கொரோனா பாதிப்பால் உலக நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சி மோசமான நிலையை அடைந்த போது முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைப் பாதுகாக்கும் முயற்சியாகத் தங்கத்திலும், கச்சா எண்ணெய் சந்தையிலும் அதிகளவில் முதலீடு செய்தனர்.
ஆனால் உலகமும் முழுவதும் கொரோனா வேகமாகப் பரவிப் பல கோடி மக்கள் கொரோனாவால் பாதித்த நிலையில், கச்சா எண்ணெய் விலை அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்ட போது முதலீட்டாளர்கள் ப்ளூ சிப் பங்குகளிலும், கடன் சந்தையிலும் முதலீடு செய்தனர்.
இப்போது பங்குச்சந்தையும், பொருளாதாரமும் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் நாணய சந்தை கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் தற்போது அதிகளவில் கிரிப்டோகரன்சி-யில் அதிகளவிலான முதலீட்டைச் செய்து வருகின்றனர்.
லட்சுமி விலாஸ் வங்கி + DBS இணைப்பு திட்டம்.. முதலீட்டாளர்களுக்கு கைகொடுக்காது.. ஏன்?

அமெரிக்க டாலர்
சர்வதேச நாணய சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு ஏற்கனவே அதிகளவிலான சரிவை எதிர்கொண்ட நிலையில், கொரோனாவுக்கான மருந்து மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் போது டாலர் மதிப்பு 20 சதவீதம் வரையில் சரியும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.

கிரிப்டோகரன்சி முதலீடு
இந்தக் கணிப்பின் எதிரொலியாகக் கடந்த சில வாரங்களாகக் கிரிப்டோகரன்சி மீதான முதலீடு அதிகரித்து வருகிறது.
3 வருடங்களுக்கு முன்பு உலக நாடுகள் கிரிப்டோகரன்சி மீதான வர்த்தகத்திற்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், கிரிப்டோகரன்சி சந்தையின் முக்கிய வர்த்தகப் பொருளாக இருக்கும் பிட்காயின் மதிப்பு தாறுமாறாகக் குறைந்தது.

மாற்று நாணயம்
தற்போது நாணய சந்தையில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில் பிட்காயின் மாற்று நாணயமாக முதலீட்டாளர்கள் கருதி அதிகளவிலான முதலீடுகளைச் செய்து வருகின்றனர்.
இதன் எதிரொலியாகப் புதன்கிழமை வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு 4.8 சதவீதம் வளர்ச்சி அடைந்து 18,480 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. ஆனால் அடுத்த 20 நிமிடத்தில் 1000 டாலர் வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது. 2020ஆம் ஆண்டில் மட்டும் பிட்காயின் மதிப்பு இரட்டிப்பு வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

15,000 டாலர்
கடந்த 3 வருடத்தில் ஏற்படாத அதிகப்படியான வளர்ச்சியைப் பதிவு செய்து நவம்பர் மாதத்தில் பிட்காயின் மதிப்பு 15,000 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் மட்டும் பிட்காயின் மதிப்பு சுமார் 40 சதவீதம் வளர்ச்சி அடைந்து கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களையும், கிரிப்டோகரன்சி உற்பத்தியாளர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

இன்றைய விலை நிலவரம்
புதன் கிழமை அதிகளவிலான ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வரும் பிட்காயின் மதிப்பு அதிகப்படியாக 18,349 டாலர் வரையில் உயர்ந்து, 1000 டாலர் வரையில் சரிந்த அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் உயரத் துவங்கி 18,000 டாலரை தாண்டியுள்ளது.

இந்திய ரூபாய்
கிரிப்டோகரன்சி சந்தையின் முக்கிய வர்த்தக நாணயமான பிட்காயின் இன்றைய வர்த்தகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையி்ல் 18,000 டாலரை தாண்டி கலக்கி வரும் நிலையில் இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு பிட்காயின் மதிப்பு 13,47,817 ரூபாய்.

12 நாட்கள்
நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தின் முடிவில் 15,000 டாலராக இருந்த பிட்காயின் வெறும் 12 நாட்களில் 18,000 டாலரை தாண்டியுள்ளது டாலர் மதிப்பில் ஏற்படப் போகும் பாதிப்பின் எச்சரிக்கையாகவே உள்ளது.