ஈரான் எஃகு இறக்குமதியால் டன்னுக்கு ரூ. 5000 கூடுதல் செலவு - நேர விரையமும் அதிகம்

அண்டை நாடான சீனாவில் இருந்து எஃகு இறக்குமதி செய்தால் ஒரு டன்னுக்கு ரூ.5000 சேமிக்க முடிகிறது என்றும், ஈரானில் இருந்து இறக்குமதி செய்ய அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது என்றும் எஃகு இறக்குமதியாளர்கள் கூற

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொல்கத்தா: ஈரான் நாட்டில் இருந்து எஃகு இறக்குமதி செய்வதற்கு கூடுதலாக செலவும் கால விரயமும் ஏற்படுவதால் மாற்று ஏற்பாடுகள் செய்யுமாறு ஸ்டீல் இறக்குமதியாளர்கள் சங்கம் மத்திய அரசுக்கும் சுங்கத்துறைக்கும் கடிதம் எழுதியுள்ளது.

அண்டை நாடான சீனாவில் இருந்து எஃகு இறக்குமதி செய்தால் ஒரு டன்னுக்கு ரூ.5000 சேமிக்க முடிகிறது என்றும், ஈரானில் இருந்து இறக்குமதி செய்ய அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது என்றும் எஃகு இறக்குமதியாளர்கள் விரும்புகின்றனர்.

நம் நாட்டில் எஃகு உற்பத்தி கணிசமாக குறைந்ததால், தேவையை பூர்த்தி செய்யும் விதமாக அதிக அளவில் ஈரான் நாட்டிலிருந்து எஃகு இறக்குமதி செய்வ வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றும் மாற்று ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தவேண்டும் என்றும் ஸ்டீல் இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மோடி அரசு GDP-யைக் கணக்கிட எத்தனை தவறுகள் செய்தார்கள்..? என்ன மாதிரியான தவறுகள் செய்தார்கள்..? மோடி அரசு GDP-யைக் கணக்கிட எத்தனை தவறுகள் செய்தார்கள்..? என்ன மாதிரியான தவறுகள் செய்தார்கள்..?

இந்தியா எஃகு உற்பத்தி

இந்தியா எஃகு உற்பத்தி

உள்நாட்டில் எஃகு உற்பத்தி செய்வதற்கு கூடுதல் செலவாகிறது என்ற காரணத்தினால் உற்பத்தியாளர்கள் தங்களின் செலவினங்களைக் குறைக்கும் விதமாக மாற்று திட்டங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினர்.

எஃகு இறக்குமதி

எஃகு இறக்குமதி

எஃகு வர்த்தகத்தில் ஏற்கனவே பிடித்து வைத்துள்ள சந்தையை தக்க வைத்துக்கொள்ள வேண்டி வேறு வழியில்லாத வர்த்தகர்கள் மாற்று திட்டங்களை செயல்படுத்த முன்வந்தனர். உள்நாட்டில் ஏற்பட்டுள்ள பருவ நிலை மாற்றங்களால் எஃகு உற்பத்தி கணிசமாக குறைந்துவிட்டதை அடுத்து அண்டை நாடுகளில் இருந்த இறக்குமதி செய்தால் தான் தங்கள் இடத்தை தக்க வைக்க முடியும் என்று நினைத்தனர்.

கட்டுமான கம்பிகள்

கட்டுமான கம்பிகள்

தென்மேற்கு பருவமழைக்காலத்தில் கட்டுமான செயல்பாடுகள் வழக்கமாக குறைந்து எஃகு உற்பத்தி குறைந்திருந்தாலும், பின் பருவகாலமான ஜூலை முதல் செப்டம்பர் பருவத்தில் மழையின் அளவு சற்று குறைந்துவிட்டதால், எஃகு உற்பத்தியாளர்களும் தங்களின் எஃகு பயன்பாட்டை அதிகரித்தனர்.

கப்பல் கட்டுதல்

கப்பல் கட்டுதல்

நாம் ஏற்கனவே நமது நட்பு நாடான ரஷ்யாவிடம் இருந்து எஃகு இறக்குமதி செய்து நமது தேவையை பூர்த்தி செய்து வந்துள்ளோம். குறிப்பாக நமது பாதுகாப்பு படைக்கு தேவையான ராணுவ தளவாடங்கள், நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் கப்பல் கட்டுதல் போன்றவற்றுக்கு ரஷ்யாவிடம் இருந்து எஃகு இறக்குமதி செய்துள்ளோம் என்று செய்ல் (Steel Authority of India-SAIL) நிறுவன
அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரான் நாட்டு எஃகு இறக்குமதி

ஈரான் நாட்டு எஃகு இறக்குமதி

உள்நாட்டில் கட்டுமானத்துறை சீரான வளர்ச்சி அடைந்ததால், தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ஈரான் நாட்டில் இருந்து அதிக அளவில் எஃகு இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. ஈரான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதாக இருந்தாலும் அதை நேரடியாக இறக்குமதி செய்ய முடியாது. மற்றொரு வளைகுடா நாடான ஐக்கிய அரபு நாடுகளின் (United Arabic Emirates) வழியாகவே இறக்குமதி செய்யவேண்டி நிலை இருந்து வருகிறது.

