சீனாவின் டார்கெட் இந்தியா மட்டுமில்லை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் உலக நாடுகள் மத்தியில் ஒரு பயத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை. நீண்ட காலத்திற்குப் பின் இந்தியா சீனா இடையே பிரச்சனை வெடித்துள்ளதால் அடுத்த என்ன நடக்கப்போகிறது என்ற பயம் அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் உள்ளது.

கடந்த மே 5ஆம் தேதி முதல் தொடர்ந்து இந்திய சீன எல்லையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வரும் நிலையில், சீனா இந்தியா உடன் மட்டும் அல்ல இன்னும் 4 நாடுகள் உடன் பல்வேறு விதிமானப் பிரச்சனைகளைச் செய்து வருகிறது..

கடந்த 2 வாரத்தில் மட்டும் இந்திய எல்லையில் சீன செய்ததைப் போல் ஹாங்காங், தைவான், வியட்நாம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிடமும் விரோத நடவடிக்கையைக் காட்டி வருகிறது.

ட்ரம்புக்கு ஷாக் கொடுக்கும் CNN போல் முடிவுகள்! சுட்டிக் காட்டும் Forbes!ட்ரம்புக்கு ஷாக் கொடுக்கும் CNN போல் முடிவுகள்! சுட்டிக் காட்டும் Forbes!

தைவான்

தைவான்

கடந்த ஒருவாரத்தில் மட்டும் சீன பைட்டர் விமானங்கள் 3 முறை தைவான் விமான எல்லைகளைக் கடந்தவுள்ளது. இதைத் தைவான் பாதுகாப்புத் துறை அமைச்சகமும் தெரிவித்துள்ளது. ஜூன் 16ஆம் தேதி கூடத் தைவான் எல்லையில் சீன விமானம் பறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜூந் 16ஆம் தேதி J-10 பைட்டர் விமானமும், ஜூன் 12ஆம் தேதி Y-8 ரக விமானமும், ஜூன் 9ஆம் தேதி Su-30 பைட்டர் விமானமும் தைவான் எல்லையைக் கடந்து தைவான் பாதுகாப்பு எச்சரிக்கைக்குப் பின் வெளியேறியுள்ளதாக இந்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

 

ஜப்பான்

ஜப்பான்

கடந்த மாதம் ஜப்பானின் Okinawa மற்றும் Miyako தீவுகளுக்கு மத்தியில் இருக்கும் Miyako Strait பகுதியில் சீனா விமானங்கள் எல்லையைக் கடந்து பறந்துள்ளது.

இதுமட்டும் அல்லாமல் கடந்த மாதம் சீன கடற்படை பெரிய அளவிலான போர் பயிற்சியும், live-fire trainingம் பெற்றுள்ளது. இதேபோல் சீன கடற்படை பல்வேறு போர் கப்பல்களை, ஆயுத கப்பல்களைச் சீன கடல் எல்லையில் தயாராக வைத்துள்ளது.

 

வியட்நாம்

வியட்நாம்

சில வாரங்களுக்கு முன்பு Paracel தீவு அருகில் வியட்நாம் மீன் பிடி படகுகள் மீது சீன கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தீவு தென் சீன பகுதியில் உள்ளதால் இந்தச் சர்வதேச எல்லையையும் தற்போது சீன உரிமை கோறுவதாக வியட்நாம் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.

வியட்நாம் மீன் பிடி படகுகள் மீது சீன கடற்படை தாக்குதல் நடத்துவது இது முதல் முறை அல்ல என்றும், சீனாவின் இந்த நடவடிக்கை இரு நாடுகள் மத்தியில் பாதுகாப்பற்ற தன்மையை ஏற்படுத்துகிறது என்று வியட்நாம் தெரிவிக்கிறது.

 

ஹாங்காங்

ஹாங்காங்

சீனாவின் அண்டை நாடாந ஹாங்காங்-ல் சீன அரசு புதிய பாதுக்காப்பு விதியை அமல்படுத்த முயற்சி செய்கிறது. இதற்கு ஹாங்காங் மக்கள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இதை எப்படியாவது அமல்படுத்தியாக வேண்டும் எனச் சீன துடிக்கிறது.

