அப்படி போடு! யுனிகார்ன் ஸ்டேட்டஸை தொட்ட ஸ்டார்ட் அப் கம்பெனிகள்! iஉள்நாட்டில் 21 வெளிநாட்டில் 40!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Startup என்கிற சொல், வெறுமனே கம்பெனி வகைகளை மட்டும் குறிப்பதில்லை. ஒட்டு மொத்தமாக ஒரு வாழ்கை முறையையே குறிக்கிறது.

இந்த ஸ்டார்ட் அப் வாழ்கை முறையில் யுனிகார்ன் என்பது ஒரு மிக முக்கிய மைல் கல். இந்த யுனிகார்ன் ஸ்டார்ட் அப் கம்பெனிகளைக் குறித்து Hurun Global Unicorn Index 2020 சில சுவாரஸ்யத் தகவல்களைச் சொல்லி இருக்கின்றன.

யுனிகார்ன் - ஒரு Startup கம்பெனியின் மொத்த மதிப்பு 1 பில்லியன் டாலருக்கு மேல் போனால் அதை யுனிகார்ன் ஸ்டார்ட் அப் என்று சொல்வார்கள்.

இந்தியாவில் எத்தனை

இந்தியாவில் எத்தனை

இப்படிப்பட்ட யுனிகார்ன் ஸ்டார்ட் அப் கம்பெனிகள் இந்தியாவில் 21 கம்பெனிகள் இருக்கிறதாம். இந்தியாவில் இருக்கும் இந்த 21 யுனிகார்ன் கம்பெனிகளின் மொத்த மதிப்பீடு 73.2 பில்லியன் டாலராக இருக்குமாம். அதோடு இந்திய வம்சாவளியினர்கள், வெளிநாட்டில் நடத்தும் 40 ஸ்டார்ட் அப் கம்பெனிகளும் யுனிகார்ன் ஸ்டார்ட் அப் கம்பெனிகளாக இருக்கின்றனவாம்.

உலகிலேயே நான்காவது நாடு இந்தியா

உலகிலேயே நான்காவது நாடு இந்தியா

அதிக அளவில் யுனிகார்ன் Startup கம்பெனிகள் இருக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு நான்காவது இடமாம். ட்ரம்பின் அமெரிக்கா 233 யுனிகார்ன் Startup கம்பெனிகளுடன் முதலிடத்தைப் பிடித்து இருக்கிறார்கள். அமெரிக்காவைத் தொடர்ந்து சீனா (227), இங்கிலாந்து (24), இந்தியா (21), தென் கொரியா (11) யுனிகார்ன் ஸ்டார்ட் அப் கம்பெனிகளை வைத்திருக்கிறார்களாம்.

இந்திய Startup கம்பெனிகள் முதலீடு

இந்திய Startup கம்பெனிகள் முதலீடு

அப்படி இந்தியாவில் 21 யுனிகார்ன் Startup கம்பெனிகளில், 11 ஸ்டார்ட் அப் கம்பெனிகளில் சீனாவின் அலிபாபா (5), டென்செண்ட் (3), டி எஸ் டி குளோபல் (3) முதலீடு செய்து இருக்கிறார்கள். இந்தியாவில் ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி, இந்த யுனிகார்ன் நிலையை அடையை சராசரியாக 7 ஆண்டுகள் தேவைப்படுகிறதாம்.

ஐஐடி மாணவர்கள்

ஐஐடி மாணவர்கள்

இந்தியாவில் ஐஐடி கல்லூரியில் படித்தவர்கள் தான் அதிகம் இந்த யுனிகார்ன் ஸ்டார்ட் அப் கம்பெனிகளை நிறுவி இருக்கிறார்களாம். இந்தியாவின் 21 யுனிகார்ன் ஸ்டார்ட் அப் கம்பெனிகளில், 8 கம்பெனிகள், பெங்களூரில் இருந்து செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றனவாம். சூப்பர், வளரட்டும் ஸ்டார்ட் அப் கம்பெனிகள், பெருகட்டும் வேலை வாய்ப்புகள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

21 indian startups are unicorns 40 foreign startups with indian founders also unicorn

Now India is home for 21 unicorn startups. 40 more foreign startup companies with indian founders are also unicorns as per Hurun Global Unicorn Index 2020
Story first published: Wednesday, August 5, 2020, 16:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X