அஸ்ட்ராஜெனெகாவின் மனிதாபிமானம்.. இந்தியாவுக்கு ரூ.1.8 கோடிக்கு மேல் உதவி அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் என்பது உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. அந்தளவுக்கு லட்சக்கணக்கில் அதிகரித்து வருவதோடு பலி எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகிறது.

 

இதற்கிடையில் பல நாடுகளும் இந்தியாவுக்கு உதவி கரங்களை நீட்டி வருகின்றன. பல நிறுவனங்களும், தனி நபர்களும் உதவிகளை செய்து வருகின்றனர்.

சென்னை, கோவையில் வர்த்தக விரிவாக்கம்.. பிளிப்கார்ட்-ன் ஸ்மார்ட்டான முடிவு..!

அந்த வகையில் பிரிட்டனை சேர்ந்த மருந்து உற்பத்தியளாரான அஸ்ட்ராஜெனெகா நிறுவனம், 1.8 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புடைய மருத்துவ உதவிகளை செய்வதாக அறிவித்துள்ளது.

பாதிகப்பட்ட நாடுகளுக்கு நிவாரணம்

பாதிகப்பட்ட நாடுகளுக்கு நிவாரணம்

அஸ்ட்ராஜெனெகா, இந்தியாவுக்கு மட்டும் அல்ல உலகம் முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு, கொரோனாவில் இருந்து மீண்டு வர, அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவதாக அறிவித்துள்ளது. இதற்காக 1 மில்லியன் டாலர்களையும் அறிவித்துள்ளது. குறிப்பாக இந்தியாவினை ஆதரிக்கும் விதமாக 2,50,000 டாலர்கள் நிவாரணத்தினை அளிக்கும் என தெரிவித்துள்ளது.

மருத்துவ சாதனங்கள் வழங்கப்படும்

மருத்துவ சாதனங்கள் வழங்கப்படும்

இதில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் சில மருத்துவ உபகரணங்கள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் என பலவும் வழங்குவதாக அறிவித்துள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. உண்மையில் இன்று இந்தியா உள்ள நெருக்கடியான காலகட்டத்தில், இது போன்ற மனிதாபிமான உதவிகள் இந்தியா விரைவில் மீண்டு வர உதவும்.

 எங்கள் தடுப்பூசி
 

எங்கள் தடுப்பூசி

கொரோனா பெருந்தொற்று நோய் இன்று உலகையே பாடாய்படுத்தி வருகின்றது. குறிப்பாக இந்தியாவில் இழப்பீடு செய்ய முடியாத அளவுக்கு பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் இந்தியா மிகுந்த நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவின் சுமார் 1.3 பில்லியன் மக்கள் தொகையில் சுமார் 10% பேர் எங்களது தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர்.

கொரோனாவை தடுக்கும் முக்கிய அங்கம்

கொரோனாவை தடுக்கும் முக்கிய அங்கம்

இந்தியாவில் இது கோவிட்ஷீல்டு என்று அழைக்கப்படுகிறது. எங்களுடன் இணைந்து செயல்படும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, ஏற்கனவே அதிகளவில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வருகின்றது. இது கொரோனாவை தடுக்கும் முக்கியமான ஒரு அங்கமாகவும் பார்க்கப்படுகிறது என அஸ்ட்ராஜெனெகா கூறியுள்ளது.

மக்களை காக்க உதவும்

மக்களை காக்க உதவும்

தொற்று நோய் காலத்தில் லாபத்தினை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அஸ்ட்ராஜெனெகா பணியாற்றி வருகின்றது. இந்தியாவுக்கு அதிகளவிலான தடுப்பூசிகளை வழங்க இணைந்து பணியாற்றி வருகின்றோம். இது கொரோனாவில் ஏற்படும் மக்களின் இழப்புகளை குறைக்க உதவும் என்றும் சீரம்மின் தலைவர் ஆதார் பூனவல்லா கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Astrazeneca pledges over Rs.1.8 crore as humanitarian aid to india

Coronavirus impact.. Astrazeneca pledges over Rs.1.8 crore as humanitarian aid to india
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X