ஒரு லட்சத்துக்கு ரூ.1 கோடி தாரோம்.. வாங்க.. ஆசை காட்டி அழைக்கும் கும்பல்.. மக்களே எச்சரிக்கை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோயம்புத்தூர் : நாளுக்கு நாள் மோசடி செய்து பணத்தை ஏமாற்றுவது அதிகரித்து வரும், இந்த நிலையில் இது போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.

 

அதிலும் கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு கும்பல், ஐரோப்பியன் ஃபண்ட் என்ற பெயரில், ஐரோப்பிய நிறுவனங்களில் முதலீடு செய்வதாக கூறி பல லட்சங்களை வசூல் செய்துள்ளது.

இது மட்டும் அல்லாமல் ஒரு லட்சம் ரூபாய்க்கு, ஒரு கோடி ரூபாய் என ஆசை வார்த்தை காட்டி மோசடி செய்தும் வந்திருக்கின்றனர்.

பணம் மோசடி

பணம் மோசடி

டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்கு சுற்றுலா கூட்டிச் சென்று மக்களிடம் நம்பிக்கையை பெற்றதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் பலரிடம் வசூல் செய்த பணத்திற்கு, பணம் திரும்ப கொடுக்கப்படாததால், முதலீட்டாளர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளாதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் செந்தில்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் இதுபோன்ற மோசடிகளில் தப்பிக்க எந்த மாதிரியான விஷயங்களை கவனிக்க வேண்டும் என்றும் சில முதலீட்டாளர்கள் கூறியுள்ள கருத்துகளை இங்கு தொகுத்துள்ளோம்.

ஏமாந்து போன முதலீட்டாளர்கள்

ஏமாந்து போன முதலீட்டாளர்கள்

கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு சத்தியமங்கலம் பகுதிகளில் தொடர்ந்து இது நடைபெற்று வரும் பிரச்சனையாக உள்ளது. இவ்வாறு முதலீடுகளை வசூல் செய்யும் கும்பலானாது, மிக அழகான, ஆடம்பரமான அலுவலகங்களையும்,
மிக அதிக விலை கொண்டுள்ள பர்னிச்சர்களையும் அதற்கேற்றவாறு ஆடம்பர சூழ் நிலைகளை உருவாக்குகின்றனர். இதைப் பார்த்து தான் மக்களும் ஏமாந்து போகின்றனர். அதோடு அலுவலகத்திற்கு வரும் முதலீட்டாளார்களுக்கு விலை உயர்வான ஹோட்டல்களில் உணவு அருந்த கூட்டுச் செல்வது போன்றவற்றை செய்வார்கள். பின் தான் தெரியும் நம்மிடம் இருந்து முதலீட்டை வாங்கும் வரைக்கும் தான் இதெல்லாம் என்று. இது முதலீட்டை பெறுவதற்காக அவர்கள் செய்யும் யுக்திகள் சிலவை தான் இவையெல்லாம்.

முதலீடு செய்துவிட்டால் பயமுறுத்துவார்கள்
 

முதலீடு செய்துவிட்டால் பயமுறுத்துவார்கள்

இந்த மாதிரியான ஏமாற்று நிறுவனங்கள், நம்மிடம் இருந்து முதலீட்டை பெறும்வரை நம் பின்னால் சுற்றுவார்கள். முதலீட்டுக்கு பின்னர் நாம் அவர்களின் பின்னால் செல்ல வேண்டி இருக்கும். அவர்களின் ஆடம்பரத்தையும், கோர்வையான பேச்சையும் நம்பி பணத்தை முதலீடு செய்தால், இது பின்னர் பெரிய பிரச்சனைக்கு நம்மை கொண்டு செல்லும். இதனால் நம் பணமும் நேரமும் தான் வீண் என்றுக் கூறுகிறார்கள்.

ஆரம்பத்தில் சொன்னதை போல் பணம் திரும்ப தருவார்கள்

ஆரம்பத்தில் சொன்னதை போல் பணம் திரும்ப தருவார்கள்

இது போன்ற நிறுவனங்கள் சாதரணமாக ஆரம்பத்தில் நீங்கள் முதலீடு செய்ததற்கு பின்னர் உங்களுக்கு பணத்தை திரும்ப கொஞ்ச நாள் அளிப்பார்கள். ஆனால் 6 மாதத்திற்கு பின்னர் அலுவலகமும் இருக்காது, ஆட்களும் இருக்க மாட்டார்கள். உங்களிடம் நல்ல பேரை வாங்கிவிட்டு உங்கள் மூலம் எவ்வளவு முதலீடை பெற முடியுமோ? முடிந்தவரை உங்களுடமிருந்தும், மற்றவர்களிடமிருந்தும், அவர்களுக்கு தேவையானவற்றை சுருட்ட முடியுமோ, அந்த அளவுக்கு சுருட்டிக் கொண்டு பின் ஏமாற்றுவார்கள்.

ஏமாற்றுவதற்கு கையாளும் யுக்திகள்

ஏமாற்றுவதற்கு கையாளும் யுக்திகள்

இவ்வாறு ஏமாற்றும் ஏமாற்றுகாரர்கள், நீங்கள் முதலீட்டை எங்கள் கையில் கொடுக்க வேண்டாம். உங்களது பேரில் அக்கவுண்ட் ஓபன் செய்து, உங்கள் பெயரில் முதலீடு செய்து கொள்ளலாம் என்பார்கள். முதலாவதாக இந்தியாவில் ஃபாரக்ஸ் டிரேடிங் செய்வதற்கான அனுமதியே கிடையாது. அதோடு பிட்காயின் -களுக்கும் இந்தியாவில் அனுமதி கிடையாது. இந்த நிலையில் பெரும்பாலும் ஏமாற்றப்படும் பணம் இந்த வகையிலேயே, அதிலும் இது போன்ற வகையறாக்களில் முதலீடு செய்வதாகவே கூறப்படுகிறது.

இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ளது?

இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ளது?

முதலில் நாம் முதலீடு செய்யும் போது, இந்த வகையான முதலீடுகளுக்கு இந்தியாவில் அனுமதி உண்டா? அப்படி ஏதேனும் சம்பந்தப்பட்ட நிறுவனம் இந்தியாவில் பதிவு செய்துள்ளாதா? என்று பாருங்கள்.. முழுக்க ஆன்லைன் வர்த்தகம் என்று கூறும் ஏமாற்று நிறுவனங்கள், இந்தியாவில் வேறு ஒரு வர்த்தகத்திற்காக பதிவு செய்து விட்டு, இந்த மாதிரியான ஏமாற்று வேலைகளை செய்யும் கும்பலும் உள்ளது. நாம் அவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.

உங்கள் கையில் உங்கள் முதலீடு?

உங்கள் கையில் உங்கள் முதலீடு?

உங்களது பேரில் முதலீடு செய்வதாக கூறும் இந்த நிறுவனம், ஆன்லைனில் போலியான அக்கவுண்ட்களை ஒபன் செய்வார்கள். இதையெல்லாவற்றவையும் விட, முதலீட்டை நீங்கள் செய்யுங்கள் வர்த்தகத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். வரும் லாபத்தில் உங்களுக்கு 40, நிறுவனத்திற்கு 60 எனவும், இதில் அறிமுகப்படுத்துவோருக்கு தனியாக கமிஷன் என்ற கொள்ளை களைகட்டும் என்கிறார்கள்.

ஏழை மக்கள் தான் டார்கெட்

ஏழை மக்கள் தான் டார்கெட்

இந்த மோசடி கும்பலின் டார்கெட்டே நடுத்தர குடும்பங்கள் தான். அதிலும் கிராமாப்புறங்கள் முக்கிய டார்கெட். இவ்வாறான பல மோசடிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருந்தாலும், இன்னும் சிலர் ஏமாந்து கொண்டே தான் இருக்கிறார்கள். என்னதான் அரசு விழிப்புணர்வு கொடுத்தாலும், முதலீட்டாளர்கள் அதை புரிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும் ஏமாறுகிறார்கள். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல, முதலீட்டாளர்கள் அவர்களாய் புரிந்து, தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே நூற்றுக்கு நூறு உண்மை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How do I start to learn about investing money?

How do I start to learn about investing money?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X