நாட்டிற்கு நிதியமைச்சர் மட்டுமல்ல முதலீட்டு அமைச்சரும் தேவை - முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நம் நாட்டில் முதலீடுகள் அதிக அளவில் குவிய வேண்டுமானால், அதற்கென தனியாக முதலீட்டு அமைச்சர் நியமிக்கப்பட வேண்டியது அவசியம் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. முதலீட்டு அமைச்சர் என்பவர், தகவல் தொழில்நுட்பம் தெரிந்தவராகவும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்துபவராகவும், அதே நேரத்தில் பொருளாதாரம் மற்றும் நிதிக்கொள்கை பற்றி முடிவெடுப்பவராகவும் இருக்கவேண்டும் என்றும் முதலீட்டாளர்கள் விரும்புகின்றனர்.

 

அதேபோல் வந்த முதலீடுகளை பாதுகாக்கவும், நிறுவனங்கள் திவாலாவதைத் தடுக்கும் வகையிலும் துணிந்து முடிவெடுக்கக்கூடிய வகையில் திறமை வாய்ந்த முதலீட்டு அமைச்சர் தேவை என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

வரும் மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து புதிய அரச அமைந்த உடன் முதலீடுகளுக்கு என தனியாக அமைச்சரை நியமிப்பது முடிவெடுக்க வேண்டியது அவசியம் என்றும் பெரும்பாலான முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நிதிச்சிக்கலில் தரையிறங்கும் ஏர் இந்தியா - பிரச்சினை பற்றி ஊடகங்களில் பேச ஊழியர்களுக்குத் தடை

 முதலீட்டாளர்களின் சொர்க்க பூமி

முதலீட்டாளர்களின் சொர்க்க பூமி

உலகளாவிய அளவில் முதலீட்டாளர்களின் சொர்க பூமியாக திகழ்வது சீனாவுக்கு அடுத்து இந்தியா தான் உள்ளது. இதற்கு மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் அமைப்பான செபி அமைப்பும் தான் முக்கிய காரணம். இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு பாதுகாப்பும், அதற்கு கிடைக்கும் அதிகப்படியான லாபமும் அதிக அளவில் முதலீட்டாளர்களை ஈர்த்துவருகிறது.

 கடன் வாங்கி ஓட்டம்

கடன் வாங்கி ஓட்டம்

இந்திய பங்குச் சந்தையின் மூலம் கிடைக்கும் லாபம் அதிக அளவில் இருந்தாலும், பாதகமான அம்சங்களாக பார்க்கப்படுவது, இந்திய தொழில் நிறுவனங்களும் தொழில் அதிபர்களும் வங்கிகளில் அதிக அளவில் கடன்களைப் பெற்றுக்கொண்டு, பின்னர் சில மாதங்களோ அல்லது சில ஆண்டுகளோ ஆன பின்னர் கடனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிடுவதுதான்.

 மெகுல் சோக்சி, நீரவ் மோடி
 

மெகுல் சோக்சி, நீரவ் மோடி

வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் நோகமால் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிடுவதால், அவர்கள் நிறுவனங்களில் கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி முதலீடு செய்தவர்களின் நிலை பரிதாபகரமாக ஆகிவிடுகிறது. இதற்கு சமீபத்திய உதாரணங்கள் வைர நகைகள் ஏற்றுமதி செய்யும் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் உரிமையளர்களான மெகுல் சோக்சி மற்றும் நீரவ் மோடி ஆகியோர்,

 ரூ.14000 கோடி மோசடி

ரூ.14000 கோடி மோசடி

மெகுல் சோக்சியும், நீரவ் மோடியும் இணைந்து பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடியான ஆவணங்களை தாக்கல் செய்து ரூ.14000 கோடி கடன் பெற்றுக்கொண்டு தற்போது லண்டனில் தலைமறைவாக இருந்து வருகின்றனர். இவர்களில் நீரவ் மோடி கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. மெகுல் சோக்சியைப் பற்றி தகவல் ஏதும் இல்லை.

