுக்கு ஆந்திர மாநிலத்தின் எதிர்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தது.

நம்பிக்கையில்லா தீர்மானம்

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி மற்றும் எதிர்கட்சியான YSR காங்கிரஸ் இணைந்து மோடி அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர்.

ஆதரவு

மோசடி அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி மற்றும் YSR காங்கிரஸ் கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு கம்யூனிஸ்ட், திரிணமுல் காங்கிரஸ், தமிழ்நாட்டில் அதிமுகவை தவிர பிற அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளது.

அதே சமயம் காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் அதிமுக எம்பிக்களும் பாஜக மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கடந்த ஒரு வாரமாக கொடுக்கும் பேட்டிகள் மத்திய அரசு மீதான அதிருப்தியின் வெளிப்பாடுகள்தான்.

 

மோடிக்கு கடும் எதிர்ப்பு

மத்திய அரசுக்கு எதிராக தென்னிந்திய மாநில கட்சிகள் ஒன்று கூடி இருக்கிறது. கூடுதலாக உ.பி, மேற்கு வங்க மாநில கட்சிகளும், இடதுசாரிகளும் இதில் கைகோர்த்து இருக்கின்றன.

50 ஆண்டுகள்

மத்திய அரசு எதிராக அழுத்தமான எதிர்ப்பு தென்னிந்தியாவில் போடப்பட்டு இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு பின் திராவிட நாடு கொள்கைக்கு இணையாக மாநில கட்சிகள் ஒன்று சேர்ந்து இருக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர்

2014 பொதுத்தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. லோக்சபாவில் பாஜகவிற்கு 282 எம்பிகள் இருந்தனர். ஆனால் இடைத்தேர்தல்களுக்குப் பின்னர் பாஜகவின் பலம் 272ஆக சரிந்துள்ளது.

மிகப்பெரிய வீழ்ச்சி

மோடி அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு தென் இந்திய மாநிலங்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் மற்றும் பல வட மாநில கட்சிகளும் ஆதரவும் அளிக்கிறது. இதனால் ஒட்டுமொத்த இந்தியாவும் மோடி அரசுக்கும் பிஜேபி கட்சிக்கும் எதிராக நிற்கிறது இதனை எப்படி சமாளிக்கப்போகிறது.

முக்கிய பிரச்சனை

வங்கி மோசடிகளில் இருந்து மீண்டும் பங்குச்சந்தைக்கு தற்போது இந்தியாவில் நிலவும் அரசியல் பிரச்சனைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது.

வெள்ளிக்கிழமை ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 550 புள்ளிகள் வரையில் சரிந்தது.

 

மீண்டும் ஒரு புரட்சி..!

சாம்சங், எல்ஜி நிறுவனங்களை ஓடஓட விரட்டும் சியோமி.. மீண்டும் ஒரு புரட்சி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Southern states joined together against modi Govt

Southern states joined together against modi Govt
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns