ஓடியாங்க.. ஓடியாங்க.. அபுதாபி அறிவிப்பால் இந்திய நிறுவனங்கள் குஷி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகில் அதிகப்படியான வளர்ச்சியை எதிர்நோக்கிப் பல புதிய முயற்சிகளில் இறங்கியுள்ள வளைகுடா நாடுகள், எதிர்காலத்திற்காக மிகப்பெரிய திட்டத்தைத் தீட்டி வருகிறது இதற்காக இந்திய நிறுவனங்களை அதிகளவில் நம்பியுள்ளது.

 

உலகம் முழுவதும் கிளீன் எனர்ஜி, கிரீன் எனர்ஜி, எலக்ட்ரிக் வாகனங்கள் எனப் பல மாற்றங்களை வேகமாகச் செயல்படுத்தி வரும் நிலையில் கச்சா எண்ணெய் மட்டுமே முக்கியப் பொருளாதார ஆதாரமாகக் கொண்டு இருக்கும் வளைகுடா நாடுகள் மாற்று பாதையைத் தேர்வு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

வளைகுடா பகுதி

வளைகுடா பகுதி

இந்த நிலையில் தான் வளைகுடா பகுதியின் மிகவும் முக்கியப் பொருளாதார நாடாக விளங்கும் ஐக்கிய அரபு நாடுகள் புதிய பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கான ஆதாரங்களைத் தேடி வருகிறது.

ஐக்கிய அரபு நாடுகள்

ஐக்கிய அரபு நாடுகள்

ஐக்கிய அரபு நாடுகள் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஐக்கிய அரபு நாடுகள் ஹைட்ரோகார்பன் துறையைத் தாண்டி புதிய துறையில் வர்த்தகம், பொருளாதாரத்தை உருவாக்கும் விதமாகத் தனது தலைநகரான அபுதாபி-யில் இந்திய ஸ்டார்அப் நிறுவனங்களை முதலீடு செய்யவும், டெக் ஹாப்-களை உருவாக்கவும் அழைப்பு விடுத்துள்ளது.

MENA பகுதி
 

MENA பகுதி

இந்தத் திட்டம் மூலம் ஐக்கிய அரசு நாடுகளின் வளர்ச்சிக்கு உதவுவது மட்டும் அல்லாமல் இந்திய நிறுவனங்கள் தனது வர்த்தகத்தை Middle East and North Africa (MENA) பகுதி மற்றும் உலகளவில் விரிவாக்கம் செய்ய முக்கியப் பங்கு வகிக்க உள்ளது.

முதலீட்டு வாய்ப்பு

முதலீட்டு வாய்ப்பு

அபுதாபி வேளாண் தொழில்நுட்பம், சுற்றுலா, சுகாதாரம், மருந்து மற்றும் நிதி சேவைகள் உள்ளிட்ட துறைகளை இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்து புதிய வாய்ப்புகளாக அடையாளம் கண்டு இந்திய நிறுவனங்களுக்கான கதவுகளைத் திறந்துள்ளது.

அபுதாபி முதலீட்டு அலுவலகம்

அபுதாபி முதலீட்டு அலுவலகம்

அபுதாபி முதலீட்டு அலுவலகத்தின் (ADIO) செயல் இயக்குநர் ஜெனரல் ஆக இருக்கும் அப்துல்லா அப்துல் அஜீஸ் அல்ஷம்சி தான் புதிய முதலீடுகளை ஈர்க்கும் பொறுப்பில் உள்ளார். இந்திய நிறுவனங்களுக்கு அனைத்து விதமான முதலீட்டு வாய்ப்புகளை அளிக்கவும் தனது அபுதாபி முதலீட்டு அலுவலகம் தயாராக உள்ளதாகவும், இந்தியா - UAE மத்தியிலான உறவில் இந்த முதலீடு மற்றும் டெக் ஹப் உருவாக்கும் முயற்சி முக்கியப் பங்கு வகிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியா நிறுவனங்கள்

இந்தியா நிறுவனங்கள்

இந்தியாவில் இருக்கும் உற்பத்தி நிறுவனங்கள் முதல் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தற்போது உற்பத்தி மற்றும் வர்த்தக விரிவாக்க பணிகளில் குறியாய் இருக்கும் நிலையில், ஐக்கிய அரபு நாடுகளைத் தேர்வு செய்யும் இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 சர்வதேச வர்த்தகம்

சர்வதேச வர்த்தகம்

இதற்கு முக்கியக் காரணம் உலக நாடுகள் சர்வதேச வர்த்தகத்தில் அதிக விரிவாக்கம் செய்யாமல் இருக்கும் சந்தையாக MENA பகுதி உள்ளது. இதனால் இந்தியா நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் உலகில் அனைத்து நிறுவனங்களுக்கும் MENA முக்கியச் சந்தையாக மாறி வருகிறது.

இந்தியா - UAE

இந்தியா - UAE

2021-22 ஆம் நிதியாண்டில் இந்தியா - UAE மத்தியிலான வர்த்தகம் 72.8 பில்லியன் டாலராகும். இதேபோல் ஐக்கிய அரபு நாடுகளுக்கு அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய வர்த்தகக் கூட்டணி நாடாக இருப்பது இந்தியா தான். அதிலும் முக்கியமாக ஏற்றுமதி பிரிவில் UAE-க்கு இந்தியா 2வது பெரிய வர்த்தக நாடாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Abu Dhabi call Indian start-ups to invest and establish hubs; Alternative for hydrocarbons

Abu Dhabi call Indian start-ups to invest and establish hubs; Alternative for hydrocarbons
Story first published: Sunday, December 4, 2022, 16:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X