 விஜய் மல்லையா ரூ.9000 கோடி

விஜய் மல்லையா ரூ.9000 கோடி

இரண்டாவதாக, இந்தப் பக்கம் பிரபல மதுபான ஆலை அதிபரும், கிங்ஃபிஸர் ஏர்லைன்ஸ் நிறவனத்தின் உரிமையாளருமான விஜய் மல்லையா. இவரும் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் சுமார் ரூ.9000 கோடி கடன் பெற்றுக்கொண்டு லண்டனுக்கு தஞ்சடைந்துள்ளார்?. இவரைப் நம் நாட்டிற்கு திருப்பி அனுப்புமாறு இந்தியாவும் இங்கிலாந்திடம் கோரிக்கை வைத்துள்ளது. இது பற்றிய வழக்கும் லண்டன் கோர்ட்டில் நடந்துவருவது அனைவரும் அறிந்ததே.

 அனில் அம்பானி

அனில் அம்பானி

மூன்றாவதாக, இந்தியாவின் மிகப்பெரும் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேசன் மற்றும் ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனங்களின் தலைவரான அனில் அம்பானி. இவருடைய கதை பரிதாபமானதுதான். ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நட்டத்தினால், எரிக்சன் நிறுவனத்திற்கு தரவேண்டிய ரூ.550 கோடி நிலுவைத் தொகையை கட்ட முடியாமல் திவால் நோட்டீஸ் அனுப்பிவிட்டார்.

 சொத்துக்களை விற்க முயற்சி

சொத்துக்களை விற்க முயற்சி

நிலுவைத் தொகையைக் கேட்டு எரிக்சன் நிறுவனம் நம் உச்ச நீதிமன்றத்தை அனுகியது. கடைசியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரும் தன்னுடைய அண்ணனுமான முகேஷ் அம்பானி தலையிட்டு ரூ.550 கோடியை கொடுத்ததால் அனில் அம்பானி திவால் ஆபத்திலிருந்து தப்பித்துவிட்டார். தற்போது மற்றொரு ஆபத்தாக ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் சொத்துக்களை விற்க பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

 ஜெட் ஏர்வேஸ் ரூ.8000 கோடி கடன்

ஜெட் ஏர்வேஸ் ரூ.8000 கோடி கடன்

நான்காவதாக, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விமானங்களுக்கு தரவேண்டிய குத்தகை பாக்கி, விமான எரிபொருளுக்கு தரவேண்டிய பாக்கி, மற்றும் ஊழியர்கள், பைலட்களுக்கு தரவேண்டிய மொத்த கடனான ரூ.8000 கோடிக்காக விமான சேவையை கடந்த ஏப்ரல் 17ஆம் தேதியுடன் நிறுத்திக்கொண்டது. விமான சேவை நிறுத்தப்பட்டால், இதில் பணியாற்றிய ஊழியர்கள் நடுத்தெருவிற்கு வந்துவிட்டனர்.

 விரக்தியில் முதலீட்டாளர்கள்

விரக்தியில் முதலீட்டாளர்கள்

மேற்கண்ட அனைத்து நிறுவனங்களுமே இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாதலால், இந்நிறுவனங்களில் மிசச் சிறிய அளவிலும், கோடிக்கணக்கிலும் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள், தாங்கள் ஒரே நாளில் நடுத்தெருவுக்கு வந்துவிட்டதை எண்ணி விரக்தியடைந்தனர். இறுதியில் சிலர் தங்களின் வாழ்க்கையை முடித்துகொள்ளவும் முன்வந்துவிட்டது வேதனை.

 வந்ததை வரவில் வைப்போம்

வந்ததை வரவில் வைப்போம்

பெருநிறுவனங்களில் முதலீடு செய்துள்ளவர்கள் தற்போது நினைப்பது என்னவெனில், தங்களின் முதலீடு பாதுகாப்பாக இருக்கவேண்டுமென்றால், அரசு தங்களுடைய முதலீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்க முன்வரவேண்டும் என்பது தான். மத்தியில் அமையும் அரசுகள் அனைத்தும், இந்தியப் பங்குச் சந்தைகளில் அதிக அளவில் முதலீடுகள் வந்து குவியவேண்டும் என்றும் வந்ததை வரவில் வைப்பதை மட்டுமே குறியாக உள்ளனர்.

 முதலீடுகளுக்கு என்ன பாதுகாப்பு

முதலீடுகளுக்கு என்ன பாதுகாப்பு

இந்தியப் பங்குச் சந்தையில் குவியும் முதலீடுகளில் மட்டுமே கவனம் செலுத்தும் மத்திய அரசு முதலீட்டுக்கான பாதுகாப்பு பற்றி வாய் திறப்பதில்லை என்பது தான் அனைத்து முதலீட்டாளர்களின் மனக்கவலையாகும். மத்திய அரசு முதலீடுகளை பாதுகாப்பது பற்றி யோசித்தால் மட்டுமே தங்கள் முதலீடுகள் பாதுகாப்பாக இருக்கும் என்றும் அதற்கு தற்போது இருக்கும் நிதிப் பாதுகாப்பு திட்டங்கள் சரிவராது என்றும் நினைக்கின்றனர்.

 முதலீட்டு அமைச்சர் வேண்டும்

முதலீட்டு அமைச்சர் வேண்டும்

தங்கள் முதலீடுகள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால், கண்டிப்பாக முதலீடுகளுக்கு என்று தனியாகவே ஒரு முதலீட்டு அமைச்சர் (Cabinet Minister for Investment) இருக்கவேண்டியது கட்டாயம் என்று நினைக்கின்றனர். அதுவும் நிதித் திட்டங்கள் பற்றியும், முதலீடுகள் பற்றியும் ஆழ்ந்த திறமையும் இருக்கவேண்டியது அவசியம் என்றும் குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருவரே இருக்க வேண்டும் என்றம் எதிர்பார்க்கின்றனர்.

 தனிக்காட்டு ராஜா

தனிக்காட்டு ராஜா

முதலீட்டுக்கென நியமிக்கப்படும் அமைச்சர் எதையும் உடனுக்குடன் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்கும் தனிக்காட்டு ராஜாவாக இருக்கவேண்டியது கட்டாயம் என்றும் முதலீட்டாளர்கள் விரும்புகின்றனர். அதிலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அனைவரும் டாலர்களில் முதலீடு செய்துவிட்டு இந்திய ரூபாயில் அதிக லாபம் பெற ஆர்வம் காட்டுவதால் தங்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பு தேவை அவசியம் என்றும் நினைக்கின்றனர்.

 முடிவெடுக்கும் அதிகாரம்

முடிவெடுக்கும் அதிகாரம்

முதலீட்டு அமைச்சர் என்பவர், தகவல் தொழில்நுட்பம் தெரிந்தவராகவும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்துபவராகவும், அதே நேரத்தில் பொருளாதாரம் மற்றும் நிதிக்கொள்கை பற்றி முடிவெடுப்பவராகவும் இருக்கவேண்டும் என்றும் முதலீட்டாளர்கள் விரும்புகின்றனர்.

 முதலீடுகளை ஈர்க்கும் திறமை

முதலீடுகளை ஈர்க்கும் திறமை

எப்படி இருந்தாலும் முதலீட்டுக்கான அமைச்சராக நியமிக்கப்படுபவர் நீண்ட கால முதலீடுகளை ஈர்க்கும் விதமாக குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்த முதலீடுகளை பெறுவதற்கு ஏற்ற வகையில் திறந்த மனதுடன் செயல்படுபவராக இருக்க வேண்டியது அவசியம். காரணம் வெளிநாட்டு முதலீட்டளார்கள் தொடர்ந்து முதலீடுகளை இந்தியப் பங்குச் சந்தையில் விட்டு வைத்திருப்பதில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India Needs a minister for 5 yrs for Long term Investment

India needs a minister for investment, whoever wins the May 23 election count, the next government must find somebody who will boldly open the doors to American and Japanese capital.
Story first published: Monday, May 6, 2019, 11:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X