மோடிக்கு டாட்டா..! காளையா..? கரடியா..? போட்டுப் பார்க்கும் தேர்தல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டின் 17வது லோக்சபா தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியப் பங்குச் சந்தைகளும் அதிக ஏற்றத்துடன் முடிந்ததுள்ளது. இனி வரும் நாட்களிலும் இந்த ஏற்றம் தொடருமா என்பது புதிய ஆட்சியில் எடுக்கப்படும் நிதிக் கொள்கை முடிவுகளைப் பொறுத்தே இருக்கக்கூடும் என்று பெரும்பாலான சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

 

நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 537 புள்ளிகள் அதிகரித்து 37930 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி 150 புள்ளிகள் அதிகரித்து 11407 புள்ளிகளிலும் நிலை பெற்றன. கடந்த 6 நாட்களில் நடந்த வர்த்தகத்தின் இறுதியில் இந்திய பங்குச் சந்தைகள் சுமார் 5 சதவிகிதம் உயர்வை சந்தித்துள்ளன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பார்த்து உற்சாகத்தில், இந்திய பங்குச் சந்தைகள் சற்று விழித்துப் பார்த்து முரட்டுக் காளையாக சீறிப்பாயத் தொடங்கும். இதெல்லாம் புதிய ஆட்சி மலரும் வரையில் தான் இருக்கும். அதன் பிறகு புதிய ஆட்சி எடுக்கும் நிதிக் கொள்கை மற்றும் வெளி நாட்டு முதலீடுகள் பற்றிய கொள்கை முடிவுகளைப் பொருத்தே அந்தப் பக்கம் சீறிப்பாயலாமா அல்லது இந்தப் பக்கம் வழுக்கி விழலாமா என்று யோசிக்கும்.

ரூ.6581 கோடி கடனாம்.. வாராக்கடனால் தள்ளாடும் கார்ப்பரேஷன் வங்கி.. கவலையில் பங்குதாரர்கள்

கருத்துக் கணிப்பால் உயரும் சந்தை

கருத்துக் கணிப்பால் உயரும் சந்தை

இந்தியப் பங்குச் சந்தைகள் எப்போதுமே லோக்சபா தேர்தல் நடைபெறும் நாட்களுக்கு சில மாதங்களுக்கு முன்னால் சற்று மந்த கதியில் தூக்கக் கலக்கத்தில் உள்ளது போல், அதிக ஏற்ற இறக்கமில்லாமல் பக்கவாதம் வந்தது போல் பக்கவாட்டிலேயே (Side ways) வர்த்கமாகும். தேர்தலைப் பற்றிய கருத்துக் கணிப்புகள் வரும்போது மட்டுமே முழித்துக்கொண்டு சிறிய அளவில் ஏற்றம் இருக்கும். தேர்தல் நடைபெறும் நாட்களில் கொஞ்சமே ஏற்றம் இருக்கும்.

கொள்கை முடிவுகள் தீர்மானிக்கும்

கொள்கை முடிவுகள் தீர்மானிக்கும்

இறுதிக் கட்டத் தேர்தல் முடிந்தவுடன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பார்த்து உற்சாகத்தில், இந்திய பங்குச் சந்தைகள் சற்று விழித்துப் பார்த்து முரட்டுக் காளையாக சீறிப்பாயத் தொடங்கும். இதெல்லாம் புதிய ஆட்சி மலரும் வரையில் தான் இருக்கும். அதன் பிறகு புதிய ஆட்சி எடுக்கும் நிதிக் கொள்கை மற்றும் வெளி நாட்டு முதலீடுகள் பற்றிய கொள்கை முடிவுகளைப் பொருத்தே அந்தப் பக்கம் சீறிப்பாயலாமா அல்லது இந்தப் பக்கம் வழுக்கி விழலாமா என்று யோசிக்கும்.