செலவு அதிகரிப்பு

செலவு அதிகரிப்பு

ஐக்கிய அரபு நாடுகளின் வழியாக இறக்குமதி செய்யும்போது அதற்கு கூடுதலாக ஒரு டன்னுக்கு ரூ.5000 செலவழிக்க வேண்டியுள்ளது. இதுவே நம் அண்டை நாடான சீனாவில் இருந்து இறக்குமதி செய்தோமானல் அந்த தொல்லை நமக்கு கிடையாது என்றும் இதற்கு மாற்று வழியை தெரிவிக்குமாறு அகில இந்திய எஃகு இறக்குமதியாளர்கள் சங்கம் இந்திய வங்கிகள் சங்கத்திற்கு (Indian Banks Association) கடிதம் எழுதியுள்ளது.

எஃகு அமைச்சகத்திற்குக் கடிதம்

எஃகு அமைச்சகத்திற்குக் கடிதம்

குறிப்பாக ஐக்கிய அரபு நாடுகளின் வழியாக இறக்குமதி செய்வதற்கு பகல் கொள்ளை விலையில் பணத்தை செலவழிக்க வேண்டியுள்ளது. இதற்கு மாற்று வழி என்ன என்பதை தெரிவியுங்கள் என்று இறக்குமதியாளர்கள் கோரிக்கை கடிதம் எழுதி உள்ளனர். மேலும் இதையே சுங்கத் துறைக்கும் எஃகு அமைச்சகத்திற்கும் கடிதம் மூலமாக தெரிவித்துள்ளனர்.
தற்போது ஈரான் நாட்டிள்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளதால், அங்கிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு இந்தியவுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு எஃகு இறக்குமதிக்கும் பொருந்தும் என்பதால் மாற்று வழியை யோசிக்குமாறு எஃகு அமைச்சகத்திற்கு கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

72000 டன் எஃகு இறக்குமதி

72000 டன் எஃகு இறக்குமதி

கடந்த 2018ஆம் ஆண்டில் ஈரான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எஃகு இரும்பு வழக்கத்தை விட 66 சதவிகிதம் கூடுதலாகும். நடப்பு 2019ஆம் ஆண்டின் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் எஃகு இறக்குமதி செய்யப்படவில்லை. ஆனால் கலப்பு உலோகமான அலாய் (Alloy) இறக்குமதி எப்போதும் போல் ஐக்கிய அரபு நாடுகளின் வழியாகவே இறக்குமதி செய்யப்படுவது தொடர்கிறது. தற்போதைய நிலவரப்படி, இந்திய இறக்குமதியாளர்கள் சுமார் 72000 டன் எஃகு இறக்குமதி செய்வதற்கு பதிவு செய்துள்ளனர். அதில் சுமார் 52000 டன்களை நடப்பு மே மாதத்திற்குள் இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இறக்குமதியில் சிக்கல்

இறக்குமதியில் சிக்கல்

ஈரான் நாட்டிலிருந்து பகல் கொள்ளை விலையில் எஃகு இறக்குமதி செய்வது, உள்நாட்டில் உற்பத்தியாளர்களை கவலை அடையச் செய்துள்ளது. குறிப்பாக உள்நாட்டில் எஃகு பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த வேளையில் கள்ளத்தனமாக அதிக விலை கொடுத்து எஃகு இறக்குமதி செய்வது, பின்னர் இதர ஏற்றுமதி, இறக்குமதியிலும் சிக்கலை ஏற்படுத்தும் என்றும், இதற்கு உடனடியாக மாற்று வழியை தேடவேண்டும் என்றும் எஃகு உற்பத்தியாளர்கள் கூறினர்.

மாற்று வழியை யோசிக்கும் இந்தியர்கள்

மாற்று வழியை யோசிக்கும் இந்தியர்கள்

ஈரான் சுமார் 30 சதவிகித எஃகு ஏற்றுமதியை தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மட்டுமே செய்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 1.20 கோடி டன் அதாவது 36 சதவிகிதம் அதிகமாக எஃகு ஏற்றுமதியை செய்துள்ளது. அதே வேளையில் தனிநபரின் எஃகு பயன்பாடு 14 சதவிகிதமாக குறைந்துள்ளது. தற்போது அமெரிக்காவின் கச்சா எண்ணெய் இறக்குமதி தடையால் இந்தியா மாற்று வழியை சிந்திக்கும்போது. எஃகு இறக்குமதிக்கும் ஒரு நல்ல வழியை காண்பிக்கவேண்டும் என்று இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Steel Import from Iran - Indian Steel Makers worries about predatory price

The Steel Importers Union wrote a letter to steel ministry and customs authorities to make alternatives, due to the expensesincurred in the cost of importing steel from Iran. The price also high around Rs.5000 a tone when we compared to China.
Story first published: Wednesday, May 8, 2019, 15:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X