Budget 2019 : அன்னிய நேரடி முதலீடுகளை அதிகரிக்க விதிகள் தளர்த்தப்படும்.. நிர்மலா சீதாராமன் அதிரடி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து கொண்டுள்ளார். இதில் FDI எனும் அன்னிய நேரடி முதலீடுகள் குறித்து கூறியுள்ளார்.

தற்போது நாட்டில் நிலவி வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய முதலீடுகளை அதிகரித்தால் மட்டுமே முடியும். அதிலும் அன்னிய நேரடி முதலீடுகளை அதிகரித்தால் தான் முடியும், என்பதை கருத்தில் கொண்டு அன்னிய முதலீடுகளை அதிகரிக்க பல விதிமுறைகள் தளர்த்தப்படும் என்றும் கூறியுள்ளார் நிர்மலா சீதாராமன்.

அதிலும் கடந்த 2018 - 2019ம் நிதியாண்டில் அன்னிய நேரடி முதலீடுகள் 6 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதை நடப்பாண்டில் இன்னும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக விதிகள் தளர்த்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

அட என்னப்பா சொல்றீங்க.. இனி சிறு குறு நடுத்தர உற்பத்தி பொருட்கள்.. இணையத்திலும் கிடைக்குமா? அட என்னப்பா சொல்றீங்க.. இனி சிறு குறு நடுத்தர உற்பத்தி பொருட்கள்.. இணையத்திலும் கிடைக்குமா?

எதிர்பார்த்தபடியே முதலீடுகளை அதிகரிக்க அதிரடி திட்டம்?

எதிர்பார்த்தபடியே முதலீடுகளை அதிகரிக்க அதிரடி திட்டம்?

அதோடு இதற்கான உள்நாட்டு கொள்கைகளும் தளர்த்தப்படும் என்றும் கூறியுள்ளார். குறிப்பாக கே.ஓய்.சி விதிகளை தளர்த்தும் போது அன்னிய முதலீடுகள் சிறப்பாக அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார். ஆக மொத்தம் எதிர்பார்த்தபடியே அன்னிய முதலீடுகளை அதிகரிக்க திட்டமிட்டபடி செயல்படுத்துகிறது இந்திய அரசு. குறிப்பாக அதிக வெளி நாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஊடகங்கள், விமான போக்குவரத்து காப்பீடு ஒற்றை பிராண்டு சில்லறை போன்ற துறைகளுக்கு அன்னிய நேரடி முதலீட்டில் விதிமுறைகளை தளர்த்த பட்ஜெட்டில் முன்மொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதலீடுகளை ஈர்க்க விதிகளை கவர்ச்சிகரமானதாக மாற்ற திட்டம்!

முதலீடுகளை ஈர்க்க விதிகளை கவர்ச்சிகரமானதாக மாற்ற திட்டம்!

கடந்த 2018 - 2019ல் அன்னிய முதலீடுகள் 6 சதவிகிதம் அதிகரித்து 64.37 பில்லியன் அமெரிக்கா டாலார்களாக இருந்தது. அதோடு இந்தியாவை மிகவும் கவர்ச்சிகரமான அன்னிய நேரடி முதலீட்டு இடமாக மாற்றுவதற்காக ஆதாயங்களை மேலும் ஒருங்கிணைக்க நான் முன்மொழிகிறேன் என்றும் கூறியுள்ளார்.

கேமிங்க மற்றும் காமிக்ஸ் துறைகளில் ஆய்வு!

கேமிங்க மற்றும் காமிக்ஸ் துறைகளில் ஆய்வு!

ஆக மேற் குறிப்பிட்ட துறைகளோடு அனிமேஷன், விஷூவல் எஃஃபெக்ட்ஸ், கேமிங்க மற்றும் காமிக்ஸ் மற்றும் காப்பீட்டு துறைகளில் பங்குதாரர்களுடன் இணைந்து கலந்தாலோசித்து அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்க பரிந்துரைகளை அரசாங்கம் ஆராயும் என்றும் கூறியுள்ளார்.

பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியதுவம்?

பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியதுவம்?

அதுமட்டும் அல்லாமல் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளதார வளர்ச்சிக்கு முக்கியம் அளிக்கப்படும் என்றும், கடந்த 2015ல் அறிமுகம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி புதிய இந்தியாவிற்கு புதிய அடித்தளத்தை உருவாக்கியுள்ளது என்றும், மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் மத்திய அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது. உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு கடந்த 5 ஆண்டுகளில் இரு மடங்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், அதோடு சிவப்பு நாடா முறையையும் குறைத்துள்ளதாகவும் கூறியுள்ளார் நிர்மலா சீதாராமன்.

 தற்போது $2.7 டிரில்லியன் மட்டுமே உள்ளது?

தற்போது $2.7 டிரில்லியன் மட்டுமே உள்ளது?

பொருளாதார வளர்ச்சியை பொறுத்த வரை 2024ம் ஆண்டில் 5 டிரில்லியன் டாலர் இலக்கு வைத்திருந்தாலும், நடப்பு நிதியாண்டில் 3 டிரில்லியன் டாலர் இலக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், என்னவெனில், தற்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2.7 லட்சம் டிரில்லியன் டாலராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு 1.95 வீடுகள்!

மக்களுக்கு 1.95 வீடுகள்!

இந்தியா கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர் உலக பொருளாதார வளர்ச்சி நாடுகளின் பட்டியலில் இந்தியா 11வது இடத்தில் இருந்தது ஆனால் இது தற்போது ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 கோடி ரூபாய் வரை உடனடி கடன்?

1 கோடி ரூபாய் வரை உடனடி கடன்?

அதோடு மேக் இன் இந்தியா திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தப்படும். இதன் மூலம் 1.95 கோடி வீடுகள் கட்டப்பட்டு உரிய பயனாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். அதோடு சிறு குறு நடுத்தர தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வெறும் 59 நிமிடத்தில் 1 கோடி ரூபாய் வரை கடன் அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 நீர்வழிப் போக்குவரத்து வளர்ச்சிக்கு முக்கியத்துவம்?

நீர்வழிப் போக்குவரத்து வளர்ச்சிக்கு முக்கியத்துவம்?

குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க போதுமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும். சாலை போக்குவரத்தை போலவே, உள்நாட்டு நீர் வழிப்போக்குவரத்து வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2019 : FDI norms relaxation in media, aviation insurance, single brand retail

Budget 2019 : FDI norms relaxation in media, aviation insurance, single brand retail
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X