சாதாரண ஊழியர்களை ஒப்பிடுகையில் இவர்களுக்கு மட்டும் 243 மடங்கு அதிகச் சம்பளம்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

இந்திய நிறுவனங்களில் தலைவர், நிறுவனர்கள் அல்லாத டாப் 100 அதிகாரிகளின் சம்பளம், போனஸ் ஆகியவை 2017ஆம் ஆண்டில் சுமார் 12.1 சதவீதம் வரையில் உயர்ந்து சராசரி சம்பள தொகை 9.8 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் உயர்மட்ட அதிகாரிகள் அனைவரும் படு குஷியாகியுள்ளனர்.

இதோடு சாதாரண ஊழியர்களுக்குக் கூடுதல் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

243 மடங்கு அதிகச் சம்பளம்

இந்திய நிறுவனங்களில் இருக்கும் சாதாரண ஊழியர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் மத்தியிலான சம்பள வித்தியாசம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் சுமார் 243 மடங்காக உள்ளது.

இதுமட்டும் அல்லாமல் உலகளவில் இந்த வித்தியாசம் அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சராசரி வித்தியாசம்

இந்தியாவின் முன்னணி 100 நிறுவனங்களில் செய்யப்பட்ட ஆய்வில் 2017ஆம் நிதியாண்டில் சாதாரண ஊழியர்களின் சராசரி சம்பளம் வெறும் 5,65,748 ரூபாய் மட்டுமே. இது 2016ஆம் நிதியாண்டை விடவும் 8.5 சதவீதம் அதிகம் என்பது கூடுதல் தகவல்.

சீஇஓ சம்பளம்

அதேபோல் டாப் 100 நிறுவனங்களில் இருக்கும் சிஇஓக்களின் சராசரி சம்பளம் 9.76 கோடி ரூபாயாக உள்ளது. உலகளவில் இதன் சராசரி அளவீடு 23.6 கோடி ரூபாய்.

முக்கியச் சிஇஓக்கள் மற்றும் அந்த நிறுவன ஊழியர்களின் சராசரி சம்பள வித்தியாசம்.

 

ஏஎம் நாயக்

2017ஆம் நிதியாண்டில் எல் அண்ட் டி நிறுவனத்தில் இருந்து வெளியேறி ஏ.எம். நாயக் சுமார் 78.91 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தைப் பெற்றுள்ளார். இந்நிறுவனத்தின் சாதாரண ஊழியர்களை ஒப்பிடுகையில் இது கிட்டதட்ட 1,102 மடங்கு அதிகமானது.

டிசிஎஸ் சந்திரசேகரன்

2017நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த என். சந்திரசேகரன் சுமார் 30.16 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். இது இந்நிறுவன சாதாரண ஊழியர்களை ஒப்பிடுகையில் இது 514 மடங்கு அதிகமாகும்.

ஐடிசி தேவேஷ்வர்

நாட்டின் முன்னணி நுகர்வோர் நிறுவனமான ஐடிசியின் தலைவர் தேவேஷ்வர் 2017ஆம் ஆண்டில் 21.17 கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெற்றுள்ளார். இதன் சாதாரண ஊழியர்களை விட 508 மடங்கு அதிகமாகும்.

சன் டிவி

சன் நெட்வொர்க் நிறுவன தலைவர்களான கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி ஆகியோர் 2017ஆம் ஆண்டில் தலா 77.93 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தைப் பெற்றுள்ளனர்.

உலக நாடுகள்

ஒரு நிறுவனத்தின் சீஇஓ மற்றும் ஊழியர்கள் மத்தியிலான அதிகச் சம்பள வித்தியாசத்தில் அமெரிக்கா முதல் இடத்திலும் இந்தியா 2வது இடத்திலும் உள்ளது.

அமெரிக்கா - 265 மடங்கு (14.56 மில்லியன் டாலர் சராசரி சம்பளம்)
இந்தியா - 229 மடங்கு (1.46 மில்லியன் டாலர் சராசரி சம்பளம்)
யுனைடெட் கிங்டெம் - 201 மடங்கு (7.95 மில்லியன் டாலர் சராசரி சம்பளம்)

 

பிற முக்கிய தலைவர்கள்

 

நிறுவன தலைவர்கள்நிறுவன பெயர்சம்பளம்சாதாரண ஊழியர்களுடனான வித்தியாசம்
ஓம் பிரகாஸ் மன்சந்தா லால் பாத்லேப்ஸ் ரூ.33.20 கோடி தெரியவில்லை
எஸ் என் சும்பிரமணியன் எல் அண்ட் டி ரூ.23.71 கோடி 330 மடங்கு
டி பட்டாச்சார்யா ஹின்டால்கோ ரூ.19.77 கோடி தெரியவில்லை
வினோத் குமார் டாடா கம்யூனிகேஷன்ஸ் ரூ.16.87 கோடி 48.46 மடங்கு
விவேக் கம்பீர் காட்ரிஜ் கன்ஸ்யூமர் ரூ.15.95 கோடி 377 மடங்கு
மோஹித் குஜரால் டிஎல்எப் ரூ.15.20 கோடி தெரியவில்லை
சஞ்சீவ் மேத்தா ஹிந்துஸ்தான் யூனிலீவர் ரூ.14.20 கோடி 138.44 மடங்கு

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Top executives earn 243 times more salary than average staff

Top executives earn 243 times more than average staff - Tamil Goodreturns | சாதாரண ஊழியர்களை ஒப்பிடுகையில் இவர்களுக்கு மட்டும் 243 மடங்கு அதிக சம்பளமாம்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns