அமெரிக்க பொருட்களுக்கு அதிக இறக்குமதி விதிப்பதா? - இந்தியா மீது டொனால்டு ட்ரம்ப் காட்டம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியா – அமெரிக்கா இடையில் வர்த்தக உறவில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள தற்போயை சூழலில் அதை சாக்காக வைத்துக்கொண்டு, ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடைவிதித்தால் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் அதிகரித்தது.

 

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முந்திக்கொண்டு, நம்முடைய பொருட்களுக்கு இந்தியா வேண்டுமென்றே அதிக பட்ச வரியை வசூலிக்கிறது என்று காட்டமாகக் கூறினார்.

குறிப்பாக அமெரிக்க தயாரிப்பான ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளை இறக்குமதி செய்வதற்கு இந்தியா கூடுதல் வரி விதிப்பதை மனதில் வைத்தே இப்படிப் பேசினார் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கலாக்குறாங்கயா.. திருப்பதில தங்க நாணயம் விற்பனையாம்.. திருப்பதி தேவஸ்தானாம் அறிவிச்சிருக்காம்

முதுகில் குத்தும் பழக்கம்

முதுகில் குத்தும் பழக்கம்

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் வந்து உட்கார்ந்ததில் இருந்தே நமக்கு குடைச்சல் கொடுத்துகொண்டுதான் இருக்கிறார். வலது கையைப் பிடித்து குலுக்கிக்கொண்டே, இடது கையால் முதுகில் குத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் இந்திய அமெரிக்க உறவில் விரிசல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. முதலில் ஹெச்-1பி விசா பிரச்சனையில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையை துரிதப்படுத்தினார்.

ஹெச்-1பி விசா கட்டுப்பாடு

ஹெச்-1பி விசா கட்டுப்பாடு

ஒபாமா அதிபராக இருந்த வரையிலும் ஹெச்-1பி விசா வழங்குவதில் எந்தவித கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. ஆனால் ட்ரம்ப் வந்தவுடன் இந்தியா தகவல் தொழில்நுட்ப இளைஞர்களுக்கு விசா வழங்க கடும் கட்டுப்பாடுகள் விதித்தார். ஹெச்-1பி விசா வேண்டுமானால் அவர்களின் சம்பளம் 65000 டாலர்கள் இருக்கவேண்டியது கட்டாயம் என்று உத்தரவிட்டார்.

இறக்குமதி வரி 130 சதவிகிதம்
 

இறக்குமதி வரி 130 சதவிகிதம்

இரண்டாவதாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 30 சதவிகித இறக்குமதி வரியை 130 சதவிகிமாக உயர்த்தினார். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடம்பர வாகனமான ஹார்லி டேவிட்சன் பைக்குக்கு இந்தியா 50 சதவிகித இறக்குமதி வரி விதிப்பதால் தான் அமெரிக்காவும் கூடுதல் வரி விதிப்பதாக ட்ரம்ப் சொன்னார்.

ஈரான் கச்சா எண்ணெய்க்கு தடா

ஈரான் கச்சா எண்ணெய்க்கு தடா

மூன்றாவதாக இப்போது ஈரானில் இருந்து இந்திய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கும் தடைவிதித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருப்பதால் அங்கிருந்து எந்த நாடும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என்றும், மீறினால் அந்த நாடுகளின் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்றும் முட்டுக்கட்டை போட்டுள்ளார்.

அமெரிக்காவில் இறக்குமதி வரி குறைவாம்

அமெரிக்காவில் இறக்குமதி வரி குறைவாம்

நிலைமை இப்படி இருக்க, ட்ரம்ப் பிளேட்டை மாற்றிப்போட்டு பேசத் தொடங்கிவிட்டார். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மிகக்குறைந்த வரியே விதிக்கப்படுவதாகவும், ஆனால் நம்முடைய பொருட்களை இறக்குமதி செய்யும்போது இந்தியா வேண்டுமென்றே கூடுதல் வரி விதிப்பதாகவும் ஒப்பாரி வைத்துள்ளார்.

அமெரிக்காவுக்கு இழப்பு அதிகமாம்

அமெரிக்காவுக்கு இழப்பு அதிகமாம்

அமெரிக்காவின், விஸ்கான்சின் மாகாணத்தில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் பேரணியில் கலந்துகொண்டு பேசிய அதிபர் டொனால்டு ட்ரம்ப், காலம் காலமாக பல நாடுகள் நம்முடனான வர்த்தக உறவால் அதிக பலனை அனுபவித்து வந்துள்ளன. இதனால் அமெரிக்காவுக்குத்தான் அதிக அளவில இழப்பு ஏற்பட்டுள்ளது. காரணம் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா எந்த வரியுமே விதிப்பதில்லை.

வில்லனான ஹார்லி டேவிட்சன் பைக்

வில்லனான ஹார்லி டேவிட்சன் பைக்

மாறாக, நம்முடனான உறவால் பலனை அனுபவித்துவரும் மற்ற நாடுகள், குறிப்பாக இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு மிக மிக அதிக வரியை வசூலிக்கிறார்கள். நம் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் காகிதப் பொருட்கள், நம் நாட்டின் பெருமை வாய்ந்த ஹார்லி டேவிட்சன் பைக் போன்றவற்றுக்கு இந்தியா அதிக வரியை விதிக்கிறது.

இறக்குமதி வரியை மோடி குறைத்தார்

இறக்குமதி வரியை மோடி குறைத்தார்

நான் உடனே இந்தியப் பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து என்னுடைய அதிருப்தியை தெரிவித்தேன். உடனே அவர் ஹார்லி டேவிட்சன் பைக்குக்கான இறக்குமதி வரியை 50 சதிவிகிமாக குறைத்தார். இருந்தாலும் இது அதிகம், இன்னும் கூட குறைக்க முடியும். ஆனால் அவர்கள் செய்ய முன்வரவில்லை.

வர்த்தக உறவில் மாற்றம் வேண்டும்

வர்த்தக உறவில் மாற்றம் வேண்டும்

நமக்கு (அமெரிக்கா) முன்னுரிமை கொடுக்கின்ற ஸ்திரமான அரசு அமையவேண்டும் என்று விருப்பப்பட்டுதான், நம் நாட்டு மக்கள் நம்மை ஆதரித்து தேர்ந்தெடுத்து ஆட்சியிலும் அமர வைத்தனர். நமது நாட்டுக்கு அதிக அளவில் பலன் கிடைக்கும் வகையில்தான் இனிமேல் வர்த்தக உறவுகள் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா, சீனா மற்றும் ஜப்பானுடனான வர்த்தக உறவிலும் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று ட்ரம்ப் பேசினார்.

இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகம்

இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகம்

கடந்த 2017-18ஆம் ஆண்டில் இந்தியா சுமார் ரூ.3.34 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால் ரூ.1.86 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களையே இறக்குமதி செய்துள்ளது. இறக்குமதியை விட ஏற்றுமதி அதிக அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடுப்பேத்துறார் மை லார்ட்

கடுப்பேத்துறார் மை லார்ட்

இந்தியா-அமெரிக்கா இடையில் நல்ல உறவு உள்ளது. ராணுவம், பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகிளில் பல்வேறு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு இந்தியாவில் அதிக வரி விதித்துள்ள அமெரிக்காவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் எதிரொலியாகவே ட்ரம்ப் இவ்வாறு பேசியுள்ளதாக தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Trump blames India for charging Excess import duty

US President Donald Trump has criticized India's big tariffs on American paper products and the iconic Harley-Davidson bikes, saying the US has been losing billions of dollars to countries like India, China and Japan.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X