இதனால் இரு நாடுகள் மத்தியிலும் பல்வேறு பிரச்சனை வெடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

அமெரிக்கா

அமெரிக்கா

இதேபோல் 2020 ஏப்ரல் மாதம் அமெரிக்கக் கடற்படை கப்பலும், சீனாவின் கடற்படை கப்பலும் தென் சீன கடலில் (South China Sea) 100 மீட்டல் இடைவெளியில் சந்தித்துக்கொண்டது.

இதன் பின்பு ஜூன் 15ஆம் தேதி அமெரிக்கா, ஐநா சபையில் தென் சீன கடலில் சீன கடற்படை சர்வதேச விதிகளைப் பின்பற்றுவதில்லை குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

 

50 வருட மோசம்

50 வருட மோசம்

சீனாவின் இந்த நடவடிக்கை அனைத்தும், பெய்ஜிங்-ல் தற்போது துவங்கியுள்ள கொரோனாவின் 2வது தொற்றுப் பாதிப்பை திசை திருப்ப செய்யப்படுபவை எனக் கூறப்படுகிறது.

அதுமட்டும் அல்லாமல் கடந்த 50 வருடத்தில் இல்லாத அளவிற்குச் சீனாவில் தற்போது பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கும் அளவீடு குறைந்துள்ளது. இதை எப்படிக் கையாளுவது எனத் தெரியாமலும், திசை திருப்பவுமே சீனா அண்டை நாடுகளிடம் பிரச்சனை செய்திகிறது எனக் கருத்து நிலவுகிறது.

 

கல்வான் பள்ளத்தாக்கு

கல்வான் பள்ளத்தாக்கு

1962 ஆம் ஆண்டுக்கு பிறகு கல்வான் பள்ளத்தாக்கு பகுதி மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கிழக்கு லடாக் பகுதியில் அமைந்துள்ள கல்வான் ஆறு கடல் மட்டத்தில் இருந்து 4,350 மீட்டர் உயரத்தில் உள்ளது. சீனாவின் தெற்கு சிஞ்சியாங் பகுதியில் இருந்து காஷ்மீர் வரை நீளும் நதி கல்வான் நதியாகும். இந்த நதி சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பயணித்துச் சையோக் நதியுடன் கலக்கிறது.

இந்த நதி குறித்து 1899 ஆம் ஆண்டு முதன்முதலில் ஆய்வு செய்து கண்டறிந்த லே பகுதியைச் சேர்ந்த குலாம் ரசூல் கல்வான் என்பவரது பெயராலேயே இந்த நதி அழைக்கப்படுகிறது. இந்த நதியின் பள்ளத்தாக்கு காஷ்மீரின் வடமேற்கே அக்சாய் சின் பகுதியில் அமைந்துள்ளது.

 

1962 போர்

1962 போர்

1962 ஆம் ஆண்டு இந்தியாவுடன் நடைபெற்ற போரில், இப்பகுதியை சீனா தன்வசப்படுத்திக் கொண்டது. இந்தப் பகுதியில் எல்லை தெளிவாக வரையறுக்கப்படாததால், இரு நாட்டு படையினரும் அப்பகுதிக்கு உரிமை கோரி வந்தனர். அதன்பிறகு எப்போதும் அந்தப் பகுதியில் தற்போது ஏற்பட்டதைப் போன்ற பதற்றம் ஏற்பட்டதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China’s aggression isn’t only aimed at India

hina’s hostile activities over the last month haven’t not only been against India. Countries like Hong Kong, Taiwan, Vietnam and Japan have also had to bear the brunt of its aggression.Experts speculate that this could be to distract from the second wave coronavirus in the country or a tactic for China to bide for more time to take on the US.The India-China faceoff in the Galwan valley has triggered panic across the globe.
Story first published: Thursday, June 18, 2020, 7:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X