ஒவ்வொரு நாட்டிலும், பொருட்களின் தரத்தை உறுதி செய்யும் விதத்தில், ஒரு தர கட்டுப்பாட்டு ஆணையம் இருக்கும். அப்படி இந்தியாவில் பொருட்களின் தரத்தை நிர்ணயிக்கும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் தான் இந்த பி ஐ எஸ் (BIS - Bureau of Indian Standards).
இந்த பி ஐ எஸ் அமைப்பு மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கிக் கொண்டு இருக்கிறது.
இந்த பி ஐ எஸ் அமைப்பு புதிதாக பல பொருட்களுக்கான தரத்தை நிர்ணயிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
அரசு தரப்பு
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான தரத்தை, சர்வதேச தரத்துக்குத் தகுந்தாற் போல, இந்திய தரத்தை நிர்ணயிக்குமாறு, பி ஐ எஸ் அமைப்பிடம் அரசு கேட்டு இருந்தது. அது சீனாவில் இருந்து, இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் வர்த்தகத்தை பாதிக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கலாம் எனச் செய்திகள் வெளியாகி இருந்தன.
பி ஐ எஸ் தரப்பு
சமீபத்தில், மத்திய வணிக அமைச்சகம், இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்கள் பட்டியலைக் கொடுத்து, அதற்கு சர்வதேச தரத்தை ஒத்து, இந்திய தரத்தை நிர்ணயிக்கச் சொல்லி இருந்தார்கள் என பி ஐ எஸ் தரப்பில் ஒரு உயர் அதிகாரி சொல்லி இருப்பதாக எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
ஆராய்ச்சி + மேம்பாடு
மத்திய வணிக அமைச்சகம் கொடுத்த பட்டியலில் இருக்கும், இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு, தற்போது அமலில் இருக்கும் தரக் கட்டுப்பாடுகளை ஆராய்ந்து வருகிறோம். தேவை ஏற்பட்டால், அதை மேம்படுத்தியும் வருகிறோம் எனச் சொல்லி இருக்கிறார் அந்த பி ஐ எஸ் உயர் அதிகாரி.
25,000 தர கட்டுப்பாடுகள்
இந்தியாவின் பி ஐ எஸ் அமைப்பு, சுமாராக 25,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தரக் கட்டுப்பாடுகளை நிர்ணயித்து வைத்து இருக்கிறது. இருப்பினும் 150 பொருட்களுக்கு மட்டும் தான் கட்டாயம் தரச் சான்றிதழ் பெற வேண்டி இருக்கிறது. பி ஐ எஸ் அமைப்பு, புதிய தரக் கட்டுப்பாடுகள் & இறக்குமதி செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய சர்வதேச விதிமுறைகள் போன்றவைகளுடன், தன் வலைதளத்தை புதுப்பித்துக் கொண்டு இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கட்டாயம் இல்லை
தற்போது இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு பி ஐ எஸ் அமைப்பிடம், தர நிர்ணயம் தொடர்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை. எனவே இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் தரம் பற்றிய கவலை இல்லாமல் இறக்குமதி செய்யப்படுகின்றன. இனி நிறைய பொருட்கள், கட்டாய தர நிர்ணயம் பெற வேண்டிய பட்டியலில் சேர்க்கப்படலாம் என அந்த பி ஐ எஸ் அதிகாரியே சொல்லி இருக்கிறார்.
ஆத்ம நிர்பார் பாரத்
அப்படி நிறைய பொருட்கள் கட்டாய தர நிர்ணய பட்டியலில் சேர்க்கப்பட்டால், அது இறக்குமதிக்கு ஒரு தடையாக இருக்கும். ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக இருக்கும். அது உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் எனச் சொல்லி இருக்கிறார் பி ஐ எஸ் உயர் அதிகாரி.
இந்தியாவின் இறக்குமதி
இந்தியா, ஒவ்வொரு ஆண்டும் சுமாராக 11,500 வகையான பொருட்களை இறக்குமதி செய்கிறது. இதில் குறைந்தபட்சம் பாதி பொருட்களுக்காவது பி ஐ எஸ் அமைப்பு சில நெறிமுறைகளை வரையறுத்துக் கொண்டு இருக்கிறார்களம். சுமார் 400 பொருட்கள் பி ஐ எஸ் அமைப்பின் முக்கிய கவனத்தில் இருக்கிறதாம்.
சீனாவுக்கு தான் அதிக பாதிப்பு
இத்தனையும் சொன்ன பி ஐ எஸ் உயர் அதிகாரி, இந்த புதிய நெறிமுறைகளால், சீனா தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெளிவாகக் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார். காரணம் தற்போதைக்கு, இந்தியா, சீனாவில் இருந்து தான் அதிக அளவில் மலிவு விலை இறக்குமதிகளை செய்து கொண்டு இருக்கிறது எனவும் சொல்லி இருக்கிறார்.
More From GoodReturns

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications