2019 உலக கோப்பை இந்திய கிரிக்கெட் அணி ஜெர்ஸிக்கு 33 பிளாஸ்டிக் பாட்டில்கள் போதும்.! வாழ்த்துகள் Nike

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2019-ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை வரும் மே 30-ம் தேதி தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை நடக்க இருக்கிறது.

 

இங்கிலாந்தும் வேல்ஸ்-ம் தான் உலகக் கோப்பைப் போடிகளை நடத்த இருக்கிறார்கள். அதற்கு பல்வேறு தயாரிப்புகள் நடந்து கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. அதற்குள் கூகுள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு தனி வேலைகளை எல்லாம் பார்த்துவிட்டது.

இப்போது சமீபத்தில் இந்திய அணியின் கிட்டுகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது நைக் நிறுவனம். அதை தோனி, கோலி உட்பட இந்திய அணியினர் அணிந்து போஸ் கொடுத்திருக்கிறார்கள்.

ஜெர்ஸி

ஜெர்ஸி

கிட்டுகள் எல்லாம் ஒரு பகுதி என்றால் விளையாட்டுக்கான ஜெர்ஸிகளுக்கு எப்போதுமே தனி கவனம் உண்டு. இன்னும் சொல்லப் போனால் ஜெர்ஸி ராசி பார்த்து இந்தியாவின் வெற்ரி தோல்விகளை கணிக்கும் வெறித்தன ரசிகர்கள் கூட உண்டு இந்தியாவுக்கு. நேற்று இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி அறிமுக விழா ஹைதராபாத்தில் நடந்தது. இந்திய ஆண்கள் அணி சார்பாக அணியின் தலைவர் விராட் கோலியோடு, தல தோனி, ரஹானே ஆகியோரும், பெண்கள் அணி சார்பாக ஹர்மன்ப்ரீத் கவுரும், ஜெமிமா ரொட்ரிகஸும் ஜெர்ஸிகளை அணிந்து போஸ் கொடுத்திருக்கிறார்கள்.

ஜெர்ஸி தயாரிப்பு யார்..?

ஜெர்ஸி தயாரிப்பு யார்..?

இந்த உலக கோப்பைக்கும் உலகின் புகழ்பெற்ற Nike நிறுவனம் தான் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியைத் வடிவமைத்து தயாரித்திருக்கிறார்கள். Nike நிறுவனம் இப்போது வரை இந்திய அணியின் அதிகாரபூர்வ ஆடைகளுக்கான ஸ்பான்ஸராக இருக்கிறார்கள். சரி இந்த புதிய ஜெஸியில் என்ன ஸ்பெஷல் இருக்கிறது..? எனக் கேட்டால் ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்கிறது நைக் நிறுவனம்.

என்ன ஸ்பெஷல்..?
 

என்ன ஸ்பெஷல்..?

ஜெர்ஸி நிறங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இம்முறை இரண்டு நீல நிறங்கள் ஜெர்சியில் இருக்கிறதாம். அதை நாமே பார்க்கலாமாம். இந்த புதிய ஜெர்சிகள் மறுசுழற்சி செய்யப்படும் பாலியஸ்டரில் தயாரிக்கப்பட்டுள்ளனவாம். 2015 உலகக் கோப்பையிலும் இந்திய அணி அணிந்த ஜெர்சிகள் அனைத்துமே மறுசுழற்சி பாலிஸ்டர்களில் தான் தயாரித்தவைகளாம். ஆனால் அதே மாடலில் இப்போது இன்னும் எடை குறைவாக, இன்னும் மீள் தன்மை (Elasticity) அதிகமுள்ள வகையில் இந்திய அணியின் ஜெர்ஸிகளை வடிவமைத்திருக்கிறார்களாம்.

அதென்ன மறு சுழற்சி பாலிஸ்டர்..?

அதென்ன மறு சுழற்சி பாலிஸ்டர்..?

நீங்கள் நினைப்பது போல பாலிஸ்டர் துணிகளில் இருந்தோ அல்லது பாலிஸ்டர் துணிகளின் மறு சுழற்சி செய்து இந்த ஜெர்ஸியைத் தயாரிக்கவில்லை. பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தான் தயாரிக்கிறார்கள். அதனால் தான் அதிக மீள் தன்மை (Elasticity) உடன் இருக்கிறதாம்.

ஏன் பாலிஸ்டர் கிடையாது..?

ஏன் பாலிஸ்டர் கிடையாது..?

Ethylene glycol, Dimethyl terephthalate போன்ற பெட்ரோ கெமிக்கல்களைக் கொண்டு பாலிமரைசேஷன் முறையில் தயாரிக்கப்படும் துணிகள் தான் பாலிஸ்டர். பருத்தி துணிகளில் நாம் நினைத்த படிக்கு எல்லாம் தைத்துப் போட முடியாது. ஆனால் பாலிஸ்டர் நான் சொல்லும் இடத்தில் வளையும், நெலியும் தன்மை கொண்டது. அதனால் தான் ஆங்கிலேயர்கள் போன பின்னும் நமக்கு பாலிஸ்டர் பிடித்துப் போனது.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

இந்தியர்கள் 1900 காலங்களில் இருந்து, பார்த்திராத டிசைன்களில் எல்லாம் பாலிஸ்டர்களில் தான் ஆடைகளை தைத்து விற்கத் தொடங்கினர். புதிய டிசன், காட்டன் ஆடைகளைப் போல அதிக பராமரிப்புகள் தேவை இல்லை. குறிப்பாக பாலிஸ்அர் காட்டன் ஆடைகளைப் போல சுருக்கம் விழாது எப்போதுமே அயர்ன் செய்தது போலவே இருக்கும். ஆகையினால் இந்தியாவில் நல்ல வரவேற்பு இருந்தது. வியாபாரமும் பருத்திக்கு சமமாக வளர்ந்தது.

உடல் நலம் காக்கும்

உடல் நலம் காக்கும்

பாலியஸ்டரில் உள்ளது போன்ற மீள் தன்மை (Elasticity) பருத்தியில் வரவே வராது. ஆனால் பாலிஸ்டரில் உள்ள ரசாயனங்கள் காரணமாக தோலில் சில பிரச்னைகள் கூட எழலாம். அதனால் பாலிஸ்டர் ஆடைகளைப் புறந்தள்ளிவிட்டு, பிளாஸ்டிக் பாலிஸ்டர்களில் ஆடையைத் தாயார் செய்திருக்கிறது நைக்.

மூலப் பொருள்

மூலப் பொருள்

PET (Polyethylene terephthalate) பாட்டில்கள் என்று சொல்வோமே, அதே PET பாட்டில்களை நொறுக்கிப் பொடிபொடியாகி, அவைகளில் இருக்கும் கசடுகள், அழுக்குகளை எல்லாம் சுத்தம் செய்து மீண்டும் அந்தப் பொடிகளை சிறு சிறு கட்டிகளாக்கி, அந்தக் கட்டிகளை பெரிய நூல் கண்டுகளாக மாற்றிக் கொள்கிறார். இந்த நூல் கண்டுகளை வைத்து தான் இந்திய ஜெர்ஸிகளுக்குத் தேவையான துணிகளைத் தயாரிக்கிறார்கள். ம்ற்றொரு சுவாரஸ்யமான செய்தி ஒரு ஜெர்சி முழுவதும் உருவாக்க சுமார் 33 பிளாஸ்டிக் பாட்டில்கள் மட்டும் போதுமாம்.

அறிவியல் பூர்வமாக

அறிவியல் பூர்வமாக

அறிவியல் வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் விளக்கவேண்டும் என்றால் Granularization - De polymerization மற்றும் Re-polymerization என்று சொல்கிறார்கள். இதைத் தான் நைக் செய்கிறதாம். இந்த முறையில் தயாரிக்கப்படும் ஆடைகளுக்கு தகுந்தாற் போல இந்த பாலிஸ்டர் நூலோடு பருத்தி, பாலிஸ்டர் துணி போன்றவைகளையும் கலந்து செய்கிறார்களாம்.

அறிவியல் பூர்வமாக

அறிவியல் பூர்வமாக

அறிவியல் வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் விளக்கவேண்டும் என்றால் Granularization - De polymerization மற்றும் Re-polymerization என்று சொல்கிறார்கள். இதைத் தான் நைக் செய்கிறதாம். இந்த முறையில் தயாரிக்கப்படும் ஆடைகளுக்கு தகுந்தாற் போல இந்த பாலிஸ்டர் நூலோடு பருத்தி, பாலிஸ்டர் துணி போன்றவைகளையும் கலந்து செய்கிறார்களாம்.

