பங்கு சந்தையில் வெற்றிகரமாக முதலீடு செய்து பணக்காரர் ஆக வேண்டுமா? இதை படிங்க!

Written By:
Subscribe to GoodReturns Tamil

புதிதாக பங்குச்சந்தையில் நுழைபவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வர்த்தகத்தை அறிந்து, விரைவாகவும் சுலபமாகவும் பணக்காரர் ஆக வேண்டும் என நினைப்பர். இதனால் பங்குச்சந்தையை முழுவதுமாக புரிந்து கொள்ள முடியாமலும், வர்த்தக தந்திரங்களை கற்றுக்கொள்ள இயலாமலும் தவிப்பர். புதிதாக பங்குச்சந்தையில் நுழைபவர்களுக்கான 10 வர்த்தக இரகசியங்கள் இதோ..

அளவான மூலதன முதலீடு

புதிதாக பங்குச்சந்தையில் நுழைபவர்கள் விரைவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என ஆர்வத்துடன் இருப்பர். எனவே துவக்க காலத்தில் அதிகமாக முதலீடு செய்தால் நிறைய லாபம் பெறலாம் என எண்ணுவார்கள். அவர்களுக்கான முக்கிய அறிவுரையே, குறிப்பிட்ட அளவு பணத்தை மட்டும் மூலதனமாக முதலீடு செய்ய வேண்டும். நிறுவனத்திலே அல்லது வர்த்தகத்திலோ மூலதன முதலீட்டுக்கென ஒரு சதவீதத்தை அளவீடாக வைத்துக்கொள்வது அவசியம்

துவக்கத்திலேயே லாபத்தை எதிர்பார்க்க வேண்டாம்

துவக்க நிலையில் இருப்போரின் எண்ணவோட்டமே, குறுகிய காலத்தில் லாபம் பார்க்கவேண்டும் என்பது தான். அதுவே முடிவுகள் எடுப்பதில் தடைக்கல்லாக இருக்கிறது. எனவே அவர்கள் வர்த்தகம் செய்வதற்கான சரியான மனநிலையில், விரைவில் லாபத்தை எதிர்பார்க்காமல் இருக்கவேண்டும்.

வர்த்தக இதழ்கள்

அன்றாட நிகழ்வுகள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வது என்பது பங்குச்சந்தையில் மிக அவசியம். வர்த்தக மாத/வார இதழ்கள்,வர்த்தகம் பற்றிய அறிவைப் பெற முக்கிய பங்காற்றுகின்றன. வர்த்தகம் செய்பவர்கள் அன்றாடம் இதழ்களைப் படித்து, தினசரி வர்த்தகத்துடன் சம்பந்தப்படுத்துவதை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இடர்பாடுகளை ஆராய்தல்

முதலீட்டாளர் எந்த பங்கு/பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை மதிப்பிடுவதே இடர்பாடுகளை ஆராய்தல். துவக்க நிலையில் இருப்பவர்கள் இதற்கு அவ்வளவு முக்கியத்துவம் தரமாட்டார்கள். எனவே, நஷ்டத்தின் தாக்கம் எப்படி இருக்கும் என தெரிய வாய்ப்பில்லை. நஷ்டம் ஏற்படுவதைத் தடுப்பதற்கு, துவக்கத்திலிருந்தே இடர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.

பல்வேறு நுணுக்கங்களைப் புரிந்துகொள்ளுதல்

புதிதாக வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் சில நுணுக்கங்களை மட்டுமே தெரிந்து வைத்துக்கொண்டு மெத்தனமாக இருப்பதால், புதியவற்றைக் கற்க தவறுகின்றனர். சிறப்பாக வர்த்தகம் செய்ய புதிய நுணக்கங்களையும், திறன்களையும் வளர்த்துக்கொள்வது அவசியம்.

பண பங்குகளை தவிர்த்தல்

பங்குபரிமாற்ற மையங்களில் வர்த்தகம் செய்யப்படும் பண பங்குகள் அதிக லாபத்தைத் தரும் என்றாலும்,அதிக ஆபத்தும் உள்ளது. குறைந்த சந்தை மூலதனத்துடன் கிடைக்கும் இவ்வகை பங்குகள், அதிகமாகப் புழக்கத்தில் இல்லை. இந்த பங்குகள் அதிக லாபம் தருபதை என முதலீட்டர்களை கவரும் என்பதால் மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம்.

உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல்

புதிதாக வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் உடனுக்குடன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது என்பது பொதுவானது தான். இது அவர்களின் சிந்திக்கும் திறனைக் குறைத்து, வர்த்தகத்தில் கவனச்சிதறலை ஏற்படுத்தும். லாபமோ நஷ்டமோ ஒருவர் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்.

அடிப்படையை முதலில் கற்றைவேண்டும்

பங்குச்சந்தையைப் பற்றி அடிப்படை அறிவு இல்லாமலே சிலர் வர்த்தகத்தில் ஈடுபட ஆரம்பித்து விடுவர். அவர்களுக்கு பங்குச்சந்தை எப்படிச் செயல்படுகிறது என்பதே தெரியாது. பங்குச்சந்தையை பற்றி தெரியாததால் தனக்கு தெரிந்த ஒரே வழியில் வர்த்தகத்தில் ஈடுபடுவர்.

வரம்புகளைத் தவிருங்கள்

வரம்புக்குட்பட்ட பணத்தை (கடன் பெற்றது) முதலீடு செய்யக்கூடாது என்பதுதான் முக்கிய அறிவுரையே. இது வர்த்தகத்தில் விலையை அதிகரிக்கச் செய்து, வர்த்தகரின் புரிதலை குறைக்கிறது.

விரிவாக்கம்

ஆபத்தைக் குறைக்கும் நோக்கில் பிரித்து முதலீடு செய்வதே விரிவாக்கம் என்பர். இதன் மூலம் துவக்க நிலையில் இருப்பவர்கள் பல துறைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். எனவே பல்வேறு துறைகள்/வர்த்தகங்களில்/நிறுவனங்களில் பிரித்து முதலீடு செய்வதே சிறந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Secrets of Successful Trading in Share Market

Secrets of Successful Trading in Share Market
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns