சிறந்த ஏற்றுமதி மையமாகும் இந்தியா..இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Apple iphone..ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : ஒரு பறம் அமெரிக்காவின் ஜி.எஸ்.பி சலுகை பறிப்பால் இந்தியாவில் ஏற்றுமதி குறையலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

அதிலும் அமெரிக்கா சீனா பிரச்சனை காரணமாக, அமெரிக்கா சீனாவுக்கு வரி விதிக்கவும், சீனா அமெரிக்காவுக்கு வரி விதிக்கவும், இதற்கிடையில் மாட்டிக் கொண்டு விழிப்பது இந்த இரு நாடுகளுக்களிலும் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் தான்.

இதில் என்ன கொடுமை என்னவெனில், இந்த இரு நாடுகளின் நிறுவனங்கள் மட்டும் அல்லாது, மற்ற நாடுகளை சேர்ந்த நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தவித்து வரும் இந்த நிறுவனங்களுக்கு, வந்தாரை வாழ வைக்கும் இந்தியா அடைக்கலம் கொடுத்து வருவதும் கவனிக்கத்தக்கது.

ஐயா டிரம்ப் சொன்னா நம்புங்க.. சத்தியமா அது நாங்க இல்லை.. நாங்க எந்த கப்பலையும் கைபற்ற முயற்சிக்கலா

அமெரிக்கா – சீனா பிரச்சனையால்

அமெரிக்கா – சீனா பிரச்சனையால்

அதன் ஒரு பகுதிதான் ஆப்பிள் ஐபோன். இந்த நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே இருந்தாலும், அமெரிக்கா சீனா பிரச்சனைக்கு முன்னர் இந்த அளவு உத்வேகத்துடன் செயல்பட்டதாக தெரியவில்லை. எனினும் தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் ஐபோன்களை ஐரோப்பிய சந்தைகளுக்கு அதிகளவுவில் ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிலும் பெங்களூருவில் உள்ள அதன் தயாரிப்பு மையத்தில் தயாரிக்கப்படும், அதன் உற்பத்தி கிட்டத்தட்ட 70-80 சதவிகிதம் போன்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று செய்தி வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆப்பிள் ஐபோன் ஏற்றுமதி!

ஆப்பிள் ஐபோன் ஏற்றுமதி!

கடந்த 2016ம் ஆண்டில் Cupertino தலைமையிடமாகக் கொண்டுள்ள இந்த நிறுவனம், முன்னதாக இந்தியாவின் விஸ்டாரான் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இது பெங்களூருவில் உள்ள இதன் தளத்திலிருந்து ஆப்பிள் போன களை ஏற்றுமதி செய்ய முதல் ஒப்பந்ததாரராக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சில மாதங்களுக்கு முன்பு இருந்தே ஏற்றுமதி!
 

சில மாதங்களுக்கு முன்பு இருந்தே ஏற்றுமதி!

ஐபோன் 6 மற்றும் ஐபோன் 7 மாடல்கள், மாதத்திற்கு கிட்டதட்டஒரு லட்சத்திற்கும் கீழ் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று, கவுண்டர் பாயிண்ட்ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் நீல் ஷா சுட்டிக் காட்டியுள்ளார். அதோடு இந்த ஏற்றுமதி சில மாதங்களுக்கு முன்பு ஐரோப்பிய சந்தைகளுக்கு தொடங்கியது என்றும் கூறியுள்ளார்.

உற்பத்தியில் 70 – 80% ஏற்றுமதி!

உற்பத்தியில் 70 – 80% ஏற்றுமதி!

இது குறித்து தொழிற்துறையின் இரு மூத்த அதிகாரிகள் கூறுகையில், இங்கு தயாரிக்கப்படும் 70 - 80 சதவிகிதம் போன் கள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் கூறியுள்ளனர். மேலும் விஸ்ட்ரான் இந்தியா ஐபோன் 6 முந்தைய ஆண்டிலிருந்தே உருவாக்கி வருகிறது. ஆனால் ஐபோன் 7ஐ நடப்பாண்டு தொடகத்தில் இருந்து தான் உற்பத்தி செய்ய ஆரம்பித்துள்ளது என்றும் கூறியுள்ளனர்.

இந்தியாவை ஏற்றுமதி மையமாக பயன்படுத்துகின்றன!

இந்தியாவை ஏற்றுமதி மையமாக பயன்படுத்துகின்றன!

ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்வதன் மூலம், இந்த நிறுவனத்திற்கும் பயன் இருக்கும், அதோடு இந்தியாவும் சிறந்த ஏற்றுமதி மையமாக மாறும். அதோடு உள்நாட்டிற்கும் இது பயனுள்ளதாக இருக்கும், குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டிக்கான கவர்ச்சிகரமான இடமாக இந்தியாவின் நிலையை அது உறுதிப்படுத்தும், மேலும் ஆப்பிள் சீனாவிற்கு வெளியில் இருந்து பிற சந்தைகளின் மூலம் தனது தேவையை பூர்த்தி செய்து கொண்டு வருகிறது. இதன் பல சாதகமான சாத்தியக் கூறுகளை கொண்ட ஐபோன்களுக்கான ஒப்பந்த உற்பத்திற்கான மிகப்பெரிய உற்பத்தி தளமாக இந்தியா மாறும் என்றும் கருதப்படுகிறது.

15 – 30% உற்பத்தி சீனாவுக்கு வெளியே தொடக்கம்!

15 – 30% உற்பத்தி சீனாவுக்கு வெளியே தொடக்கம்!

சமீபத்திய ஊடக அறிக்கையின் படி, ஆப்பிள் நிறுவனம் அதன் சப்ளையர்களான விஸ்ட்ரான், ஃபாக்ஸ்கான் மற்றும் பெகாட்ரான் உள்ளிட்ட நிறுவனங்களை அதன் உற்பத்தியில் 15 - 30 சதவிகிதம் உற்பத்தியை சீனாவுக்கு வெளியே செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளதாம், காரணம் அமெரிக்கா - சீனா இடையே நிலவி வரும் வர்த்தக பிரச்சனை தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

ஆப்பிள் இந்தியாவை ஒரு உற்பத்தி மையமாக கருதுகின்றது!

ஆப்பிள் இந்தியாவை ஒரு உற்பத்தி மையமாக கருதுகின்றது!

உண்மையில், மற்ற சந்தைகளை விட ஆப்பிள் இந்தியாவைத் தான் ஒரு உற்பத்தி சந்தையாக கருதுகின்றது. அதோடு சமீபத்திய அறிக்கைகள் மூலம், தைவானிய உற்பத்தியாளாரான ஃபாக்ஸ்கான் விரைவில் இந்தியாவில், தமிழ் நாட்டில் உள்ள ஆலையின் மூலம் உற்பத்தி செய்யத் தொடங்குவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் உற்பத்தி வாய்ப்பு அதிகம்!

இந்தியாவில் உற்பத்தி வாய்ப்பு அதிகம்!

ஆப்பிள் நிறுவனமானது அதன் உற்பத்தியை சீனாவிலிருந்து மாற்றுவதற்கான விருப்பத்தை ஆராய்வதற்கு, அமெரிக்கா சீனா வர்த்தக பிரச்சனை ஒரு காரணமாக அமைந்துள்ளது என்று நிக்கி ஏசியன் மதிப்பாய்வின் அறிக்கைகள் கூறுகின்றன. இது ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்குவதற்கும், இதன் மூலம் ஆப்பிளூக்கு இறக்குமதி வரிகளைத் தவிர்க்கவும் இது உதவும் என்றும், மேலும் இதன் மூலம் இதன் சாதனங்களின் விலையைக் குறைக்க முடியும் என்றும் ஆப்பிள் நினைக்கிறது. அதோடு இந்த நிறுவனத்தின் சேமிப்புகளை அதன் சில்லறை சங்கிலியில் முதலீடு செய்யலாம் என்றும் கருதப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Apple begins exporting India made iPhones to Europe

Apple begins exporting India made iPhones to Europe
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X