#SBI எச்சரிக்கை.. கொரோனா 3வது அலை செப்டம்பரில் மோசமாக தாக்கலாம்.. அப்படின்னா பொருளாதாரம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் தற்போது தான் கொரோனாவின் தாக்கம் சற்றே ஓய்ந்துள்ள நிலையில், பல நிபுணர்களும், நிறுவங்களும் மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கையை விடுத்து வருகின்றனர்.

கார், பைக் விலையை உயர்த்தும் ஹோண்டா.. என்ன காரணம் தெரியுமா..?! கார், பைக் விலையை உயர்த்தும் ஹோண்டா.. என்ன காரணம் தெரியுமா..?!

இதன் தாக்கம் ஒரு புறம் பெரியளவில் பாதிப்பினை ஏற்படுத்தாது என சிலர் கூறினாலும், மக்கள் மத்தியில் முதல், இரண்டாம் அலையின் போதே மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது அலை என்ன செய்ய போகிறதோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

மூன்றாம் கட்ட பரவல் தாக்கம்

மூன்றாம் கட்ட பரவல் தாக்கம்

முதல் இரண்டாம் அலைகளின் போதே மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில், மக்கள் தங்கள் வாழ்வாதரங்களை இழந்து, வேலையினை இழந்து, புதிய வேலைகள் கிடைக்காமல் தவித்து வருபவர்கள் பலர். இப்படி இருக்கையில் எஸ்பிஐ தனது ஆய்வறிக்கையில் ஆகஸ்ட் 2021ல் இந்தியாவில் மூன்றாம் கட்ட தாக்கம் இருக்கும்.

செப்டம்பரில் உச்சம் தொடும்

செப்டம்பரில் உச்சம் தொடும்

மூன்றாம் அலையானது செப்டம்பரில் அது உச்சம் பெறும் என எஸ்பிஐ தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. இரண்டாவது அலை மே 7 அன்று உச்சத்தினை எட்டியது. இரண்டாவது அலை கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவினை தாக்கியது. இது மே மாதத்தில் மோசமான தாக்கத்தினை எட்டியது, குறிப்பாக டெல்லி, மகாராஷிடிரா, கேரளா மற்றும் சில மா நிலங்களில் லட்சக்கனக்கானோரை பாதித்தது.

கொரோனா பாதிப்பு
 

கொரோனா பாதிப்பு

மூன்றாம் கட்ட பரவல் என்பது ஜூலை இரண்டாம் வாரத்தில் ஆரம்பிக்கலாம். எனினும் ஆகஸ்ட் நடுத்தர காலத்தில் இன்னும் வழக்குகள் அதிகரிக்க ஆரம்பிக்கும் என்றும் எஸ்பிஐ தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது. இந்தியா திங்கட்கிழமையன்று 39,796 பேருக்கு புதியதாக தொற்று உள்ளதாகவும், 42,352 பேர் குணமடைந்துள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 723 பேர் பலியாகியுள்ளநர்.

மொத்த கொரோனா பாதிப்பு

மொத்த கொரோனா பாதிப்பு

இந்தியாவில் மொத்தம் 3,05,85,229 பேருக்கு தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கையானது 4 லட்சத்தினையும் தாண்டியுள்ளது. இந்தியாவில் தற்போது 35 கோடி பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாகவும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றனர். எப்படியிருப்பினும் மக்கள் பல கோடி பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள நிலையில், மூன்றாம் கட்ட தாக்கம் என்பது, பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தாது என்று கூறுவது சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியாக பார்க்கப்படுகிறது.

பொருளாதாரம் என்ன ஆகுமோ?

பொருளாதாரம் என்ன ஆகுமோ?

முதல் கட்ட அலையிலேயே மிக மோசமாக வரலாறு காணாத சரிவினைக் கண்ட பொருளாதாரம், இரண்டாம் கட்ட அலையினால் இன்னும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து மீண்டு வரவே இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என்ற நிலையில், மூன்றாம் கட்ட பரவல் எந்தளவுக்கு தாக்கத்தினை ஏற்படுத்துமோ? இது பொருளாதாரத்தில் எந்தளவுக்கு தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

3rd wave may hit India in august, peak in September; SBI report

Coronavirus impact.. 3rd wave may hit india in august, peak in September; SBI report
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X