வட இந்தியாவை மிஞ்சிய தென் இந்தியா...! எப்புடிங்க என மிரண்டு போன ஆர்பிஐ.!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த செய்தியை புரிந்து கொள்ள முதலில் remittance என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். Remittances வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்கள், தாங்கள் சம்பாதித்த பணத்தை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதே Remittances என்கிறோம். வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணம் இந்திய ரூபாயாக இருக்காது, அவர்கள் எந்த நாட்டில் வேலை பார்த்து சம்பளம் வாங்குகிறார்களோ அந்த நாட்டின் கரன்ஸியாகத் தானிருக்கும். அந்த கரன்ஸியை இந்திய வங்கிகளுக்கு அனுப்பி அதை இந்திய ரூபாய் நோட்டுக்களாக அன்றைய தேதிக்கு என்ன மாற்றுத் தொகையோ அதைத் தான் கொடுப்பார்கள். இது தான் Remittances.

 

அதிக வேலையாட்கள்

அதிக வேலையாட்கள்

ஆக மேலே சொன்ன லாஜிக் படி, எந்த மாநிலத்தவர்கள் அதிகம் வெளிநாடுகளில் பணியாற்றுகிறார்களோ அந்த மாநிலத்தில் இருந்து தான் அதிக Remittances தொகை இந்தியாவுக்குக் கிடைக்கும். அது தானே லாஜிக். அதே போலத் தான் இங்கு மத்திய ரிசர்வ் பேங்கின் கணக்குகளும் சொல்கின்றன.

 ஆர்பிஐ சர்வே

ஆர்பிஐ சர்வே

சமீபத்தில் ஆர்பிஐ 2017-ஆம் ஆண்டிற்கான Remittances சர்வே முடிவுகளை வெளிட்டுள்ளது. ஆர்பிஐ-இன் சர்வே முடிவுகள் படி 2007-ல் 69 பில்லியன் டாலர் இந்தியாவுக்கு Remittances முறையில் கிடைத்திருக்கிறது. இந்தியாவின் மொத்த அந்நிய செலாவணி இருப்பு சுமார் 400 பில்லியன் டாலர். ஆக அந்த 400 பில்லியன் டாலரில் 17.25 சதவிகிதம்.

நாங்க நாலு பேர்
 

நாங்க நாலு பேர்

தேற்கே தேய்கின்ற தென் மாநிலங்களான கேரளா,கர்நாடகா,ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்கள் மட்டும், இந்தியாவுக்கு வந்த மொத்த வெளிநாட்டு பணத்தில் 46 சதவிகித பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். டாலர் மதிப்பில் இதுஅந்த 46 சதவிகிதம், 31.74 பில்லியன் டாலர். சரி இதில் யாருக்கு முதல் இடம் பிடிப்பது என்றால் கடவுளின் தேசமான கேரளம் தான். ஆர்பிஐ சர்வே முடிவுகள் படி கேரளா சுமார் 13.11 பில்லியன் டாலரை Remittances முறையில் வெளிநாட்டில் இருந்து உழைத்து அனுப்பி இருக்கிறார்கள்.

தனி கணக்கு

தனி கணக்கு

கேரளா - 19%, கர்நாடகம் - 15%, தமிழ்நாடு - 8%, ஆந்திரப் பிரதேசம் - 4% இது தான் தென் மாநிலங்களின் Remittances விவரங்கள்.

உலக சாதனை

உலக சாதனை

உலகிலேயே இந்தியர்கள் தான் திரை கடல் ஓடி திரவியம் தேடுவதில் கடந்த சில ஆண்டுகளாக முன்னனியில் இருகிறோமாம். இதையும் மத்திய ரிசர்வ் வங்கியினர் தங்கள் கணக்கெடுப்பில் சொல்லி இருக்கிறார்கள்.

எங்கிருந்து வருது

எங்கிருந்து வருது

இந்த 69 பில்லியன் டாலரில் 82% ஏழு நாடுகளில் இருந்து தான் வருகிறது- ஐக்கிய அரேபிய அமீரகம், அமெரிக்கா, சவூதி அரேபியா, கத்தார், குவைத், யுனைடெட் கிங்டம் மற்றும் ஓமன். வெளிநாட்டில் பணி புரியச் செல்லும் இந்தியர்களில் 90% பேருக்கு கல்ப் மற்றும் தென் கிழக்கு ஆசியா நாடுகள் தான் இலக்காக இருக்கிறதாம். சுருக்கமாக வளைகுடா நாடுகள் நம்மவர்களுக்கான முதல் வேலை தேடு தளம்.

அமெரிக்காவே அடுத்து தான்

அமெரிக்காவே அடுத்து தான்

அதிகம் சம்பாதிக்கும் இந்தியர்கள் வேலைபார்க்கும் அமெரிக்காவே இந்தியர்களுக்கு இரண்டாவது இடம் தான். இங்கு வேலைசெய்பவர்கள் 70% இந்தியர்கள் 500$-க்கு மேல் தான் பரிவர்த்தனை செய்கிறார்களாம். வெறும் 2.7% நபர்கள் மட்டுமே 200$-க்கு குறைவான பரிவர்த்தனைகள் செய்கின்றனர் என்கிறது ஆர்பிஐ கணக்கெடுப்புகள்.

என்ன பண்றாங்க

என்ன பண்றாங்க

வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தில் 50% மேல் தங்களின் குடும்ப செலவுக்குப் பயன்படுத்துகின்றனர் அது போக 20% தொகையை வங்கி டெபாசிட்களுக்கும், 8.3% தொகையை நிலம் மற்றும் பங்குகளை வாங்கிப் போடவும் பயன்படுத்துகிறார்கள்.

எப்படி அனுப்புகிறார்கள்

எப்படி அனுப்புகிறார்கள்

75% பணம் Rupee Drawing Arrangements (RDA) முறையிலேயே இந்தியாவிற்கு அனுப்பப்படுகிறது. இந்த முறைக்கு வங்கிகள் மற்றும் இந்தியாவைச் சேராத நிறுவனங்களில் வோஸ்ட்ரோ அக்கவுண்ட்கள் மூலம் பணத்தை மாற்றிக்கொள்ளலாம். இதற்கான பரிவர்தனை செலவு மற்ற முறைகளை விடக் குறைவு. இதற்குப் பிறகு ஸ்விப்ட் முறை அதிகம் பயன்படுத்தப்படுகிறார்களாம். இந்த இரண்டு முறைக்குப் பிறகு தான் வழக்கமாக காசோலைகளை எழுதுவது, டிராஃப்ட் எடுத்து அனுப்புவது எல்லாமாம்.

செலவு தெரியுமா?

செலவு தெரியுமா?

2013-ல் இந்தியாவுக்கு 200 அமெரிக்க டாலர் அனுப்ப 9.1% செலவு ஆகும். அதே 200 டாலரை 2018-ல் அனுப்ப வெறும் 5.6% தான் ஆகிறதாம். அதே போல 500 அமெரிக்க டாலரை அனுப்ப 2013-ல் ஆன செலவுத் தொகை 4.9%. இப்போது 2018-ல் 3.3% ஆக குறைந்துள்ளதாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

south india beats north india in foreign remittances

south india beats north india in foreign remittances
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X