காளை ஆட்டம்
 

காளை ஆட்டம்

இந்தியப் பங்குச் சந்தைகளின் இந்தப் போக்கானது இந்தியப் பங்குச் சந்தைகளை தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே நடந்து வருகிறது. நாம் கடந்த 1999ஆம் ஆண்டிலிருந்து கணக்கில் எடுத்துக்கொண்டாலே நமக்கு தெளிவாக விளங்கும். தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் தேர்தலுக்கு பின்புதான் பங்குச் சந்தைகள் அதிக ஏற்றத்துடன் வர்த்தகமானதாக புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. காளைகளின் ஆட்டம் அப்போதுதான் அதிகரிக்கிறது.

தேர்தலுக்கு பின்னர் 40 சதவிகித வளர்ச்சி

தேர்தலுக்கு பின்னர் 40 சதவிகித வளர்ச்சி

லோக்சபா தேர்தல் நடப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும், தேர்தல் முடிந்த நாளிலிருந்து அடுத்த 6 மாதங்களில் இந்திய பங்குச் சந்தைகள் சராசரியாக 40.8 சதவிகித வளர்ச்சியை கண்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது தேர்தல் காலத்தில் அதாவது முதல் நாள் தேர்தல் (pre-election) நடப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்பு வரையிலும், முதல் நாள் நடைபெற்ற தேர்தல் (during the election)அன்றும், இறுதிக் கட்டத் தேர்தல் (post election) முடிந்த பின்னர் 6 மாதங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையிலும் கொடுக்கப்பட்ட புள்ளி விவரங்களாகும்.

தேசிய பங்குச் சந்தை குறியீடு பிறப்பு

தேசிய பங்குச் சந்தை குறியீடு பிறப்பு

தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி50 என்பது 12 துறைகளில் உள்ள பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 50 முன்னணி நிறுவனங்களைக் கொண்டு கடந்த 1996ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மும்பை பங்குச் சந்தைக் குறியீடான பிஎஸ்இ 30 என்பது 1986ஆம் ஆண்டில் 30 முன்னணி நிறுவனங்களைக் கொண்டு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

14 கட்சிகளின் கூட்டணி

14 கட்சிகளின் கூட்டணி

கடந்த 1999ஆம் ஆண்டில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் 14 கட்சிகள் அடங்கிய தேசிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. அந்த காலகட்டத்தில், இந்திய பங்குச் சந்தைகள் தேர்தல் நடைபெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட, தேர்தல் முடிந்த அடுத்த 6 மாதத்தில் கடும் சரிவை சந்தித்தது. இதற்கு முக்கிய காரணம் பல கட்சிகளைக் கொண்டு ஆட்சி நடத்தியதே.

பங்குச் சந்தையின் இருண்ட காலம்

பங்குச் சந்தையின் இருண்ட காலம்

அனைத்து கட்சிகளும் சொல்வதைக் கேட்டு எந்த முடிவையும் எடுக்கவேண்டிய நிலை இருந்ததால், நிதிக் கொள்கை குறித்து ஸ்திரமான முடிவை எடுக்க முடியாமல் மத்திய அரசு திணறிக் கொண்டு இருந்தது. இதனால் இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை இந்திய நிறுவன முதலீட்டாளர்களும், அந்நிய நேரடி முதலீட்டாளர்களும் தவிர்த்துவிட்டு ஒதுங்கிக் கொண்டனர். இந்த காலகட்டத்தில் தேர்தலுக்கு முந்தைய 6 மாதங்களை விட தேர்தலுக்கு பிந்தைய 6 மாதங்கள் இந்தியப் பங்குச் சந்தைக்கு போராத காலம் என்றுதான் சந்தை நிபுணர்களும் கருத்து தெரிவித்தனர்.

2004ஆம் ஆண்டில் 19.5 சதவிகித வளர்ச்சி

2004ஆம் ஆண்டில் 19.5 சதவிகித வளர்ச்சி

அடுத்து 2004ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றது. டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். அந்த காலகட்டதில் 2003ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேர்தல் நடைபெற்ற 2004ஆம் ஆண்டு ஏப்ரல் வரையிலான 6 மாத காலத்தில் இந்திய பங்குச் சந்தைகள் சுமார் 19.5 சதவிகித வளர்ச்சி கண்டது. அதுவே தேர்தலுக்கு பிந்தைய காலமான ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான பருவத்தில் சுமார் 3 சதவிகிதம் சரிவை சந்தித்தது.

