பிட்காயின், டோஜ்காயினில் வாரிக் குவிக்கும் சர்வதேச முதலீட்டாளர்கள்.. இந்தியர்களின் நிலை என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிரிப்டோகரன்சி முதலீடுகளில் இன்று ஒரு நாணயத்தின் இரு பக்கம் போன்று முக்கிய முதலீடுகளில் ஒன்றாக திகழும் பிட்காயின், டோஜ்காயின் முதலீடுகள், சர்வதேச அளவில் மிக பெரியளவில் பேசப்பட்டு வருகின்றன.

இது சர்வதேச சந்தையில் மிகுந்த வரவேற்பினை பெற்றாலும், இந்தியாவினை பொறுத்த வரையில் இன்று வரையில், முழுமையாக அங்கீகரிக்கப்படாத ஒரு முதலீடாகவே பார்க்கப்படுகிறது.

இதற்காக பல காரணங்கள் கூறப்பட்டாலும், சர்வதேச முதலீட்டாளர்கள் இன்று இரு முக்கிய முதலீடாக பிட்காயின் மற்றும் டோஜ்காயினை பார்க்கின்றனர்.

சர்வதேச முதலீட்டாளர்கள் ஆர்வம்

சர்வதேச முதலீட்டாளர்கள் ஆர்வம்

உலகின் பல்வேறு முதலீட்டு பிரபலங்கள், பெரும் முதலீட்டாளர்கள், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கூட, இந்த நாணயங்களை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளன. அதிலும் டோஜ்காயின் இந்த மாதத்தில் மட்டும் இது வரையில் 1000% அதிகமான லாபத்தினை கொடுத்துள்ளது. இதன் மூலம் பல சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்த்து வருகின்றது.

டோஜ் காயினுக்கு ஆதர்வு

டோஜ் காயினுக்கு ஆதர்வு

டெஸ்லாவின் எலான் மஸ்க், டல்லாஸ் மேவரிக்ஸின் உரிமையாளர் மார்க் கியூன் கிரிப்டோகரன்சிகள் மீதான நம்பிக்கையை தொடர்ந்து பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்கள் தவிர கிஷ் சிங்கர் ஜீன் சிம்மன்ஸ் மற்றும் உணவக நிறுவனர் கை ஃபியரி உள்ளிட்டோரும் டோஜ்காயினுக்கு தங்களது ஆதரவினை காட்டியுள்ளார். இதனால் சமீபத்திய நாட்களில் டோஜ்காயின் விலையானது உச்சம் தொட்டு வருகின்றது.

வஜீர்எக்ஸ் முடக்கம்

வஜீர்எக்ஸ் முடக்கம்

உலகமே கிரிப்டோகரன்சிகளுக்கு ஆதரவு கரம் காட்டி வரும் நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி வர்த்தக தளமான வஜீர்எக்ஸ் கடந்த வாரம் செயலிழந்தது. அந்த சமயத்தில் டோஜ்காயின் அதன் ஆல் டைம் உச்சத்தினை தொட்டது. இதனால் லாபத்தினை புக் செய்ய இயலவில்லை. தங்கள் பரிவர்த்தனையை முடிக்க இயலவில்லை என சமூக வலைதளங்களில் புகார்கள் குவிந்தன.

பிரச்சனைகளை தீர்ப்பது எளிதல்ல

பிரச்சனைகளை தீர்ப்பது எளிதல்ல

வஜீர்எக்ஸ் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும், கிரிப்டோகரன்சி பரிமாற்றம் செய்யும் தளமாகும். இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நிசால் ஷெட்டி பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்து வருவதாகவும் ட்விட்டரில் கூறியிருந்தார். எப்படியிருப்பினும் இந்த பிரச்சனைகளை தீர்ப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல, ஏனெனில் சமீபத்தில் கோயின்விட்ச் குபர் தனது பரிவர்த்தனைகளை நிறுத்தியது. ஏனெனில் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய முடியாது.

வாய்ப்புகள் கட்டுப்படுத்தப்படுகின்றன

வாய்ப்புகள் கட்டுப்படுத்தப்படுகின்றன

ஆக இங்கு ஏராளமான ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் உள்ளனர், ஆனால் சாத்தியமான வாய்ப்ப்புகளையும் முதலீட்டாளார்கள் இழக்கின்றனர். ஏனெனில் இங்கு முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இது மட்டும் அல்ல இன்னும் ஏராளமான சிக்கல்கள் உள்ளன. எப்படியிருப்பினும் இது சர்வதேச அளவில் பல முதலீட்டாளர்களை ஈர்த்து வரும் நிலையில், இந்தியாவிலும் கவனிக்கப்பட வேண்டும் என கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bitcoin and dogecoin are ruling the world but Indian investors being let down

Bitcoin and dogecoin updates.. Bitcoin and dogecoin are ruling the world but Indian investors being let down
Story first published: Tuesday, May 11, 2021, 20:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X