கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன் பாதிப்பு மூலம் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் உலக நாடுகள் மத்தியில் குறிப்பாக டாப் 10 பெரும் பொருளாதார நாடுகள் அதிகளவிலான பாதிப்பைச் சந்தித்து வருகிறது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று துவங்கிய இடமாகக் கருதப்படும் சீனாவின் பொருளாதாரம் சிறப்பாக வளர்ச்சி அடைந்து வருகிறது எனச் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
உலகில் பிற நாடுகளை ஒப்பிடுகையில் சீனாவின் பொருளாதாரம் மிகவும் குறுகிய காலகட்டத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது எனச் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த வளர்ச்சிப் பாதை நிலையற்ற தன்மையிலும், அதிகளவிலான சரிவும் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதோடு 2021ல் உலகின் 2வது மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் சீனாவின் பொருளாதாரம் சுமார் 8 சதவீதம் அளவில் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி தற்போது பெருமளவு மக்களின் கைகளில் தான் உள்ளது. சீனாவில் தற்போது தனியார் நிறுவனங்களின் முதலீடு மிகவும் சிறப்பாக இருக்கும் வேளையில் மக்களின் நுகர்வு பொருத்து தான் சீனாவின் பொருளாதார வளர்ச்சி உள்ளது.
சமீபத்தில் சீனாவில் மக்களின் நுகர்வு அளவு நிலையான வளர்ச்சி அடைந்து வந்தாலும் கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டை இன்னமும் அடைய முடியாமல் தவித்து வருகிறது சீனா.
2020ல் சீனாவில் பல்வேறு காரணங்களுக்காக நிறுவனங்கள் நிதி நெருக்கடியாலும், வர்த்தகச் சரிவாலும் திவால் ஆனது இதனால் அதிகளவிலான மக்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளது மட்டும் அல்லாமல் பிற நிறுவனங்களின் சேவையை நம்பியிருந்த பலர் அதிகளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டனர். மேலும் சீனாவில் தற்போது அரசு நிறுவனங்கள் அதிகளவிலான நெருக்கடியில் இருப்பதாகக் கருத்து நிலவுகிறது.
மேலும் 2020ல் சீனா சரிவு பாதையில் இருந்து முழுமையாக மீண்டு 2 சதவீத வளர்ச்சியை அடைந்த நிலையில் 2021ல் 8 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என ஐஎம்எப் தெரிவித்துள்ளது.