அமெரிக்காவின் எச்-1பி விசா கெடுபிடி - மெக்சிகோ நாட்டை குறிவைக்கும் இந்திய ஐடி கம்பெனிகள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: அமெரிக்க அரசு இந்திய தகவல் தொழில்நுட்ப இளைஞர்களுக்கு வழங்கும் எச்-1பி விசா நடைமுறைகளில் கெடுபிடி காட்டி வருவதால், இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோ பக்கம் தன் பார்வையை திருப்பத் தொடங்கி உள்ளது.

 

கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்தே டொனால்டு ட்ரம்ப் இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை குறிவைத்து கெடுபிடி காட்டி வருவதால் கடந்த 2 ஆண்டுகளாக எச்-1பி விசா பெறுவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

எச்-1பி விசா பெறுவதற்கு அதிகபட்ச சம்பளம் வாங்க வேண்டும் என்று அமெரிக்கா நிர்பந்திப்பதால் அதன் அண்டை நாடான மெக்சிகோவின் பக்கம் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் பார்வையை திருப்பியுள்ளன.

ஒரு தவணையை தாமதமாகச் செலுத்தினாலும் Risk Premium என்கிற பெயரில் கூடுதல் வட்டி..! அதிரடியில் SBI..!

இந்தியர்களுக்கு முக்கியத்துவம்

இந்தியர்களுக்கு முக்கியத்துவம்

அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தவரையிலும் இந்திய தகவல் தொழில்நுட்ப இளைஞர்களுக்கு எச்-1பி விசா பெறுவதில் எந்தவிதமான சிக்கலும் ஏற்படவில்லை. எச்-1பி விசா வழங்குவதில் இந்திய ஐடி இளைஞர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது.

1 லட்சம் டாலர் சம்பளமா பிடி எச்-1பி விசா

1 லட்சம் டாலர் சம்பளமா பிடி எச்-1பி விசா

டொனால்டு ட்ரம்ப் அதிபராக பதவிக்கு வந்த உடனே முதல் வேலையாக இந்திய ஐடி இளைஞர்களின் அமெரிக்க கனவுக்கு வேட்டு வைக்க தொடங்கினார். எச்-1பி விசா வேண்டுமென்றால் சம்பளம் குறைந்தபட்சம் 1 லட்சம் டாலர் இருக்கவேண்டும் என்றார். அடுத்ததாக அமெரிக்க ஐடி கம்பெனிகள் அனைத்துமே அமெரிக்க ஐடி இளைஞர்களுக்கே முன்னுரிமை தரவேண்டும் என்று கெடுபிடிகள் காட்ட ஆரம்பித்தார்.

இந்தியாவா எச்-1பி விசா கிடையாது
 

இந்தியாவா எச்-1பி விசா கிடையாது

டொனால்டு ட்ரம்புக்கு முன்பு அதிபராக ஒபாமா இருந்த காலங்களில் எச்-1பி விசா வழங்குவதில் மற்ற நாட்டவரைவிட, இந்திய ஐடி இளைஞர்களுக்கே அதிகப்படியான முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறை சலுகை ட்ரம்ப் வந்தவுடன் மாறத் தொடங்கி, இந்தியர்களின் எச்-1பி விசாக்கள் திருப்பு அனுப்பப்பட்டன.

 மெக்சிகோ எங்கே

மெக்சிகோ எங்கே

அமெரிக்க இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பதற்காகவே இந்தியர்கள் விண்ணப்பித்திருந்த எச்-1பி விசாக்களை நிராகரித்து திருப்பி அனுப்பினார். இதை நன்கு உணர்ந்துகொண்ட இந்திய ஐடி கம்பெனிகள் அமெரிக்காவின் அண்டை நாடுகளான மெக்சிகோ மற்றும் கனடாவின் பக்கம் தங்கள் பார்வையை திருப்பி உள்ளன.

வாங்க பழகலாம்

வாங்க பழகலாம்

அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்று வேலை பார்த்தாலும் செலவுகள் அதிகம் என்பதாலும் தற்போது இந்திய ஐடி கம்பெனிகள் அண்டை நாடுகளுக்கு தாவத் தொடங்கி உள்ளன. கனடா ஏற்கனவே இந்திய ஐடி கம்பெனிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. அதுபோல், தற்போது மற்றொரு அண்டை நாடான மெக்சிகோவும் இந்திய கம்பெனிகளுக்கு வாய்ப்பு அளித்துள்ளது.

 செலவுகள் குறையும்

செலவுகள் குறையும்

இந்திய ஐடி கம்பெனிகள் மெக்சிகோவை தேர்ந்தெடுத்ததற்கு மற்றொரு காரணம், அமெரிக்காவைக் காட்டிலும் மெக்சிகோவில் செலவு குறைவாகும். அதோடு ஐடி நிறுவன ஊழியர்களுக்கு அளிக்கும் சம்பளமும் குறைவாகும். அதோடு மெக்சிகோவில் தங்களின் கிளைகளை அமைப்பதால், தங்களின் வாடிக்கையாளர்களுக்கும் உள்ள தூரம் குறையும். அதோடு, நீண்டகால அடிப்படையில் நெருக்கத்தை ஏற்படுத்தி செலவுகளையும் குறைத்துக்கொள்ள முடியும் என்று இந்திய ஐடி கம்பெனிகள் உறுதியாக நம்புகின்றன.

கலிஃபோர்னியாவில் செலவு அதிகம்

கலிஃபோர்னியாவில் செலவு அதிகம்

மற்றொரு விதமாக அமெரிக்காவில் கிளைகளைக் கொண்டுள்ள இந்திய ஐடி கம்பெனிகள், அமெரிக்காவின் இடாகோ மாகாணத்தில் உள்ள திறமையான ஐடி இளைஞர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்து பணியமர்த்தினால் செலவுகள் குறைவாக உள்ளன. இதுவே அமெரிக்காவின் கலிஃபோர்னியா மற்றும் நியூயார்க் போன்ற இடங்களில் என்றால் கூடுதல் செலவுகள் ஏற்படும்.

 ஐரோப்பிய நாடுகளில் செலவு அதிகம்

ஐரோப்பிய நாடுகளில் செலவு அதிகம்

அமெரிக்காவில் நிலைமை இப்படி என்றால், ஐரோப்பிய நாடுகளில் ஐடி கம்பெனிகள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ஹங்கேரி மற்றும் செக் குடியரசு நாடுகளில் இடம் தேடிக்கொண்டிருக்கின்றன. இந்த இடங்களில் கிளைகள் அமையப்பெற்றால் தங்களுக்கும் வாடிக்கையாளர்களுடன் இடைப்பட்ட தூரமும் குறைந்தாலும் செலவு அதிகம் பிடிக்கும் என்பது குறைபாடாகும்.

 வெளிநாட்டவர்களுக்கு முன்னுரிமை

வெளிநாட்டவர்களுக்கு முன்னுரிமை

வெளிநாடுகளில் ஆட்களை வேலைக்கு அமர்த்துவது பற்றி விளக்கிய நிட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் அர்விந்த் தாக்கூர், நாங்களும் குறைந்த செலவில் அருகாமையில் அதுவும் வாடிக்கையாளர்களை எட்டிவிடும் தூரத்திலேயே ஆட்களைத் தேர்ந்தெடுக்கிறோம். தற்போது வெளிநாடுகளில் உள்ளவர்களையே பணியமர்த்துவது அதிகரித்துள்ளது. அதிலும் ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் ஈடுபாடு வேகமாக முன்னேறுவதால் நாங்களும் வெளிநாட்டவர்களை பணியமர்த்துவதில் முனைப்பு காட்டுகிறோம் என்றார்.

 குறைவாக செலவாகும் நாடுகள்

குறைவாக செலவாகும் நாடுகள்

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் டெக்னாலஜிஸ் நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு அருகாமை மற்றும் குறைவான செலவுகள் பிடிக்கும் நாடுகளையே தற்போது தேர்ந்தெடுக்க ஆரம்பித்துள்ளது. அந்த வரிசையில் ஐரோப்பிய நாடான செக் குடியரசின் ப்ருனோ மற்றும் வட அமெரிக்கா நாடான மெக்சிகோ நாடுகளில் ஆட்களை தேர்ந்தெடுத்து பணியமர்த்த தொடங்கியுள்ளது.

