யூ டியூப் பயன்படுத்துவதில் அமெரிக்காவை மிஞ்சிய இந்தியா - இங்கு எல்லாமே மலிவுதான்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியா இளைஞர்களிடம் தற்போது தொலைக்காட்சிகளைப் பார்ப்பதை விட யூ டியூப் சேனல்கள் மூலம் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது அதிகரித்து வருகின்றது. யூடியூப் சேனல் இளைஞர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டுச் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வருகின்றனர். சர்வதேச அளவில் யூ-டியூப் பயன்படுத்துவதில் அமெரிக்காவை மிஞ்சி இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக வீடியோ ஸ்ட்ரீமிங் சர்வீஸஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஒஜ்சிக்கி தெரிவித்துள்ளார்.

 

மலிவு விலையில் ஸ்மார்ட் ஃபோன்கள் கிடைக்கின்றன. கூடவே இன்டர்நெட் மலிவான விலையில் கிடைக்கிறது. வீடியோக்களை யூ டியூப் மூலம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது யூ-டியூபில் ஆரம்ப கல்வி முதல் மருத்துவம், பொறியியல், பொது அறிவு, விளையாட்டு, சுகாதாரம், சமையல் குறிப்பு என அனைத்தையும் கற்றுக்கொடுக்கும் ஆசானாக யூ-டியூப் இருப்பதால் அதற்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

அளவுக்கதிகமான ஸ்மார்ட் ஃபோன் பயன்பாடு காரணமாக இந்த விஷயத்தில் இந்தியர்கள் அமெரிக்கர்களை மிஞ்சியுள்ளனர். மிக மலிவான டேட்டா கட்டணம் மற்றம் மிகக் குறைவான விலையில் ஸ்மார்ட் ஃபோன்கள் கிடைப்பதால் தான் இது சாத்தியமானது என்றும் ஒஜ்சிக்கி கூறினார்.

8,133 டன் தங்கம் ஒரே நாட்டிடம் இருக்கிறதா..? எந்த நாடு அது..?

அதிகரித்த செல்போன் பயன்பாடு

அதிகரித்த செல்போன் பயன்பாடு

இந்திய இறையான்மை மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையே கூட்டுக்குடும்ப கலாச்சாரம் தான். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என அனைத்து உறவுகளும் ஒரே வீட்டில் வாழ்ந்த காலம் இருந்தது. அப்போது ஊருக்கு ஒரு தொலைபேசி மட்டுமே இருந்தது. ஏதாவது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தால் கூட அனைவரும் ஒன்றாக இருந்து பேசி கூடிக்குழாவிய நெகிழ்ச்சியான காலம் அது. அதெல்லாம் செல்ஃபோன் வரும் வரையில்தான். எப்போது செல்ஃபோன் நம் கைக்கு வந்ததோ அப்போதே கூட்டுக் குடும்பம் என்ற உறவு நூல் அறுந்து போனது.

ஸ்மார்ட் போன் பயன்பாடு

ஸ்மார்ட் போன் பயன்பாடு

தொடக்கத்தில் இருந்த மொபைல் ஃபோன்கள் பெரிய அளவில் பொது மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதன் பின்னர் வந்த ஸ்மார்ட் ஃபோன்களால் உலகமே உள்ளங்கையில் வந்து உட்கார்ந்தது போல் அனைவரும் நினைக்க ஆரம்பித்தனர். இதனால் அருகில் இருக்கும் உறவுகளை மறந்து விட்டனர். அவர்களுடன் பேசவேண்டுமானால் கூட ஸ்மார்ட் ஃபோன் மூலமாகத்தான் பேசுகின்றனர்.

யூ டியூப்பில் மூழ்கிய இந்தியர்கள்
 

யூ டியூப்பில் மூழ்கிய இந்தியர்கள்

நாளடைவில் உறவுகளுடன் பேசுவதை தவிர்த்து ஸ்மார்ட் ஃபோன்களுடன் கொஞ்ச ஆரம்பித்தனர். ஸ்மார்ட் ஃபோன்களில் உள்ள பொழுது போக்கு அம்சங்களை ஆராய்வது, கல்வி மற்றும் நடைமுறை வாழ்க்கைக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் ஆராய்வது, யூ-டியூபில் பிடித்த அம்சங்களைப் பார்ப்பது போன்றவற்றில் தான் பொழுதை கழிக்கின்றனர்.