காசு மிச்சம்

காசு மிச்சம்

பாலிஸ்டர் துணிகளைத் தயாரிக்க ஆகும் செலவை விட, PET மறு சுழற்சி முறையில் துணிகளைத் தயாரிக்க சுமார் 40 முதல் 50 சதவிகிதம் வரை குறைவாகவே செலவாகுமாம். செலவு போக, மக்காத பிளாஸ்டிக்குகள் மறு சுழற்சி மூலம் ஆடைகளுக்கு பயன்படுத்தப் படுவதால் சுற்றுச்சூழலுக்கும் நல்லது என தம்ஸப் காட்டுகிறது நைக்.

Sustainable Fashion

Sustainable Fashion

மேற்கத்திய நாடுகளில் `Sustainable Fashion' என ஒரு விஷயத்தைப் பேசி வருகிறார்கள். இயற்கை ஆர்வலர்களும் சூழலியல் ஆர்வளர்கள் பலரும் இதுகுறித்து பேசத்தொடங்கி இருக்கிறார்கள். அதற்கு இந்த ஜெர்ஸி ஒரு முன் மாதிரி எனவும் சொல்கிறது நைக்.

வீரர்கள் கருத்து..?

வீரர்கள் கருத்து..?

ஒவ்வொரு முறையும் வீரர்களின் விருப்பங்கள் கேட்டு அவற்றை வடிவமைப்பில் கொண்டு வருகிறது Nike. புதிய ஜெர்சி பற்றி கோலி, தோனி நேற்றைய விழாவில் புகழ்பாடினர். ஒரு துணியை மேலே அணிந்திருக்கிறோம் என்கிற உணர்வே இல்லை. அத்தனை மெலிதாகவும், பாரமின்றியும் இருக்கிறது எனப் புகழ்கிறார் நம்ம தல தோனி. அதோடு ஒரு முழு ஆட்ட நேரத்திலும் இதே போல பாரமின்றி இலகுவாகவே இருக்குமென நம்புகிறேன் என்றார் தோனி. Nike உருவாக்கிய ஆடைகளிலேயே இது பெஸ்ட்டாக இருக்கிறது" என நெத்தி அடி கொடுத்திருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் கோலி.

நாமும் வாங்கலாம்

நாமும் வாங்கலாம்

இப்போது சில தேர்தெடுக்கப்பட்ட நைக் ஸ்டோர்களில் மட்டுமே இந்த ரக ஆடைகளை வாங்க முடியுமாம். அடுத்த சில மாதங்களில் உலகம் முழுக்க உள்ள நைக் ஸ்டோர்களிலும் இந்த மறு சுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட இலகு ஆடைகளை விற்க இருக்கிறதாம். ஆனால் ஒரு இந்த ரக துணிகளில் தயாரிக்கப்பட்ட ஆடைகளின் விலை என்னவாக இருக்கும் எனச் சொல்லவில்லை Nike. அநேகமாக ஆரம்பமே ஐந்து இலக்கங்களில் இருக்கலாம் என ஆடை வடிவமைப்பாளர்கள் சொல்கிறார்கள்.

நெட்டிசன்கள்

நெட்டிசன்கள்

"என்னையா கிரகம் மாதிரி இருக்கு" "இந்தியா ஜெர்ஸி ரொம்ப மோசம்" "எங்க ஆத்தாகிட்ட கொடுத்தா கூட இத விட நல்ல டிசன் போடுவா" என ஒரு பக்கம் கலாய்த்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் "மறு சுழற்சி பிளாஸ்டிக்குகளை ஆடைகளாக அணிந்து கொண்டு இந்தியா உலக நாடுகளுக்கு ஒரு வழிகாட்டியாக வரலாற்றில் இடம் பிடிக்கிறது" எனவும் நெகிழ்ந்து வருகிறார்கள்.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

சூழலியலை கருத்தில் கொண்டு ஒரு ஆடையைத் தயாரித்து, இன்று உலகின் பிரபலமான, கிரிக்கெட் அணியில் ஒன்றுக்கு அணிவித்திருக்கும் நைக் நிறுவனத்துக்கு ஒரு சல்யூட். குப்பைகளில் இர்நுது ஜெர்ஸியா என முகம் சுழிக்காமல் புதுமையை ஏற்றுக் கொண்ட இந்தியாவுக்கும் ஒரு சல்யூட் + வாழ்த்துக்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

2019 icc world cup indian cricket team jersey made up of 33 plastic bottles

2019 icc world cup indian cricket team jersey made up of 33 plastic bottles
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X