சீனாவுக்கு ஜாக்பாட்.. ஆப்பிள் கொடுத்த நெருக்கடி.. தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் கிளியர் ஆகுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய - சீன எல்லை பிரச்சனைக்குப் பின்பு சீன நிறுவனங்களுக்கும், சீன முதலீடுகளுக்கும் மிகப்பெரிய தடையை விதித்துப் பெரிய அளவிலான நெருக்கடியை உருவாக்கியது.

இதனால் கடந்த 3 வருடமாக சீன நிறுவனங்களும், சீன முதலீடுகளும் இந்தியாவுக்குள் வரவில்லை, ஆனால் இந்தியாவில் ஏற்கனவே இயங்கி வந்த சீன நிறுவனங்கள் இக்காலகட்டத்தில் தொடர்ந்து முதலீடு செய்தது.

இந்த நிலையில் ஐபோன் உற்பத்திக்காக ஆப்பிள் நிறுவன கோரிக்கையின் பெயரில் சுமார் 14 சீனா நிறுவனங்கள் இந்தியாவுக்கு வரவும், முதலீடு செய்யவும் மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.

 சீன நிறுவனத்தினை கட்டம் கட்டி அடிக்கும் அமெரிக்கா.. கடுப்பான ஹூவாய்.. என்ன தான் நடக்குது? சீன நிறுவனத்தினை கட்டம் கட்டி அடிக்கும் அமெரிக்கா.. கடுப்பான ஹூவாய்.. என்ன தான் நடக்குது?

ஐபோன்

ஐபோன்

இந்தியாவில் ஐபோன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி தளத்தையும், கட்டமைப்பையும் மேம்படுத்துவதற்காக அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் பல சீன சப்ளையர்களை இந்தியாவுக்கு அழைக்கும் பேச்சுவார்த்தையில் வென்றுள்ளது.

முதல்கட்ட அனுமதி

முதல்கட்ட அனுமதி

ஆப்பிள் நிறுவனத்தின் கோரிக்கை அடிப்படையில் மத்திய அரசு சிறப்பு ஒற்றை வழக்காக எடுத்துக்கொண்டு 14 சீன நிறுவனங்கள் இந்தியாவுக்கு வர முதல்கட்ட அனுமதியை அளித்துள்ளது. இந்திய - சீனா எல்லை பிரச்சனைக்குப் பின்பு அனுமதி அளிக்கப்படும் காரணத்தால் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

 சீன சப்ளையர்கள்

சீன சப்ளையர்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் சீன சப்ளையர்கள் இந்திய அரசை அணுகியது, மொத்தம் 17 சீன சப்ளையர்களின் பட்டியலிலிருந்து 14 நிறுவனங்கள் முதற்கட்ட அனுமதியைப் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

14 நிறுவனங்கள்

14 நிறுவனங்கள்

இந்த 14 நிறுவனங்களில் சில Luxshare, Sunny Optical, Han's Laser Technology, YUTO Packaging Technology, Strong, Salcomp மற்றும் Boson போன்றவை அடங்கும். இந்த நிறுவனங்கள், ஆப்பிள் ஐபோன் மட்டும் அல்லாமல் பிற ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டுகளுக்கும் உதிரிப்பாகங்களை வழங்குகின்றன.

தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு

இதில் முக்கியமாக Luxshare Precision நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய சப்ளையராக விளங்குகிறது. Luxshare Precision-ன் உதிரிப்பாகங்கள் ஐவாட்ச், ஏர்பாட்ஸ், ஐபோன்ஸ் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் மே 2020ல் சென்னையில் மூடப்பட்டு இருக்கும் மோட்டோரோலா போன் உற்பத்தி தளத்தைக் கைப்பற்ற Luxshare Precision நிறுவனம், தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்யாது.

மத்திய அரசு ஒப்புதல்

மத்திய அரசு ஒப்புதல்


இந்தத் தொழிற்சாலையில் Luxshare Precision நிறுவனம் சுமார் 750 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்தது. ஆனால் இதுவரையில் இத்திட்டம் ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த முயற்சியில் மத்திய அரசு, தமிழ்நாடு அரசு - Luxshare Precision நிறுவனம் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமான காரணம்

முக்கியமான காரணம்

பல வருடங்களுக்குப் பின்பு பெரும் பிரச்சனைக்கு மத்தியில் சீன நிறுவனங்கள் இந்தியாவில் அனுமதிக்க முக்கியமான காரணம் உண்டு. ஆப்பிள் நிறுவனம் இந்தியாவின் முக்கிய உற்பத்தி கூட்டணியாக மாறியுள்ளது. தற்போது 18 சதவீத உற்பத்தி அளவை 50 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டு உள்ளது.

உதிரிப்பாகங்கள்

உதிரிப்பாகங்கள்

இதை எளிதாக்க ஆப்பிள் நிறுவனம் தனது ப்ராடக்ட்ஸ் அனைத்தின் உதிரிப்பாகங்களையும் இந்தியாவில் தயாரிக்க வேண்டும். இதற்காகப் பல இந்திய முன்னணி நிறுவனங்கள் வர்த்தக அமைப்புகள் பல மாதமாக இந்த உதிரிப்பாகங்களை இந்தியாவிலேயே தயாரிக்க முயற்சி செய்தது.

இந்திய நிறுவனங்கள் தோல்வியா..?!

இந்திய நிறுவனங்கள் தோல்வியா..?!

ஆனால் இந்த முயற்சி தோல்வி அடைந்த நிலையில், ஐபோன் தயாரிப்புக்கான தரத்தில் உதிரிப்பாகங்களைத் தயாரிக்க முடியவில்லை. இதனாலேயே இந்திய - சீனா எல்லை பிரச்சனை முடிவதற்கு முன்பாகவே 17 நிறுவனங்கள் பட்டியலில் 14 நிறுவனங்களுக்கு இந்தியாவில் கூட்டணி முறையில் உற்பத்தி தளத்தில் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது மோடி அரசு.

14 சீனா நிறுவனங்கள்

14 சீனா நிறுவனங்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் கோரிக்கைக்காக மட்டுமே தற்போது மத்திய அரசு 14 சீனா நிறுவனங்கள் வருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதேவேளையில் இந்த 14 சீன நிறுவனங்களும் தனியாக உற்பத்தி தளத்தை அமைத்து வர்த்தகம் செய்ய முடியாது. கட்டாயம் இந்திய நிறுவனத்துடனான கூட்டணி அடிப்படையில் தான் அமைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

கூட்டணி நிறுவனம்

கூட்டணி நிறுவனம்

மேலும் மத்திய அரசு இந்த 14 சீன நிறுவனங்களும் தனது இந்திய கூட்டணி நிறுவனத்தைத் தேர்வு செய்த பின்பு அடுத்த கட்ட ஒப்புதல் அளிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உதிரி பாகங்கள் சந்தையில் இந்திய நிறுவனங்களின் ஆதிக்கம் தொடர்ந்து இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

After India - China border issue 14 Chinese companies entering to India to Support Apple

After India - China border issue 14 Chinese companies entering to India to Support Apple
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X