யூ டியூப்பில் வீடியோ

யூ டியூப்பில் வீடியோ

தமிழக இளைஞர்களிடம் தற்போது தொலைக்காட்சிகளைப் பார்ப்பதை விட யூடியூப் சேனல்கள் மூலம் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது அதிகரித்து வருகின்றது. யூடியூப் சேனல் இளைஞர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டுச் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வருகின்றனர். தற்போது யூ-டியூபில் ஆரம்ப கல்வி முதல் மருத்துவம், பொறியியல், பொது அறிவு, விளையாட்டு, சுகாதாரம், சமையல் குறிப்பு என அனைத்தையும் கற்றுக்கொடுக்கும் ஆசானாக யூ-டியூப் இருப்பதால் அதற்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

விளம்பர வருமானம்

விளம்பர வருமானம்

யூடியூபினில் நிகழ்ச்சிகளை வெளியிடுவதினால் லட்சக்கணக்கில் ஒவ்வொரு மாதமும் வருவாயினைக் கூகுள் அளிக்கின்றது ஒரு பக்கம் கூகுள் நிறுவனம் விளம்பரம் அளிக்கும் நிலையில் தனியார் நிறுவனங்கள் நேரடியாக இவர்களைத் தேடிச் சென்று விளம்பரம் அளிப்பதால் நிகழ்ச்சிகளை வெளியிடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

வளர்ச்சிக்கு காரணம்

வளர்ச்சிக்கு காரணம்

இந்தியாவின் இணையப் பயன்பாட்டில் உள்ளூர் மொழிகளில் வீடியோக்களை பார்ப்பதில் தான் அதிக ஆர்வம் காணப்படுகிறது. இன்று ஆன்லைன் வீடியோ பார்ப்பதில் 95% அளவிற்கு இந்திய மொழி சார்ந்த விஷயங்களே இருக்கின்றன. இந்த எண்ணிக்கை இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட நகரங்களில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. உள்ளூர் மொழிக்கான தரவுகளும் பெரிதாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்றார். மொபைல் மூலம் யூ-டியூப் பார்ப்பது 85 சதவிகித அளவிற்கு அதிகரித்துள்ளது. 60 சதவிகித அளவிலான பார்க்கும் நேரம், 6 மிகப்பெரிய மெட்ரோ நகரங்களுக்கு வெளியில் இருந்து கிடைத்துள்ளது.

இந்தியாவில் வளர்ச்சி அதிகரிப்பு

இந்தியாவில் வளர்ச்சி அதிகரிப்பு

இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவில் இணையப் பயன்பாடு உயர்ந்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு வரை, சில நூறு எம்.பி.,க்கள் மட்டுமே இணையம் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது மாதந்தோறும் சராசரியாக 10 ஜிபி என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது. யூடியூப் இந்தியாவில் 2018ஆம் ஆண்டு கற்றல் மற்றும் கல்வி சார்ந்த தரவுகளே அதிவேகமாக வளரும் விஷயங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

யூ டியூப் தலைமை செயல் அதிகாரி

யூ டியூப் தலைமை செயல் அதிகாரி

உலகிலேயே இந்தியாவில் தான் டேட்டா கட்டணம் குறைவாகும். அதுவும் கடந்த 2016 செப்டம்பரில் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோவை அறிமுகம் செய்ததில் இருந்து கட்டணம் குறையத் தொடங்கியது. மூன்றாண்டுகளுக்கு முன்பு 1 ஜிபி டேட்டாவிற்கு ரூ.100 செலவிட வேண்டியிருந்தது. ஆனால் தற்போது இந்த தொகையில் 10ல் ஒரு பங்கு அளவிற்கு கட்டணம் குறைந்துள்ளது. யூ டியூப் பயன்படுத்துவதில் இந்தியா தற்போது அமெரிக்காவை மிஞ்சியுள்ளது என்று வீடியோ ஸ்ட்ரீமிங் சர்வீஸஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஒஜ்சிக்கி தெரிவித்துள்ளார்.


தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India is YouTube’s largest and fastest growing audience in the world: CEO

India is now both our biggest audience and one of our fastest growing audiences in the world. YouTube today has become the first stop for users to consume content, whether they’re looking for entertainment or information.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X