அதிர வைக்கும் அறிக்கை.. லட்சக் கணக்கில் வேலை இருக்கு.. தகுதியான நபர்கள் தான் இல்லை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு புறம் பல ஆயிரம் பேர் வேலையிழப்பு, பல நிறுவனங்களில் வேலையின்மை என்ற நிலையில், பல நிறுவனங்கள் பணியமர்த்தல் என்ற ஒரு விஷயத்தையே மறந்து விட்டன. இந்த நிலையில் எர்னஸ்ட் & யங்க் நிறுவனம், இந்தியாவில் 14,000 பேரை வேலைக்கு எடுக்க உள்ளதாகவும், இதே டெலாய்ட் நிறுவனம் 40,000 பேரை வேலைக்கு எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எர்னஸ்ட் & யங் நிறுவனம், சர்வதேச அளவில் குளோபல் டெலிவரி சர்வீசஸை செய்து வருகிறது, அதிலும் குறிப்பாக இந்தியாவில் 8 இடங்களில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் ஏற்கனவே 27,000 பேர் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த நிறுவனம் மேலும் நடப்பு நிதியாண்டில் பல ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

புதிய பணியமர்த்தல்

புதிய பணியமர்த்தல்

இது குறித்து இந்த நிறுவனத்தின் சர்வதேச துணை தலைவர் ஸ்ரீ சீனிவாச ராவ், இந்த புதிய பணியமர்த்தல் என்பது, உலக அளவில் டிஜிட்டல் உருமாற்றத்தை நிறைவேற்றுவதற்கும், உலகம் முழுவதுதிலும் இருந்து தங்கள் வாடிக்கையாளர்களுக்கு திறன் சார்ந்த குழுக்களை, தங்களது சேவைகளை வழங்குவதற்கும் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. இது இந்த நிறுவனத்தின் சேவையை விரிவாக்கம் செய்ய உதவுவதோடு, மேலும் பல ஆயிரம் பேருக்கு வேலையும் கொடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது இந்த நிறுவனம்.

இந்த வேலைக்கு யாரெல்லாம் தேவை

இந்த வேலைக்கு யாரெல்லாம் தேவை

இவ்வாறு பணியமர்த்தப்படும் பணியாளர்கள் சிறந்த டேட்டா அனலிஸ்ட்களாகவும், மெஷின் லேர்னிங் திறன் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் எனவும், இவர்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும், இது தவிர சைபர் பாதுகாப்பு மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவை பிற துறைகளிலும் தீவிரமான பணியமர்த்தலைக் கொண்டிருக்கும் என்றும், மேலும் இயந்திர கற்றல், ரோபாடிக்ஸ் தொடர்பான திறன்களுக்கும் அதிக தேவை உள்ளது என்றும் கூறப்படுகிறது.

மற்ற நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு கொட்டி கிடக்கு

மற்ற நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு கொட்டி கிடக்கு

நாங்கள் மட்டும் அல்ல மற்ற நிறுவனங்களும் வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றன. குறிப்பாக டெலாய்ட், எர்னஸ்ட் & யங், கேபிஎம்ஜி உள்ளிட்ட நிறுவனங்களும் திறமை வாய்ந்த ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளன. அதிலும் குறிப்பாக டெலாய்ட் நிறுவனம் 40,000 பேரை பணியமர்த்த உள்ளதாகவும், இதே கேபிஎம்ஜி நிறுவனம் 8000 - 9000 பேரை பணியில் அமர்த்த உள்ளதாகவும் கூறியுள்ளது.

தகுதி வாய்ந்த நபர்கள் தான் இல்லை

தகுதி வாய்ந்த நபர்கள் தான் இல்லை

இது இப்படி எனில் ஐ.டி நிறுவனங்கள் ஏற்கனவே 85,000 பேரை பணிக்கு அமர்த்தியுள்ளன என்றும், இது ஆறு வருடங்களின் சாதனையை முறியடித்துள்ளன என்றும் கூறியுள்ளது. இதே இன்னும் 2.5 லட்சம் வேலை வாய்ப்புகள், திறமையான தகுதி வாய்ந்த நபர்கள் இல்லாததால் வேலைகள் நிரப்படாமல் உள்ளன என்றும் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக முக்கிய ஐ.டி நிறுவனங்களான டி.சி.எஸ், விப்ரோ மற்றும் ஹெச்.சி.எல் நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டில் 78,000 பேரை வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், இது மற்றொரு முக்கிய பணியமர்த்தலாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

இது இப்படி எனில் ஐ.டி நிறுவனங்கள் ஏற்கனவே 85,000 பேரை பணிக்கு அமர்த்தியுள்ளன என்றும், இது ஆறு வருடங்களின் சாதனையை முறியடித்துள்ளன என்றும் கூறியுள்ளது. இதே இன்னும் 2.5 லட்சம் வேலை வாய்ப்புகள், திறமையான தகுதி வாய்ந்த நபர்கள் இல்லாததால் வேலைகள் நிரப்படாமல் உள்ளன என்றும் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக முக்கிய ஐ.டி நிறுவனங்களான டி.சி.எஸ், விப்ரோ மற்றும் ஹெச்.சி.எல் நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டில் 78,000 பேரை வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், இது மற்றொரு முக்கிய பணியமர்த்தலாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

Ernst & Young will hires 14,000 in india for global delivery service,and its told there is in lot of jobs but no qualified persons.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X