 2009ஆம் ஆண்டில் 53 சதவிகித வளர்ச்சி

2009ஆம் ஆண்டில் 53 சதவிகித வளர்ச்சி

அதற்கு அடுத்து 2009ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியே வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. அப்போதைய காலத்தில் 2008ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் வரையிலான 6 மாதத்தில் இந்தியப் பங்குச்சந்தைகள் சுமார் வெறும் 3 சதவிகித வளர்ச்சியை மட்டுமே கண்டது. இதுவே தேர்தல் நடைபெற்ற ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான பருவத்தில் சுமார் 53 சதவிகித வளர்ச்சியை எட்டியது. இதில் குறிப்பிடவேண்டிய முக்கிய அம்சம், 2008ஆம் ஆண்டில் உலகளாவிய அளவில் ஏற்பட்ட பங்குச்சந்தை சரிவும் பொருளாதார மந்த நிலையும் தான் இந்திய பங்குச் சந்தையின் சரிவுக்கு முக்கிய காரணமாகும்.

 2014ஆம் ஆண்டில் 33 சதவிகித வளர்ச்சிதான்

2014ஆம் ஆண்டில் 33 சதவிகித வளர்ச்சிதான்

கடந்த 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அப்போது கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2014ஆம் ஆண்டு ஏப்ரல் வரையிலான பருவத்தில் இந்திய பங்குச் சந்தைகள் சுமார் 13.4 சதவிகித வளர்ச்சி பெற்றது. அதுவே தேர்தலுக்கு பிந்தைய காலமான ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான பருவத்தில் சுமார் 33 சதவிகித வளர்ச்சியை எட்டியது.

2009ஆம் ஆண்டில் தான் அதிக வளர்ச்சி

2009ஆம் ஆண்டில் தான் அதிக வளர்ச்சி

கடந்த நான்கு லோக்சபா தேர்தல் நடைபெற்ற காலத்தை கணக்கில் எடுத்துக்கொண்டால் கடந்த 2009ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தல் பருவத்தில் தான் இந்திய பங்குச் சந்தைகள் அதிக ஏற்றம் கண்டன. கடந்த 2008ஆம் ஆண்டின் அக்டோபர் முதல் தேர்தல் நடைபெற்ற 2009ஆம் ஆண்டின் அக்டோபர் வரையிலான பருவத்தில் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி50 சுமார் சுமார் 57 சதவிகித வளர்ச்சியை கண்டது. அதே போல் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் சுமார் 64 சதவிகித வளர்ச்சியை எட்டி சாதனை படைத்தது.

தேர்தலுக்கு பின்பு தான் அதிக வருமானம்

தேர்தலுக்கு பின்பு தான் அதிக வருமானம்

இதில் குறிப்பிடவேண்டிய முக்கிய அம்சம், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 50 குறியீடு தேர்தலுக்கு முந்தைய பருவத்தை விட தேர்தலுக்கு பிந்தைய பருவத்தில் அதிக வளர்ச்சியையும் வருமானத்தையும் தந்துள்ளது என்று மும்பையைச் சேர்ந்த முதலீட்டு மேலாண்மை நிறுவனமான ஆனந்த் ரதி வெல்த் சர்வீசஸ் (Anand Rathi Weath Services) நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நிஃப்டி 100 சதவிகித வருமானம்

நிஃப்டி 100 சதவிகித வருமானம்

ஒவ்வொரு ஐந்து ஆண்டு பருவத்திலும் தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி50 நிச்சயம் 100 சதவிகித வருமானத்தை தந்துள்ளது. அதேபோல் தற்போது நடைபெற்ற தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தாலும், அது கொண்டு வரும் நிதிக் கொள்கை முடிவுகளைப் பொருத்தே பங்குச் சந்தையின் போக்கு இருக்கும் என்றும் ஆனந்த் ரதி நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian share market raise after every Lok Sabha election

Indian Indices (Nifty and Sensex) showed a growth in six months after the four lok sabha elections between 1999 to 2014, if compared to the previous six months.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X