நாடு முழுவதும் டிவி, ரேடியோ ஆன்லைன் விளம்பரத்துக்கு ரூ.65000 கோடி செலவு - தென் இந்தியா டாப்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: பூக்கடைக்கும் இன்றைக்கு விளம்பரம் தேவைப்படுகிறது. நாடு முழுவதும் ஊடகங்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. டிவி, எஃப்எம், சேட்டிலைட் சேனல்கள். நாளிதழ்கள், வார இதழ்கள் என தினசரியும் விளம்பரங்கள் கொடி கட்டிப்பறக்கின்றன. நொடிக்கு நொடி விளம்பரங்கள் சேனல்களில் வெளியாகின்றன. நாடு முழுவதும் கடந்த ஆண்டு விளம்பரங்களுக்காகச் செலவு செய்வது 10 சதவிகிதத்திலிருந்து 14 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

நாடுமுழுவதும் நாளுக்கு நாள் தொலைக்காட்சி சேனல்கள், எஃப் எம் ரேடியோக்கள் அதிகரித்து வருகின்றன. இந்த சேனல்களில்

கடந்த 2018ஆம் ஆண்டு விளம்பரத்துக்காகச் செலவு செய்ததில் தென் இந்தியா தான் முதல் இடம் என்று டிஏஎம் மீடியா ரிசர்ச் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்திய விளம்பரத்துறையின் வளர்ச்சி அபரிமாக உள்ளது. தங்களின் பொருட்களையும் பிராண்டுகளையும் விளம்பரப்படுத்த கோடிக்கணக்கில் செலவு செய்கின்றனர். இந்தியாவில் விளம்பரம் செய்ய எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்ற ஒரு அறிக்கையை டிஏஎம் மீடியா ரிசர்ச் நிறுவனம் சவுத்சைடு ஸ்டோரி 2019 என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது.

ரூ.65000 கோடி செலவு

ரூ.65000 கோடி செலவு

இந்தியா முழுவதும் 2018ஆம் ஆண்டு விளம்பரங்களுக்காக 65,000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். அதிலும் மூன்றில் ஒரு பங்கு 20,000 கோடி ரூபாய் தென் இந்திய விளம்பர செலவு என்று தெரியவந்துள்ளது.

14 சதவிகிதம் அதிகரிப்பு

14 சதவிகிதம் அதிகரிப்பு

தென் இந்தியாவில் 190 தொலைக்காட்சி சேனல்கள், 300 பத்திரிகைகள் மற்றும் 30 வானொலி நிலையங்கள் உள்ளன. 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2018-ம் ஆண்டுத் தென் இந்தியாவில் தொலைக்காட்சி சேனல்களின் எண்ணிக்கை 45 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

2018ஆம் ஆண்டுத் தேசிய அளவில் விளம்பரங்களுக்காகச் செலவு செய்வது 10 சதவிகிதத்திலிருந்து 14 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

தென் இந்திய ஊடகங்கள்
 

தென் இந்திய ஊடகங்கள்

தென்இந்திய தொலைக்காட்சி, அச்சு ஊடகம் மற்றும் ரேடியோ போன்றவற்றில் 2018ஆம் ஆண்டு 690 பிரிவுகளில் 66,000 விளம்பரதாரர்கள் 86,000 பிராண்டுகளின் விளம்பரங்களைச் செய்துள்ளனர் தொலைக்காட்சி, அச்சு ஊடகம் மற்றும் ரேடியோ மூன்றும் 80 சதவிகித விளம்பரங்களைப் பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளன.

எந்த ஊடகத்திற்கு எவ்வளவு

எந்த ஊடகத்திற்கு எவ்வளவு

அதிகபட்சமாக தொலைக்காட்சிக்கு 38 சதவிகிதம் செலவு செய்யப்பட்டுள்ளது. அச்சு ஊடகங்களுக்கு 32 சதவிகிதம், டிஜிட்டல் மீடியாவிற்கு 19 சதவிகிதம், அவுட்டோர் 6 சதவிகிதம், ரேடியா 4 சதவிகிதம், சினிமா தியேட்டர்களுக்கு 1 சதவிகிதம் என விளம்பரத்திற்கு செலவு செய்யப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு எவ்வளவு

2019ஆம் ஆண்டு எவ்வளவு

பிராண்டுகளை விளம்பரப்படுத்த செய்யும் செலவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு இதுவே 12.8 சதவிகிதமாக இருந்தது. கடந்த ஆண்டு 14 சதவிகிதம் அதிகரித்தது நடப்பாண்டில் இதுவே 16.4 சதவிகிதம் அதிகரித்து 70ஆயிரத்து889கோடியாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

South India contributed Rs 20,000 crore in 2018 to overall ad expenditure

The South India market contributed a total of Rs. 20, 000 crore of advertising money to the overall advertising expenditure in 2018 said LV Krishnan, chief executive, TAM Media Research on the sidelines of the unveiling Southside Story 2019 market study.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X