 திறமையான ஆட்கள் கிடைப்பதில்லை

திறமையான ஆட்கள் கிடைப்பதில்லை

தங்களின் வாடிக்கையாளர்களுக்கு அருகாமை இடங்களை தேர்ந்தெடுத்து அங்குள்ள ஐடி இளைஞர்களை பணியமர்த்துவதிலும் சிக்கல்கள் உள்ளன. எச்-1பி விசா நடைமுறை என்பது தனிப்பட்ட பிரச்சனை கிடையாது நமக்கு தேவையான, நாம் எதிர்பார்க்கும் அதிக திறமை உள்ளவர்கள் கிடைப்பது அதிக சிரமமாக உள்ளது. அமெரிக்காவில் இது ஒரு பெரிய சிக்கலான பிரச்சனையாக உள்ளது என்றார் ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஆர்.கிருஷ்ணா.

டிசிஎஸ்க்கு ரூ.2822 கோடி கூடுதல் செலவு

டிசிஎஸ்க்கு ரூ.2822 கோடி கூடுதல் செலவு

அமெரிக்க ஐடி இளைஞர்களை பணியமர்த்துவதால் இந்திய ஐடி நிறுவனங்களின் லாபமும் பாதிக்கப்படுகிறது. இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் லாபம் கடந்த நிதியாண்டில், அமெரிக்க பணியாளர்களை நியமித்ததால் ரூ.2822 கோடி கூடுதலாக செலவானதாக தெரிவித்துள்ளது. இது அதற்கு முந்தைய நிதியாண்டைக்காட்டிலும் 33 சதவிகிதம் கூடுதலாகும். அதேபோல் இனஃபோசிஸ் நிறுவனத்திற்கு 55 சவிகிதம் கூடுதலாக செலவாகியுள்ளது.

மாற்றுத் திட்டம் என்ன

மாற்றுத் திட்டம் என்ன

ஒப்பந்தப் பணியாளர்களுக்கு ஆகும் கூடுதல் செலவுகளைப் பற்றி குறிப்பிட்ட ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஆர்.கிருஷ்ணா, இதற்காகவே நாங்கள் மாற்று திட்டங்களையும் வைத்துள்ளோம். எங்கள் நிறுவனம் அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிப்பதற்காகவே அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவை தேர்ந்தெடுத்துள்ளோம்.

எளிமையான விசா நடைமுறை

எளிமையான விசா நடைமுறை

மெக்சிகோவிலும் எங்கள் திட்டங்களை தொடங்கியுள்ளோம். மெக்சிகோவின் டிஎன்விசா (TN Visa) எனப்படும் விசா நடைமுறைகள் மிக எளிமையானதாக உள்ளன. எனவேதான் நாங்கள் மெக்சிகோவில் திறமையான ஆட்களை தேர்ந்தெடுத்து பயற்சியளித்து அமெரிக்க சந்தையை பிடிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

அமெரிக்காவிலேயே இல்லையாம்

அமெரிக்காவிலேயே இல்லையாம்

அமெரிக்காவின் வேலைவாய்ப்பு பற்றி ஆய்வு மேற்கொள்ளும் டேலன்ட் ஷார்ட்டேஜ் சர்வே (Talent Shortage Survey) நிறுவனம் நடத்திய ஆய்வில் கிட்டத்தட்ட 46 சதவிகித அமெரிக்க நிறுவனங்கள் தகுதியும் திறமையும் வாய்ந்த ஐடி பணியாளர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. அதிலும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைக் காட்டிலும் பெரிய நிறுவனங்களுக்கு ஆட்கள் கிடைப்பது அதிக சிரமமாக உள்ளது என்று தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

H1B Visa Issue India avoids America and handshake to Mexico

The H-1B visa issue and talent crunch in the US have made Indian IT majors look at alternate solutions such as low-cost near shore facilities in countries such as Mexico, to tackle the problem.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X