தட்டி தூக்கும் உற்பத்தி துறை.. இனி மாஸ் தான்.. ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2022ம் ஆண்டு முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ? தெரியவில்லை. பல துறைகளில் பணி நீக்கம் என்பது ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த போக்கு அடுத்த ஆண்டிலும் தொடரலாமோ என்ற அச்சம் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் இருந்து வருகின்றது.

 

நடப்பு ஆண்டிலேயே மிகப்பெரிய அளவிலான பணி நீக்கம் என்பது பெரியளவில் இருந்தது, மிகப்பெரிய அளவிலான செலவு குறைப்பு நடவடிக்கையும் இருந்து வருகின்றது. இதில் வேலை குறைப்பும் இருந்து வருகின்றது.

தற்போது சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் உலக அளவில் பணி நீக்கம் என்பது இருந்து வருகின்றது.

பணி நீக்கத்தினை விட.. ஸ்டார்ட் அப்கள் எத்தனை பேருக்கு வேலை கொடுத்திருக்காங்க தெரியுமா.. மாஸ்! பணி நீக்கத்தினை விட.. ஸ்டார்ட் அப்கள் எத்தனை பேருக்கு வேலை கொடுத்திருக்காங்க தெரியுமா.. மாஸ்!

வேலை அதிகரிக்க தொடங்கியுள்ளது

வேலை அதிகரிக்க தொடங்கியுள்ளது

குறிப்பாக இந்த விகிதமானது உற்பத்தி துறையிலும் கணிசமாக இருந்து வந்தது. இது மேற்கோண்டு அதிகரிக்குமோ என்ற அச்சம் பரவலாக காணப்பட்டது. ஆனால் தற்போது இந்த துறையில் கணிசமாக வேலை அதிகரிக்க தொடங்கியுள்ளதாக டீம்லீஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.

பணியமர்த்தலுக்கு விரிவாக்கம்

பணியமர்த்தலுக்கு விரிவாக்கம்

டீம்லிஸ் அறிக்கையில், 60% நிறுவனங்கள் பணியமர்த்தலை செய்ய விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளனவாம். இது குறிப்பாக திறமைகளுக்கான ஒரு வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இந்த பணியமர்த்தலில் மெட்ரோ நகரங்களில் 94% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த நகரத்தில் என்ன விகிதம்?
 

எந்த நகரத்தில் என்ன விகிதம்?

எந்த நகரத்தில் என்ன விகிதம்? மெட்ரோ அல்லாத நகரங்களில் 73% அதிகரிக்கலாம் எனவும், மும்பையில் 97%மும், பெங்களூரில் 91%மும், சென்னையில் 89%மும், டெல்லியில் 84%மும், புனேவில் 73%மும் அதிகளவில் பணியமர்த்தல் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணியமர்த்தல் அதிகரிப்பு

பணியமர்த்தல் அதிகரிப்பு

கொரோனாவுக்கு பிறகு பல துறைகளிலும் பணியமர்த்தல் என்பது கணிசமாக அதிகரித்துள்ளது. இது இனி வரும் காலாண்டுகளிலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் தேவையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது மேற்கொண்டு வளர்ச்சிக்கு சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் பெட்டர்

இந்தியாவில் பெட்டர்

சர்வதேச நாடுகளில் நிலைமை மோசமாக இருந்து வரும் நிலையிலும், இந்தியாவில் வளர்ச்சியானது சற்றே நேர்மறையாக இருந்து வருகின்றது என டீம்லீஸ் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி மகேஷ் பட் கூறியுள்ளார்.

மேற்கொண்டு இந்திய அரசு இந்தியாவின் உற்பத்தியினை அதிகரிக்க பற்பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இது குறிப்பாக மேக் இன் இந்தியா திட்டத்தினை ஊக்குவிக்கும் விதமாக அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக வேலை வாய்ப்புகள் பெருகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலைவாய்ப்பினை ஊக்குவிக்கலாம்

வேலைவாய்ப்பினை ஊக்குவிக்கலாம்

இந்திய அரசின் ஊக்குவிப்பு நடவடிக்கைகளால் இந்தியாவில் அன்னிய முதலீடுகள் மற்றும் உற்பத்தி துறையில் உள்நாட்டு முதலீடு என அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு இந்தியாவில் வேலை வாய்ப்பினை ஊக்குவிக்கலாம்.

 அட்ரிஷன்  விகிதம் ?

அட்ரிஷன் விகிதம் ?

அதேபோல உற்பத்தி துறையினை பொறுத்த வரையில் அட்ரிஷன் விகிதமும் சமமானதாக இருக்கலாம். கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 14.71%ல் இருந்து, 15.67% ஆக இரட்டை இலக்கில் அட்ரிஷன் விகிதம் உள்ளது. இது ஹெல்த்கேர் மற்றும் மருந்து துறைகளைத் தவிர, உற்பத்தி துறையில் ஒற்றை இலக்க அட்ரிஷன் விகிதங்கள் உள்ளன.

எங்கு ஆய்வு?

எங்கு ஆய்வு?

இந்த ஆய்வினை டீம்லீஸ் நிறுவனத்தின் 14 நகரங்களில் உள்ள 301 உற்பத்தி நிறுவனங்களில் நடத்தியது. இது 9 துறைகளை சார்ந்த நிறுவனமாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

After mass layoffs: Indian manufacturing sector may hire more in coming months

Significantly in India's manufacturing sector, 60% of companies plan to expand to hire. It is also seen as an opportunity especially for talents.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X